Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

முன்னோர்கள் சாபம், கர்மா வினைகள் நீங்க !!!

$
0
0

இன்று  துவாதசி திதி

  முன்னோர்கள் சாபம், கர்மா வினைகள் நீங்க  வைக்கும்  துவாதசி திதி

மஹா கால பைரவ உலகம் என்று ஒரு உலகம் இருக்கின்றது. இந்த உலகத்தில் வசித்து வரும் கால தேவனாகிய மஹா கால பைரவப் பெருமானின் அருளால் நமக்கு ஜோதிடத்தின் அடிப்படையான நட்சத்திரங்கள், கிரகங்கள், ராசிகளை பிரபஞ்ச வரலாற்றில் போதித்தார்.

இவர் வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில்  அண்ணாமலை கிரிவலம் வருகின்றார்; துவாதசி திதி அன்று அண்ணாமலையில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாகவும், மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும், இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 18 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அதன் பிறகு,இரவில் கிரிவலம் செல்ல வேண்டும். கிரிவலத்தின் போது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும். கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர், அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;

இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும். பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். மூலஸ்தானத்தை நெருங்கும் போது, இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும். வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது. அவரிடம் மனப்பூர்வமாக தாம் முந்தைய தினத்தற்கு துவாதசி அன்னதானம் செய்துவிட்டோம்.

 அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகே, மீண்டும் வரிசையில் இணைந்து அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும். பிறகு உண்ணாமுலையம்மன் என்ற அபிதகுஜலாம்பாளைத் தரிசிக்க வேண்டும். பிறகு,நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும். இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும். அதன் பிறகு கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு, மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும். இத்துடன் அண்ணாமலை துவாதசி திதி அன்னதானமும், கிரிவலமும் நிறைவடைகின்றது.

நாம் பிறந்த நாள் முதல் நமது வாழ்நாளின் இறுதி நாள் வரை காசியில் ஒரு கோடி மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ,அதை விடவும் அதிகமான புண்ணியம் முழுத் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கின்றது.

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்;

சிலருக்கு ராகுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்; இன்னும் சிலருக்கு கேதுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;இன்னும் சிலருக்கு ராகுவுடன் செவ்வாயும்,கேதுவுடன் சனியும் அல்லது ராகுவுடன் சனியும்,கேதுவுடன் செவ்வாயும் இணைந்திருக்கும்;

இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இவர்களது முன்னோர்கள் வறட்டு கவுரவத்தினாலோ அல்லது சொத்துக்காகவோ அல்லது திமிரான செயல்பாடுகளாலோ பல ஆண்டுகளாக சண்டையிட்டுள்ளார்கள்; வீட்டுப் பெண்கள் இந்த சண்டை முடிவுக்கு வராதா? என்று பல நாட்களாக கதறி அழுதுள்ளார்கள் என்று அர்த்தம்; இதைச் சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இதைச் செய்ய விரும்பி, ஆனால் வருமானம் ஒத்துழைக்காதவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை மாதம் தோறும் குலதெய்வம் கோவிலுக்கு படையலிட அரிசி வாங்கித் தரவேண்டும்;

அடுத்த ஒராண்டுக்கான துவாதசி திதி நாட்கள்

5.6.2017 ஞாயிறு

20.7.2017 வியாழன்

4.8.2017 வெள்ளி

2.10.2017 திங்கள்

16.10.2017 திங்கள்

30.11.2017 வியாழன்

14.12.2017 வியாழன்

13.1.2018 சனி

28.1.2018 ஞாயிறு

12.2.2018 திங்கள்

28.3.2018 புதன்

மேலே குறிப்பிட்டிருக்கும் கிரக அமைப்புகளில் பிறந்தவர்கள் மட்டும் தான் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இந்த நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம். தமது மகன்,மகள் மற்றும் அடுத்த 7 தலைமுறையினர் சீரும் சிறப்புமாகவும்,நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்.

The post முன்னோர்கள் சாபம், கர்மா வினைகள் நீங்க !!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


விரும்பிய காரியங்கள் நிறைவேற வேண்டுமா?

$
0
0

விரும்பிய காரியங்கள் நிறைவேற ஹோமங்களும் அதன் பயன்களும்

தோஷ பரிகாரங்களில் மிகவும் சிறந்தவையாக விளங்குபவை ஹோமங்கள் ஆகும். புராண காலத்தில் தெய்வங்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், அரசர்களும் தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய ஹோமங்கள் செய்து தமது இஷ்ட காரியங்கள் மற்றும் வரங்களையும் பெற்றுள்ளனர்.

கண்திருஷ்டி ஹோமம் :

திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.

கணபதி ஹோமம் :

தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

சண்டி ஹோமம் :

பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

தில ஹோமம் :

சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.

நவகிரஹ ஹோமம் :

கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் :

சகல பயங்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.

சுதர்ஸன ஹோமம் :

ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் :

ஆண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

மிருத்யுஞ்ச ஹோமம் :

மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.

சுயம்வர கலா பார்வதி ஹோமம் :

பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

லக்ஷ்மி குபேர ஹோமம் :

செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.

 புத்திர கமோஷ்டி ஹோமம் :

புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் :

எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

கால சர்ப்ப ஹோமம் :

திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

ருத்ர ஹோமம் :

ஆயுள் விருத்தி உண்டாகும்.

The post விரும்பிய காரியங்கள் நிறைவேற வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ராகு, கேது, செவ்வாய், களத்திர தோஷம் நீக்கும் பிரதோஷம்

$
0
0

நாளை [06.06.2017] பிரதோஷம்,

சிற்றரசனான வானகோவராயனை, சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குக் கப்பம் கட்ட நிர்பந்தித்து வந்தனர். ஆனால் வானகோவராயன் அதற்கு உடன்படவில்லை. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத வானகோவராயனின் மீது ஆத்திரமடைந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின் படையோடு மகதம் நோக்கி வந்தனர். இதை அறிந்த வானகோவராயன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சொர்ண புரீஸ்வரரை வணங்கிவிட்டு வீரத்துடன் போருக்குக் கிளம்பினான்.

 ஈசனின் பூரண அருளைப் பெற்று போர் முரசு கொட்டி வந்த வானகோவ ராயனைப் பார்த்த மாத்திரத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது அரச முடிகளை கழற்றி வைத்துவிட்டு போர் நடவடிக்கையை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். இதனாலேயே அந்த இடம் மும்முடி என்றழைக்கப்பட்ட தோடு, சொர்ண புரீஸ்வரரின் அருளுக்கும் வானகோவராயனின் பக்திக்கும் சான்றாகவும் இருந்து வருகிறது.

ஷோடசலிங்கத்தின் சிறப்பு

 இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார். நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

 ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டு மின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக் கபட்டுள்ளதால், உலகையேகட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

நிறம் மாறும் அபிஷேகப் பால்

 பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ண புரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும். இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் உள்ளிட்டஅபிஷேக பொருட்கள் நீல நிறமாக மாறி வழிந்தோடுவது குறிப்பிடத்தக்கது.

தேன் அபிஷேக மகிமை

 ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலங்கள் மற்றும் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தேனபிஷேகம் செய்து வழிபட உகந்த நாட்களாகும். நீண்ட காலமாக திருமணமாகாதவர் கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபடுவதுடன், தொடர்ந்து 16 பிரதோஷ தினங்களில் வந்திருந்து ஈசனைத் தரிசித்து வேண்டிக் கொண்டால் திருமணத் தடை நீங்கும். மேலும் ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் முதலான தோஷங்கள் கொண்டவர்களும், பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும், தீராத மனக்கவலை கொண்டவர்களும் சொர்ணபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து, பிரதோஷ காலங்களில் தொடர்ந்து வழிபட்டால் பிரச்னைகள் யாவும் அடியோடு நீங்கும் என்பது நம்பிக்கை.

தோஷம் உள்ளவர்கள், ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தரப்பட்ட தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும். இந்தத் தலத்தில் சிவபெருமான் முனிவருக்கு காட்சியளித்தது பிரதோஷ வேளை என்பதால், இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷ நாட்கள் மட்டுமின்றி பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் திங்கட் கிழமைகளில் வரும் சோமவார பூஜை, தமிழ் வருடப்பிறப்பு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, கார்த்திகை தீபம் போன்றவையும் இங்கு வெகு விசேஷமாக நடைபெறுகின்றன.

காகபுஜண்டர் வழிபாடு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார்.அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயில் ஈசானத்தில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதியை 16 முறை வலம் வந்து, 2 முதல் 16 தேங்காய் வரை உடைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவ தோஷங்கள், தீராத மனக் கவலைகள் நீங்கி சிவ புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை. அவர் அருளிய நாடிச் சுவடியில் இக்கோயிலின் கருவறை மிக உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபம், எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இறைவனின் கருவறையில் அமைந்துள்ள தீபம் துடிப்போடுதான் எரிந்து கொண்டிருக்கிறது.

The post ராகு, கேது, செவ்வாய், களத்திர தோஷம் நீக்கும் பிரதோஷம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 06-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 06-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

The post Daily Raasi Palan 06-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஞானம், தர்மம், அர்த்தம், மோட்சம் பெற்றிட !!!

$
0
0

உயர்ந்த ஞானம், தர்மம், அர்த்தம், மோட்சம் பெற்றிட

“தசமஹா வித்யா தேவியர் வழிபாடு!”

“காளீ தாரா வித்யா ஷாடசீ புவனேச்வரீ

பைரவீச் சின்னமஸ்தா ச வித்யா தூமாவதீ ததா

மாதங்கீ ஸித்தவித்யா ச கவிதா பகளாமுகி

ஏதா தச மஹாவித்யா ஸர்வ தந்த்ரேஷு கோபிதா”

(ச்யாமா ரகஸ்யம்)

 “தச மஹா வித்யா தேவியர்”

   படைக்கும் கடவுளான பிரம்மாவின் 10 புத்திரர்களுள் ஒருவன் தட்சன். அவன் ப்ரஜாபதி ஆவான். தட்சனின் மகள் சதி தேவி (தாட்சாயணி). அவளது கணவன் சிவன். தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து, விண்ணுலகிலுள்ள தேவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் படி அழைப்பு விடுத்தான். 27 நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்ட, தனது 27 புதல்வியரையும், அவர்களது கணவன் சந்திரனுக்கும் அழைப்பு விடுத்தான்.

 சதி தேவியையும், மருமகன் சிவனையும் அழைக்கவில்லை. தந்தையால் அழைக்கப்படாவிட்டாலும், தந்தை நடத்தப் போகவிருக்கும் மிகப்பெரிய யாகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலிலும், சகோதரிகளைக் காண விரும்பியும், முக்கியமாகத் தனது கணவருக்குச் சேர வேண்டிய அவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், தேவர்கள் தங்களது மனைவியருடன் அலங்கரிக்கப்பட்ட வானவூர்தியில், பறந்து செல்வதையும் கண்டு பரவசமடைந்து, கணவன் சிவனிடம் அனுமதி கேட்டு நின்றாள்.

  அழையாத விருந்தாளியாகச் சென்று தனது அன்பு மனைவி, அவமானப்படக்கூடாது என்று எண்ணியதால் சிவன் அனுமதி அளிக்கவில்லை. ஒரு சாதாரண கணவனைப் போல் ஆணாதிக்கத்துடன் அனுமதி தர மறுத்த சிவனின் மீதும், ப்ரஜாபதியாக மட்டும் நடந்து கொண்டு, தந்தை என்ற முறையில் அழைப்பு விடுக்காத தட்சன் மீதும் மிகுந்த கோபம் கொண்டு சதி தேவி, தனது சக்தியைக் (ஆதிக்கத்தையும், கோபத்தையும்) காட்ட விரும்பினாள்.

 கண்ணுக்குத் தீட்டும் மை போன்றும், இருட்டினைப் போன்றும் கரிய நிறமுடைய காளியாகத் தோற்றமெடுத்து பயங்கரமான பற்களைக் காட்டி, இடிமுழக்கம் போல் பயங்கரமான சப்தத்துடன் சிரிக்கவும் ஆரம்பித்தாள். தனது மூன்று கண்களையும் ஒருமுறை திறந்து பார்த்த சிவன் பயத்தில் உறைந்தார்.

  இரத்தம் சொட்டும் தொங்கிய நாக்கினையும், நிலைகுத்தி நிற்கும் முடியினையும், நான்கு கைகளையும், கோபமான கண்களையும், வியர்வையில் நனைந்த உடம்பினையும் கொண்ட அம்பிகையைக் கண்டு மிகவும் பயந்தார். மண்டை ஓடுகளைக் கழுத்தில் மாலையாகக் கொண்டு, தலையில் பிரகாசமான கிரீடத்தையும், 10 கோடி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய பிறைநிலாவை நெற்றியில் சூடியிருந்ததையும் கண்டு இங்குமங்கும் ஓடினார். தேவியோ இடி போல் தொடர்ந்து பயங்கரமாக ஆர்ப்பரித்து சிரிக்கவே, சிவன் எல்லாத் திசைகளிலும் ஓடினார். திரும்பிய 10 திசைகளிலும், தேவியின் 10 விதமான மாறுபட்ட பயங்கரமான தோற்றத்தைக் கண்டார். இந்தப் பத்து தேவியர் தோற்றமே தச மஹா வித்யா தேவியர் தோற்றமாகும்.

  சிவனுக்கு நேர் எதிரில் தேவி எடுத்த முதல் தோற்றமே காளி ஆகும். சிவனுக்கு நேர் எதிரில் காளியும், அவருக்கு மேல் தாராவும், வலது பக்கம் ஒல்லியான, சின்னமஸ்தாவும், இடது பக்கம் புவனேஸ்வரியும், பின்பக்கம் எதிரிகளை அழிப்பதில் வல்லவளான பலளாமுகியும், கீழே பைரவியும், தென்கிழக்கே விதவையும், முதியவளுமான தோற்றத்தில் தூமாவதியும், தென்மேற்கே அழகிய திரிபுரசுந்தரியும், வடமேற்கில் மாதங்கியும், வடகிழக்கில் என்றும் பதினாறான ÷ஷாடசீயும் தோற்றம் கொண்டு நின்றனர்.

 இந்த 10 தேவியரும் தந்த்ரா சாஸ்த்திரத்தில் வழிபாட்டிற்குரிய உபாஸனா மூர்த்தங்களாவர். தேவியின் 90 கோடி தோற்றங்களில் தச மஹா வித்யா தேவியர் தோற்றமே முதன்மையானதும், புகழ் பெற்றதுமாகும். தேவியின் இந்தப் பயங்கரமான தோற்றங்களைக் கண்ட சிவன் வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, யாகத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்தார்.

  தட்சன் யாகசாலையில் கூடியிருந்த அனைவரின் முன் சிவனின் மஹிமையை அறியாமல், அவரது புறத்தோற்றத்தை இழிவாகக் கூறி அவமதித்தான். கணவனின் மனப்பூர்வமான சம்மதமின்றி வந்ததோடு, தேவலோகமே கூடியிருந்த யாக சாலையில் தன்னால் தனது கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தினால் சதி மிகவும் வருந்தினாள். தட்சனால் தான் பெற்ற இந்த உடம்பை அழிக்க எண்ணி தனது யோகசக்தியினால் அக்னியை எழுப்பி, அதில் புகுந்து தனது உயிரை மாய்த்தாள்.

  நந்தி தேவனால் இதைக் கேள்வியுற்ற சிவன் தனது நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரனைத் தோற்றுவித்து தட்சன் யாகத்தை அழிக்கச் செய்தார். அவரும் யாகசாலை வந்து, நெருப்பில் தன்னை மாய்த்துக் கொண்ட தனது அன்பு மனைவியின் உடலைப் பிரிய மனமில்லாமல் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.

51 சக்தி பீடங்கள்

  சிவனின் கோபத்தினால் ஏற்படப்போகும் பேராபத்திலிருந்து இவ்வுலகினைக் காக்க, விஷ்ணு, சிவனிடமிருந்து தான் பெற்ற சுதர்சனசக்ரம் என்ற சக்ராயுதத்தால், அம்பிகையின் உடலை 51 துண்டுகளாகத் துண்டித்து அவை பூமியில் இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிலுள்ள முக்கியமான 51 இடங்களில் விழச் செய்தார்.

  தேவியின் அங்கங்கள் விழுந்த 51 இடங்களும், சக்தி வாய்ந்த பீடங்களாகவும், புண்ணிய க்ஷேத்திர ஸ்தலங்களுமாயின. பைரவரின் காவலுடன் அம்பிகையின் கோயில்கள் 51 சக்தி பீடங்களில் தோன்றி, தேவியின் வழிபாட்டின் மூலம், சதியின் நினைவு நிலை பெற்றது.

  தச மஹா வித்யா தேவியர் தோற்றத்தில் ஆரம்பமாகிய தட்சன் யாகம், 51 சக்தி பீடங்கள் தோன்றக் காரணமானதில் முடிவடைந்தது. இந்த தச மஹா வித்யா தோற்றம் மிகவும் பழமையானதாகும். மஹா விஷ்ணு தசாவதாரம் எடுத்த போது தசாவதார காரியங்கள் நிறைவேற உதவியர்கள் தச மஹா வித்யைகளே.

காளி – கிருஷ்ண அவதாரம்

தாரா – ராம அவதாரம்

ஷோடசீ – கல்கி அவதாரம்

புவனேஸ்வரி – வராஹ அவதாரம்

திரிபுரபைரவி – நரஸிம்ம அவதாரம்

சின்னமஸ்தா – பரசுராம அவதாரம்

தூமாவதி – வாமன அவதாரம்

பகளாமுகி – கூர்ம அவதாரம்

மாதங்கி – பலராம அவதாரம்

கமலா – மச்ச அவதாரம்

என்று அந்தந்த அவதாரங்களுக்கு உரிய சக்தியை வழங்கியவர் தச மஹா தேவியர்களாவர்.

  உண்மையான பக்தியுடன் தச மஹா வித்யா தேவியரை வழிபடும் சாதகர்கள், உயர்ந்த ஞானத்தையும், தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்.

 அதற்கும் மேலாக, மாயா ஜாலம் போன்ற மாரணம், உச்சாடனம், க்ஷோபனம், மோஹனம், த்ராவனம், ஸ்தம்பனம், வித்வேஷனம் என்ற மஹாசக்திகளையும் அடைவர்.

தச மஹா வித்யா தேவியர் ஒவ்வொருவருக்கும், அஸ்ஸாமில் காமாக்யா என்னுமிடத்தில் தனித்தனியே கோயில்கள் உள்ளன.

சக்தியை வழிபடும் சாக்தர்களுக்கு காமாக்யா ஒரு மிகச் சிறந்த புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.

The post ஞானம், தர்மம், அர்த்தம், மோட்சம் பெற்றிட !!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

முன் ஜென்ம பாவங்கள் விலக வேண்டுமா?

$
0
0

  தோஷங்களை நீக்கும் நாளே பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிவபெருமானையும், நந்தியையும் வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை. சிவபெருமானை தேவர்கள் வழிபடுவதற்கு என்று ஒரு காலம் உண்டு. அதே போல மனிதர்கள் சிவனை வழிபடுவதற்காக அமையப்பெற்றதே பிரதோஷ காலம் ஆகும். இதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உரியது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களின் வழிபாட்டுக்குரியது என்கிறது புராணங் கள்.

  தேய்பிறை பிரதோஷங்கள் அனைத்தும் சிறப்பு மிக்கதாகும். பவுர்ணமிக்கு பிறகான தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக் கிறோம். அதே போலவே தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருப்பது நம்மவர்களின் வழக்கம். தேய்பிறையில் வரக் கூடிய திரயோதசி திதியைத்தான் ‘பிரதோஷம்’ என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சைவ சமயத்தைப் பொறுத்தவரை, பிரதோஷம் என்பது முக்கியமான விரதம் ஆகும்.

  பிற நாட்களில் சிவபெருமானை மட்டும் வணங்குவதே சிறப்புக்குரியது. ஆனால் பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவனோடு, நந்தியும் சேர்ந்து காட்சி தந்து அருள்பாலிப்பார். நந்தி பகவான் அந்த பிரதோஷ கால நேரத்தில் தன்னுடைய தவத்தை துறந்து விட்டு மக்களுக்காக வேண்டியதை நிறைவேற்றக்கூடியவர். அதனால்தான் பிரதோஷ நாள் அன்று, நந்தியின் காதில் சிலர் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற ரகசியத்தைச் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

  பிரதோஷ தினத்தில் எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்து விரதம் மேற்கொள்ள வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பிரதோஷ காலம் வரை, அதாவது மாலை 6 மணி வரை பிரதோஷ வழிபாட்டை முடித்து விட்டு உணவு உட்கொள்ளலாம். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால், நமது உடல் நலம் பெறுகிறது. அது ஒரு அற்புதமான வரத்தை வழங்கும் நாளாகும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. சிறப்பு மிகுந்த அந்த திரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு போன்றவை நீங்கும். உடல் நிலை, மனநிலை சீராகும். மன அழுத்தம் குறையும்.

  பிரதோஷ தினத்தன்று, சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் கறந்த பசும் பால் கொடுத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுப்பது விசேஷம். அது தவிர இளநீர் வழங்கியும் ஈசனை வழிபடலாம். சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும்.

  இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை, பசும்பால், இளநீர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து வழி படுங்கள். இந்தப் பொருட்களை விட, தும்பைப் பூ மாலை சூட்டி, சிவபெருமானை வழிபடுவது சகல தோஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

The post முன் ஜென்ம பாவங்கள் விலக வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

புத்திர பாக்கியம், பல பேறுகள் கிட்டும் வைகாசி விசாகம்

$
0
0

நாளை 07 / 06 / 17  புதன் கிழமை வைகாசி விசாகம் –

சிறப்புகள் வாய்ந்த வைகாசி விசாகம்

   தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச் சிறப்புடையதுதான். இவற்றுள் வைகாசி மாதத்தினை மாதவ மாதம் என்பர். இம்மாதத்தில் புனித நீராடி மகா விஷ்ணுவை துளசியால் பூஜை செய்தால் பேறுகள் பல பெறலாம். பிரகலாதனுக்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த தினம் வைகாசி சுக்ல சதுர்த்தி.

  புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றது வைகாசி விசாக பௌர்ணமியில். திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங் கியதும் வைகாசி விசாகத்தில்தான். விசாகம் ஞானச் சிறப்புக்குரிய சிறந்த நட்சத்திரம்.

   தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமான் அவதரித்தது விசாக நட்சத்திரத்தில்தான். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளை உமையவள் ஒரே குழந்தையாக சேர்த்த நாள் வைகாசி விசாகம். விசாகத்தன்று முருகனின் அனைத்து திருத்தலங்களும் விழாக்கோலம் பூணும். இந்நாளில் விரதம் மேற்கொண்டு முருகன் ஆலயம் சென்று வழிபட்டால் புத்திர பாக்கியம் உள்ளிட்ட பல பேறுகள் கிட்டும். வைகாசி விசாகத்தன்று பிறக்கும் குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்குவர் என்பர்.

 வைகாசி விசாகம் முருகனுக்கு மட்டுமின்றி சிவனுக்கும் உகந்த நாள்தான். சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாககுண்டம் அமைத்து வழிபட வேண்டும். சிவனுக்கு நடைபெறும் பல்வேறு அபிஷேகங்களில் சந்தனாபிஷேகம் செய்வதைத் தரிசித்தால் மகாலட்சுமி யின் அருள் கிட்டும்.

 பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர் மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்தால் பாவங்கள் அகலும், புண்ணி யங்கள் பெருகும். அம்மன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரௌபதி அம்மன், காளியம் மன் கோவில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும்.

 “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனப் பாடிய வள்ளலார் வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவியதும் வைகாசி விசாக தினத்தில்தான். அதுமட்டுமின்றி கும்பகோணத்தில் கருட சேவை, காஞ்சி வரதர் ஆலய பிரம்மோற்சவம், குடந்தை ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தவாரி என எல்லா விழாக்களும் இந்த வைகாசி விசாகத்தன்றுதான் நடைபெறும்.

  திருவானைக் கோவில் ஜம்புகேஸ் வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தன்று ஏக வசந்தம் நடைபெறும். அன்று அன்னாபிஷேக மும் பால் மாங்காய் நிவேதனமும் செய்வார்கள்.

The post புத்திர பாக்கியம், பல பேறுகள் கிட்டும் வைகாசி விசாகம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

அனைத்து நலமும் அளிக்கும் பிரதோஷ வழிபாடு

$
0
0

அனைத்து நலமும் அளிக்கும் பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்

பிரதோஷ வழிபாடு தோன்றிய வரலாறு

  அகிலாண்டேஸ்வரி ஒருமுறை தேவலோக கன்னிகை ஒருத்திக்கு, அவளது நடனத்தை மெச்சும் வண்ணம் தனது கழுத்தில் இருந்த மலர் மாலையை பரிசாக தர, கன்னிகையோ அதனை எதிரில் வந்து கொண்டிருந்த துர்வாச முனிவரிடம் கொடுத்து சென்றாள்.

 தேவலோகம் சென்ற துர்வாசர், அம் மாலையை இந்திரனுக்கு பரிசளிக்க, மாலயின் மகிமையை அறியாத இந்திரன். அம் மாலையை தனது யானையிடம் தர, யானை மாலையை தனது கால்களால் மிதித்து சிதைத்தது. கோபத்திற்கு பெயர் பெற்றவராயிற்றே துர்வாசர். இந்திரனையும், தேவர்களையும்  ஒரு சேர சபித்தார். சாப விமோஷனம் பெற வேண்டி, தேவரும், இந்திரனும் பரந்தாமனை வேண்டினர். மன்ம் இளகிய பரந்தாமனும், திருப்பாற்கடலை கடைந்து, அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்துமாறு கூறினார்.

  மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, பாம்பின் தலைப் பகுதியை அசுரரும் வால் பகுதியை தேவரும் பிடித்து கடைய தொடங்கினர். மலை சாய்ந்தது. உடனே, மஹாவிஷ்ணு “கூர்ம அவதாரம் ” எடுத்து மலையை தாங்கி பிடித்தார். அன்று 10 வது திதியான தசமி திதியாகும். மெலும் கடையும் பொழுது, வாசுகி வலி தாங்காமல் விஷம் கக்க, அப்பொழுது கடலிலும் நஞ்சு தோன்ற இரண்டும் சேர்ந்து “ஆலகாலம் ” என்ற கடுமையான விஷமானது.

  இதைக் கண்ட வானவர் அஞ்சி நடுங்க, திருமாலும் நான்முகனும் அவர்களை கயிலை சென்று பரமனிடன் தஞ்சமடையுமாறு சொன்னார்கள். வானவரும் அவ்வாறே செய்ய, கயிலை நாதன், தனது தொண்டனான சுந்தரனை அழைத்து அந்த ஆலகால விஷத்தை எடுத்து வரச் சொன்னார். யாராலும் அணுக முடியாத அந்த விஷத்தை சுந்தரன் நாவல் பழம் போல் உருட்டி எடுத்து வர, முக்கண்ணன் அதனை, எல்லோரையும் காக்கும் பொருட்டு தனது வாயில் இட, பரமன் உண்டால் பெரும் கேடு விழையுமே என அஞ்சிய உமையாள் பரமனின் கண்டத்தில் தனது கை கொண்டு தடுக்க, விஷமானது சிவனின் கண்டத்திலேயே தங்கி சிவனாரது கழுத்து நீல நிறமானது. பெருமானும் “நீலகண்டரானார்”. இது நடந்தது ஏகாதசி அன்று மாலை பொழுதில். பின்னர் தேவர் சிவனின் கூற்றுப்படி பாற்கடலை மீண்டும் கடைந்தனர். மறுநாளான துவாதசி திதியன்று பாற்கடலில் அமிர்தம் தோன்ற தேவர்கள் அதனை உண்டு சாகா வரத்தை திரும்ப பெற்றனர்.

  ஆனால், சிவனை மறந்தனர். பின்னர், பிரம்ம தேவர், தேவர்களின் குற்றத்தை உணர்த்த, தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலை நாதனை அடைந்து மன்னித்தருள வேண்டினர். சிவ பெருமானும், மனம் கனிந்து தனக்கு முன்னால் இருந்த ரிஷப வாகனத்தின் இரு கொம்புகளுக்கு இடையில், அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை வணங்கினர். இது நடந்தது திரயோதசி திதியன்று மாலை வேளையில்.

 இதுவே பிரதோஷ காலம் என வழிபடப்படுகிறது. ( ஒவ்வொரு திரயோதசி திதியன்றும் மாலை வேளை 4:30 முதல் 06:00 வரை) பிரதோஷ வேளையாகக் கொண்டு சிவ பெருமானுக்கான சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு சிவாலயங்களிலும் நடைபெறும். பிரதோஷ பூஜை சிவ பெருமானுக்கு மட்டுமே உரிய பூஜை.

 சிவ பெருமனை விஷ்ணு, பிரம்மன் முதலிய அனைத்து தெய்வங்களும் வழிபடும் நேரம். எனவே, இக் காலங்களில் வேறு எந்த கடவுளருக்கும் பூஜைகள் நடைபெறாது. சிவாலயங்களில் உள்ள மற்ற கடவுளரின் நடைகள் சார்த்தப்பட்டிருக்கும் அல்லது திரையிடப்பட்டிருக்கும்.

 பிரதோஷ ஸ்தோத்திரம்

ஓம் பவாய நம

ஓம் ருத்ராய நம

ஓம் மிருடாய நம

ஓம் ஈசானாய நம

ஓம் சம்பவே நம

ஓம் சர்வாய நம

ஓம் ஸ்தாணவே நம

ஓம் உக்ராய நம

ஓம் பார்க்காய நம

ஓம் பரமேஸ்வராய நம

ஓம் மஹா தேவாய நம

நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பிரதோஷ புஜைகள் மூலவருக்கு செய்யப்படும்.மூலவருக்கு தீபாராதனை முடிவுற்ற பின்னர் நந்தி தேவரது காதுகளில் யாரும் கேட்கா வண்ணம் நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும். தேவர்களின் பெரும் குறைகளையே தீர்த்த நந்தி பெருமான் நமது குறைகளையும் நிச்சயம் சர்வேஸ்வரனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நிச்சயம். தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய, 13 வது வாரம் நமது குறைகள் தீர்ந்ததை உணரலாம். மூலவரின் தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகள் வழியே காண்பது சிறந்த பலனை கொடுக்கும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம். இத்தகைய தரிசனம் சகல பாவங்களையும் போக்கும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும்.

The post அனைத்து நலமும் அளிக்கும் பிரதோஷ வழிபாடு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Daily Raasi Palan 07-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 07-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

The post Daily Raasi Palan 07-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

நீண்ட ஆயுள், திருமணம், குழந்தை பேறு கிடைக்க….

$
0
0

நீண்ட ஆயுள், திருமணம், குழந்தை பேறு கிடைக்க வைகாசி விசாக விரதம்!

 அழகு என்பதற்கு மறு பெயர் முருகு. அழகு உள்ளவன் முருகன். அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். அதனால் முருகனை விசாகன் என்றும் விசாகப்பெருமாள் என்றும் அழைக்கின்றனர். வைகாசி விசாகத்தை முருகனின் பிறந்ததினமாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

 சிவபெருமானின் பெருமையை உணராத பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், தட்சனுக்கு பயந்து அவன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டனர். அதனால் அவர்கள் அனைவரும் பெரும் துன்பத்தில் துவளும் நிலை ஏற்பட்டது. ‘உங்கள் அம்சம் பொருந்திய சக்தியை தவிர வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது’ என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் அந்த துன்பம் தேவர்களுக்கு வந்து சேர்ந்தது.

 சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வெற்றி கொள்ளப்பட்டனர். தாங்கள் ஏவிய பணிகளை செய்ய பல பணியாளர்கள், தேவலோக வாழ்வு என்று இன்ப களிப்பில் மிதந்து வந்தவர்கள் அனைவரும் சூரபத்மனுக்கு ஏவல் புரியும்படி ஆயிற்று. இந்த ஏவல் பணி செய்யும் தேவர் குழாமில் பிரம்மதேவரும் கூட தப்பவில்லை. பல ஆண்டுகாலமாக சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் துன்பம் அனுபவித்து வந்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் இயற்றினர். அவரை சந்திக்க நந்தி எம்பெருமானிடம் அனுமதி கேட்டு கயிலையின் கதவு அருகே காத்திருந்தனர். எதற்கும் பலனில்லாமல் போயிற்று. செய்த பாவங்கள் அவர்களை துரத்தி வந்தன.

  இறுதியாக ‘சிவபெருமானை தரிசித்து தங்கள் துயரங்களை போக்கும்படி கூறி மன்றாடுவது எப்படி’ என்று விஷ்ணுவிடம் தேவர்கள் அனைவரும் சென்று கேட்டனர். அதற்கு அவர், ‘சிவபெருமானின் அம்சத்தில் உருவாகும் குமாரனால் தான் சூரபத்மனுக்கு அழிவு நேரும். இமயனிடம் வளர்ந்து வரும் பார்வதியின் மீது சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில், மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார். அதன்படி பிரம்மதேவர், மன்மதனை அழைத்து, சிவ பெருமான் மீது மன்மத அம்பு தொடுக்கும்படி கூறினார். நெருப்பே வடிவான ஈசனின் கோபத்தைப் பற்றி தெரிந் திருந்ததால், பயந்து போன மன்மதன் எவ்வளவோ மறுத்தும், பிரம்மதேவர் விடவில்லை. இறுதியில், ‘என் சாபத்திற்கு ஆளாவாய்!’ என்ற பிரம்மதேவரின் மிரட்டலுக்கு அடிபணிந்தான் மன்மதன்.

 நந்தி தேவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற மன்மதன், யோக நிலையில் இருந்த சிவனின் மீது காம பாணத்தை தொடுத்தான். அந்த அம்பு அவரை தொடும் முன்பாகவே, அனைத்தும் அறிந்த ஈசன் தன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிப் போய்விட்டனர். அவர்கள், ஈசனின் முன்போய் அவரை துதித்து பாடத்தொடங்கினர். சாந்த நிலைக்கு வந்த ஈசன், இமயமலை சென்று பார்வதியை மணம் முடித்து கயிலாயம் திரும்பினார்.

 அப்போது தேவர்கள் அனைவரும், ‘சர்வேஸ்வரா! இவ்வுலகில் தங்களுக்கு சமமானவர் எவரும் இல்லை. ஆயினும், சூரபத்ம அசுரர்களை அழிக்கும் வகையில், உங்களுக்கு நிகரான மைந்தனை தாங்கள் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினர். தேவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்க விரும்பாத சிவபெருமான், தனது பழமையான ஆறு திருமுகங்களையும் கொண்டார்.

 ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம் என்னும் அந்த ஆறு முகத்தில் இருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய அந்த தீப்பொறிகள் வெளிக் கொணர்ந்த சத்தமும், வெப்பமும் அம்பிகை, தேவர்கள் அனைவரையும் நடுநடுங்கச் செய்தன.

 பின்னர், அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில் விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு சிவபெரு மான் உத்தரவிட்டார். அவர்கள் அதனை கங்கையில் சேர்த்தனர். கங்கை அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்ப்பித்தது. அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம் கொண்ட குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை ஆறு தாமரை மலர்கள் தாங்கின. (ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் ஆகும்)

 விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம். ‘வானவர்களுக்கும், வையகத்தில் அனைவருக்கும் வாழ்வளிக்க வந்து விட்டான் ஆறுமுகப் பெருமான்‘ என்று எங்கும் ஒரே முழக்கம். சிவ பெருமான், அம்பிகையுடன் சரவணப் பொய்கைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்பிகை ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக்கி தன் கையில் அள்ளி, ஞானப்பால் பருகக் கொடுத்தார்.

 அன்னையின் கையில் தவழ்ந்து, ஞானப்பால் குடித்து தாகம் தணிந்ததும் ஆறுமுகக் கடவுள் சிரித்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது. தேவர் களுக்கு அந்த அழகு சிரிப்பில், சூரபத்மனின் அழிவு கண்கூடாக தெரிந்தது.

 ‘அருவமும் உருவமாகி அநாதியாய்ப்

 பலவா யொன்றாய்ப்

 பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்

 மேனியாகக்

 கருணைகூர் முகங்களாறும்

 கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே

 ஒரு தின முருகன் வந்தாங்

 குதித்தனன் உலகமுய்ய’

என முருகனின் தோற்றம் பற்றி கந்தபுராணம் கூறுகிறது.

  முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் ‘குகன்’ ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் ‘சரவணபவன்’ என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ‘ஆறுமுகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமான் பாலபருவத்தில் லீலைகள் பல செய்தார். பிரம்மாவுக்கு ‘ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தார். தந்தைக்கு பாடம் சொல்லி ‘தகப்பன் சாமி’ என்ற பெயரை பெற்றார்.

  தமிழ் மூதாட்டி அவ்வையிடம் நாவற்கனியை கொடுத்து சுட்ட பழம் வேண்டுமா?, சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு அறிவுச்சுடராய் திகழ்ந்தார். கனிக்காக உலகையே சுற்றி வந்து தண்டாயுதபாணியாய் பழனியில் தனித்து நின்றார். பின்னர் அவர் தேவர்களின் தேவசேனாதியாகி சூரனை வென்று தேவசேனாதிபதி எனப்பெயர் பெற்றார். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பேதமில்லாமைக்கு தெய்வயானை, வள்ளியை மணமுடித்து உலகிற்கு உணர்த்தினார்.

தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம்.

வைகாசி வழிபாடு

  விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

  வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.  வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

  வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

  முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.

The post நீண்ட ஆயுள், திருமணம், குழந்தை பேறு கிடைக்க…. appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

முருகன் ஆலயங்களில் இன்று வைகாசி விசாக திருவிழா!

$
0
0

இன்று முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கொண்டாட்டங்கள்

திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்துர் முதலான அறுபடை வீடுகளிலும் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று வைகாசி விசாக திருவிழா மிகவும் கோலாகலமாக மிகுந்த பக்தியுடன் நடைபெறுகிறது.

thiruparangundram-1-1556931337திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.

thiruchandur-3-3147431605அறுபடைக் கோவில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.மிக அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். இது திருச்சீரலைவாய் எனவும் முன்னர் அழைக்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோயில் சென்னையில் இருந்து ஏறத்தாள 600 கி.மீ தொலைவில் உள்ளது. 130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள்வரை பழமை கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

  புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. thiruchandur-2-1999896107சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது. இந்த சிவலிங்கம் கோவிலின் மூலஸ்தானத்திற்குப் பின்புறமுள்ள அறையில் ஐந்து லிங்கங்களாக இருக்கிறது. இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.

PALANI-1-336510850   குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான இக் கோயில் பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது .

   சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

  பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.ஆனால் இவை இரண்டுமே மூன்றாவது அறுபடை வீடாக கருதப்படுகின்றது.

PALANI-3-1445705983  பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.பழனி மலையிலே அமைந்துள்ளது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.

  இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது.

swamimalai-2-2295678698முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை.

இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று.

 thiruththanikai-gunrodal-1-2376772583முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

இத்தலத்தில் முருகப்பெருமான் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.

palamutir-solai-solai-malai-518358272

  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது.

   இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது.

thirumalai_muththukumaraswami-1-110472773அருள்மிகு திருமலைமுத்துக்குமாரசுவாமி திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பண்பொழி எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள திருமலை 500 அடி உயரமுடையது.

544 படிகள் ஏறி கோயிலை அடைய வேண்டும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும்.

விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன.

Arulmihu-subramanya-temple-chengam-vilvarani-thiruvannaamalai-5-2483220925தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வில்வாரணி ஊரில் அமைந்துள்ள சுமார் 500-1000  ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம், இங்கு மூலவரின் பெயர் சுப்பிரமணியர், சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

ஆடி கிருத்திகை மற்றும் இதர கிருத்திகை நாட்கள் இங்கு விழாக்கோலம் தான். பங்குனி உத்திரம் பத்து நாள் நடக்கிறது. ஐந்தாம் நாளில் முருகன் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் நாளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 16 லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி – திருவண்ணாமலை மாவட்டம்.

oothumalai-murugan-1-518147138ஊத்துமலை முருகன் கோயில் சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலையில் அமைந்துள்ளது. இத்தலம் சுமார் 1000 – 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகின்றது.

அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன.

kandhakottam-2-4043080978அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம்,சென்னை. சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம். பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது.

தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் பாடிய தலம் இது.

The post முருகன் ஆலயங்களில் இன்று வைகாசி விசாக திருவிழா! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

வழக்கிலிருந்து சிக்கிய நிரபராதிகள் விடுபட !

$
0
0

வழக்கிலிருந்து சிக்கிய நிரபராதிகள் விடுபட ! விசாகத்து நாயகனின் விதவிதமான கோலங்கள்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள கருநெல்லிநாதர் ஆலயத்தில் பழநி முருகப்பெருமானைப் போலவே தோற்றம் தரும் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.

வழக்குகளில் சிக்கிய நிரபராதிகளின் வாழ்விற்கு வழி காட்டி அவர்களுக்கு அருளும் முருகனை வழிவிடும் முருகன் எனும் பெயரில் ராமநாதபுரத்தில் தரிசிக்கலாம். அண்ணன் கணபதியுடன் கந்தன் கருவறையில் அருளும் தலம் இது.

கடலூரில் வெற்றிவேல் முருகன் எனும் திருப்பெயரில் முருகப்பெருமான் அருள்கிறார். மழலை வரம் வேண்டுவோர் மூன்று எலுமிச்சம்பழங்களை இவருக்கு படைத்து வேண்டிட அவர்களுக்கு மழலை வரம் கிட்டுகிறது. திருமணத்தடை உள்ளோர்கள் வெற்றிலைத் துடைப்பு எனும் முருகனுக்கு அபிஷேகம் செய்த நீரை வெற்றிலையில் தெளித்து முகத்தைத் துடைக்கும் பரிகாரத்தை செய்து தடை நீங்கப்பெறுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள வேளிமலையில் மூலவர் குமாரசுவாமியாகவும் உற்சவர் மணவாளகுமரனாகவும் அருள்புரிகின்றனர். வேடுவ குலத்து வள்ளியை முருகப்பெருமான் திருமணம் புரிந்த தலம் இது. இங்கு வழங்கப்படும் கஞ்சிதர்ம பிரசாதம் சகலநோய்களையும் தீர்ப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கிடங்கூரில் சுப்ரமண்யராக பிரம்மச்சாரி வடிவில் முருகப்பெருமானை தரிசிக்கலாம். கேரள கோயில்களிலேயே உயரமான கொடிமரமும் அதன் மேல் மயிலும் இடம் பெற்றுள்ள சிறப்பு பெற்ற தலம் இது. இந்த சந்நதிக்குள் பெண்கள் தரிசிக்க அனுமதியில்லை. கொடிமரத்தருகே நின்றுதான் தரிசிக்க முடியும்.

கோயமுத்தூரில் உள்ள சரவணம்பட்டியில் ரத்னகிரி முருகன் திருக்கோயில் உள்ளது. இந்திரனை அசுரர்களிடமிருந்து காக்க அவனை தன் வாகனமாக முருகப்பெருமான் ஏற்றருள் புரிந்த தலம் இது. இங்கு முருகப்பெருமானுக்கு வன்னி இலையால் அர்ச்சனை நடைபெறுவது சிறப்பு.

சிவகங்கை மாவட்டம் கோவனூரில் உள்ள பில்லூரில் முருகப்பெருமான் திருவருள் புரிகிறார். சித்த வைத்தியர்கள் சிறப்பாகக் கருதும் பூநீர் உற்பத்தியாகும் தலம் இது. சித்த மருத்துவர்களும், சித்த மருந்துகள் உண்போரும் தரிசிக்க வேண்டியதலம் இது.

சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றத்தில் சுவாமிநாத சுவாமி எனும் பெயரில் அழகன் முருகனை தரிசிக்கலாம். சித்திரை வருடப்பிறப்பன்று இக்குன்றின் 120 படிகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இத்தல நடராஜர் வலது பாதம் தூக்கி ஆடிய நிலையில் அருள்வதால் தன்பாதம் தூக்கிய நடராஜர் என வணங்கப்படுகிறார்.

The post வழக்கிலிருந்து சிக்கிய நிரபராதிகள் விடுபட ! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தீராதநோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன்….

$
0
0

முருகன் ஒரு விளக்கம்;-

விடியற்காலையில் பொன்னிறக் கதிரொளி வீசிக்கொண்டு, நீலநிறக்கடலின் மேல் தங்கக் கதிர்படிய கதிரவன் புறப்படுங் காட்சி, ஆறுமுகக்கடவுள் நீல மயில் மீதில் வேலேந்தி, மற்றப் படைகளேந்தி அஞ்சலெனப் பகர்ந்து கொண்டு வருவதுபோல் இருக்கின்றது.

ஆதிகாலந்தொட்டே தமிழ்நாட்டில் முருகன் வழிபாடு இருந்தது. பழந்தமிழர்கள் இறைவனை இயற்கை அழகு எல்லாவற்றிலும் கண்டனர். இறைவனை அழகன் என்ற அர்த்தமுள்ள சொல்லாலே அழைத்தார்கள்.முருகன் என்றால் அழகன் என்றே பொருள்.

விரிவாகச் சொன்னால் முருகன் என்றால் அழகு, இனிமை, இளமை, தெய்வத் தன்மை, மணம்,மகிழ்ச்சி .. என்ற ஆறு தன்மைகளும் ஒருங்கேயுடையவன் என்பதாகும். முருகன் உயர்வானவன். ஆகவே அவனுக்கு உயர்ந்த இடங்களிலே வீடு அமைத்தார்கள். குறிஞ்சிக் கிழான் என்றுங் கூறுவர். பஞ்சபூதங்களிலும் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் பரம் பொருளாகையால் அவனுக்கு ஆறு முகங்களை உருவகித்து,ஆறுமுகன் என்றுங் கூறுவர். முருகன் ஆறறிவு படைத்த மனிதன் வணங்குதற்குரிய தெய்வம் என்றுங்கொள்ளலாம்.

இறைவன் ஞான வடிவினன். ஞான பண்டிதன் சக்தியின் துணைகொண்டு உலகைப் படைத்துக் காத்து ரட்சிக்கின்றான். அதைவிளக்கும் சொருபமே முருகன்.  முருகன் ஞான சொருபம். வள்ளிஇச்சா சக்தி (விருப்பம், ஆசை). தெய்வானை கிரியா சக்தி(செயலாற்றல்). வள்ளித் திருமணத்தில் சிறந்த தத்துவம் அடங்கி உள்ளது.

இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன். இறைவன் சாதி வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஆகவே இந்துசமயம் சாதி வித்தியாசக் கொள்கையை ஆதரிக்கவில்லை என்பதைவள்ளித் திருமணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் வள்ளித்திருமணம் வள்ளியாகிய சீவன், பேரின்பமாகிய சிவத்துடன் கலப்பதைவிளக்குகிறது.

முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத்திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில்கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன்சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாகஇருக்கவேண்டும். அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய ..இறைவனே…!

இதையே திருவள்ளுவர்,

“கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்!” .. என்கிறார்.

முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பிவணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்துஅவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்றகோழி நாத வடிவானது. கோழிக் கொடி வெற்றியின் சின்னமாகவிளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன்.மயில் மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான்இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம்விளக்குகிறது.

தீராதநோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன்….

பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லாசக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது. தீராதநோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன். ஆகவே அவனை வைத்தியநாதன் என்றும் வாழ்த்துகின்றோம். கிடைக்காதபொருட்களையும், பேறுகளையும் வேண்டும் பக்தர்களுக்கு வழங்குகின்றவனாதலால் வரதராசன் என்றும் பெயர் பெற்றவன்முருகன்.

முருகன் மூன்று அசுரர்களை அழிக்கின்றார் என்று கந்தபுராணத்தில் கூறப்படுகின்றது. மனிதனின் மனத்தை வாட்டுகின்ற “ஆணவம், மலம், மாயை” எனப்படும் மூன்று மலங்களே அந்தஅசுரர்கள். நமது மனதிலே தோன்றி, நம்முடைய மனதிலே இருக்கின்றநல்ல எண்ணங்களை வளர்த்து, தீய எண்ணங்களை வென்று, சிறப்பாகவாழ முயற்சிக்கின்றான். அதற்காக இறைவனை வணங்குகின்றான்.

கந்தர் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும் மனதைக் கட்டுப்படுத்தி நல்லகுணங்களை வளர்த்துக்கொள்ளும் பொருட்டே. முருகனின்சிறப்புக்களை புகழ்ந்து பாடி அவனருளைப் பெற அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, நக்கீரர் அருளியதிருமுருகாற்றுப்படை .. முதலிய பாடல்களில் சிலவற்றையாவதுபாராயணம் செய்தல் நலந்தரும்.

The post தீராதநோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன்…. appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

“நோயைக் குணப்படுத்த பெரியவா சொன்ன பரிகாரம்”

$
0
0

நாளை மகா பெரியவா ஜெயந்தி தினம்

“நோயைக் குணப்படுத்த பெரியவா சொன்ன பரிகாரம்”

உங்கள் SWASTHIKTV மற்றும் SWASTHIKTV  YOUTUBE சேனல்யில் மகா பெரியவா ஜெயந்தியை

முன்னிட்டு சிறப்பு பூஜை, ஆர்த்தி நேரலையில்  கண்டு மகிழுங்கள்.

விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம் செல்வத்தை மட்டுமல்ல, ஆரோக்கியம் உள்ளிட்ட எத்தனையோ பயன்களைத் தரக் கூடியதுன்னு நான் ஓயாம சொல்றேன். ஜனங்களும் கேட்கறா. அவாளுக்கு அது உண்மை தான்னு நான் நிரூபிச்சுக் காட்ட வேண்டாமோ? அதுக்குத்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திண்டேன்”-பெரியவா

கரூர் பண்டிட் ராமசர்மா என்ற ஆயுர்வேத வைத்தியர். சக்திவிலாச வைத்தியசாலையை நிறுவி மருத்துவம் பார்த்தவர். கே.பி. சுந்தராம்பாள், தீரர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் அவரிடம் மருத்துவம் பார்த்தனர்.  ஓவியரான நாமக்கல் கவிஞர், தன் ஆரோக்கியத்தை மீட்டுத் தந்த அவருக்கு, அழகிய முருகன் வண்ணப்படத்தை வரைந்தளித்தார். ராமசர்மா, மகாபெரியவரின் பக்தர்.பெரியவர் கரூர் வந்தால் அவர் இல்லத்தில் தான் தங்குவார்.

ஒரு முறை பெரியவர் தனக்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், ராமசர்மாவைக் காஞ்சிபுரம் வருமாறும் சொல்லியனுப்பினார். ராமசர்மாவும் வந்தார். அவருடைய மருந்துப் பெட்டியை பார்த்து பெரியவர் முகத்தில் புன்முறுவல்!. ‘உன்னைத்தான் வரச் சொன்னேனே தவிர, மருந்துப் பெட்டியோடு வான்னு சொல்லலியே!’ என்றார். ராமசர்மா திகைத்தார். ‘உங்களுக்கு காய்ச்சல் என்று சொன்னதால், மருந்துப் பெட்டியோடு வந்தேன்!’ என்றார்.

 ‘உடல் என்றிருந்தால் எப்போதாவது காய்ச்சல் வருவது சகஜம் தான். காய்ச்சலே உடலைக் குணப்படுத்தத் தானே வருகிறது! அது சரி… நோயைக் குணப்படுத்த மருந்து எதற்கு! அதற்கு வேறொரு வித்தியாசமான மருந்து இருக்கிறது! அதைப் பிரயோகம் பண்ணத்தான் உன்னை வரச் சொன்னேன்!’

ராமசர்மாவுக்குப் புரியவில்லை. அமைதி காத்தார். பெரியவர் தொடர்ந்தார். ”நீ குளிச்சுட்டுத்தான் வந்திருப்பாய். இரு… நான் இன்னொரு முறை குளிச்சுட்டு வந்துடறேன்!” காய்ச்சல் இருக்கும்போது குளிக்கிறேன் என்கிறாரே! ராமசர்மாவின் மனம் பதறியது. ஆனால் மறுத்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பெரியவர் வரும் வரை காத்திருந்தார். குளித்துவிட்டு வந்த பெரியவர் தன் உடல் உஷ்ணத்தை அளந்து பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம் பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது.

”நல்லது… நாம் இருவரும் இப்போது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிக்கப் போகிறோம்!’ என்றார் பெரியவர்.

இருவரும் இணைந்து ஜெபித்தார்கள். ஜெபம் நிறைவடைந்ததும் பெரியவர் தன் உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு கூறினார். என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலும் குணமாகி இருந்தது!  உடனே பெரியவர் சர்மாவிடம், ”விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம் செல்வத்தை மட்டுமல்ல, ஆரோக்கியம் உள்ளிட்ட எத்தனையோ பயன்களைத் தரக் கூடியதுன்னு நான் ஓயாம சொல்றேன். ஜனங்களும் கேட்கறா. அவாளுக்கு அது உண்மைதான்னு நான் நிரூபிச்சுக் காட்ட வேண்டாமோ? அதுக்குத்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திண்டேன்.

கடவுள் நாமம் பிறவிப் பிணியைத் தீர்க்கும்னு தமிழ் சொல்றது. பிறவிப் பிணியையே நீக்கும்னா, பிறவியிலே வர்ற பிணியை நீக்காதா? நோயாளிகளுக்கு நீ வழக்கம்போல மருந்து கொடு. வியாதி வந்தா மருந்து சாப்பிட வேண்டியதுதான். ஆனால், கூடவே விஷ்ணு சகஸ்ரநாமம்கிற மருந்தையும் சேத்துப் பயன்படுத்தலாமே? உன்னைத் தேடி வர்றவாள் கிட்ட, நீ இதையும் உன் பிரிஸ்க்ரிப்ஷன்ல சேத்துக்கலாம் இல்லையா? அதுக்கு ஒனக்கு நம்பிக்கை வரத்தான், உன்னை வரச்சொன்னேன். காந்தி இயற்கை வைத்தியத்தைக் கொண்டாடினாருன்னு உனக்கு தெரியும்.

இயற்கை வைத்தியத்துல பிரார்த்தனைக்கு தான் முதலிடம்,” என சொல்லி விட்டு குழந்தை போல் சிரித்தார் !!!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

SWASTHIKTV YOUTUBE: MAHA PERIVA JAYANTHI – TRICHY IYAPPAN PART 01  to PART 16

 https://www.youtube.com/watch?v=mqlmt05xz6U

உங்கள் SWASTHIKTV மற்றும் SWASTHIKTV  YOUTUBE சேனல்யில் மகா பெரியவா ஜெயந்தியை

முன்னிட்டு சிறப்பு பூஜை, ஆர்த்தி நேரலையில்  கண்டு மகிழுங்கள்.

The post “நோயைக் குணப்படுத்த பெரியவா சொன்ன பரிகாரம்” appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 08-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 08-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

The post Daily Raasi Palan 08-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


அதையேன் கீழே போட்டுட்டே! உபயோகமாக இருக்கும்!

$
0
0

இன்று மகா பெரியவா ஜெயந்தி தினம்

உங்கள் SWASTHIKTV மற்றும் SWASTHIKTV  YOUTUBE சேனல்யில் மகா பெரியவா ஜெயந்தியை

முன்னிட்டு சிறப்பு பூஜை, ஆர்த்தி நேரலையில்  கண்டு மகிழுங்கள்.

“அதையேன் கீழே போட்டுட்டே?  அதுவும் உபயோகமாக இருக்கும்!” -பெரியவா

  தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும். பெரியவாளைப் பார்க்க வரும் கூட்டம் பெரும்பாலும் நிரந்தரமானது. யார் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் பெரியவா நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

  அன்று கூட்டத்தில் ஒரு மூதாட்டி, பகவானின் அருட்கடாட்சத்துக்காகநின்றுகொண்டிருந்தார் .சேவை முடிந்ததும் ஒரு தட்டில் சில பழங்களை வைத்து, அம்மையாரை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். மிகவும் திருப்தியாகப் பழங்களை எடுத்துக்கொண்ட அந்த அம்மையார் பழத்தோடு சேர்ந்துவந்த மெல்லிய மரிக்கொழுந்து காம்பு ஒன்றை எடுத்துக் கீழே போட்டு விட்டு பழங்களை மட்டும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்!

 “அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்.எடுத்துக்கோ!” என்றார் மகான் சிரித்தவாறே. பெரியவா சொல்லிவிட்டாரே என்பதற்காக,அந்த அம்மையாரும் மரிக்கொழுந்துக் காம்பை எடுத்துத் தனது பையில் போட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.

 “ஏன் இதை பத்திரமாக எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்?” என்றெல்லாம் அந்த அம்மாள் அப்போது யோசிக்கவில்லை. மகானிடம் கேட்கவும் இல்லை.

  தன் ஊருக்குப் போக அம்மையார் பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டார். பஸ் புறப்பட்டதும் அப்படியொரு தூக்கம். அருகில் அமர்ந்து இருந்த பெண், தூங்கும் அம்மையாரின் பையிலிருந்த பணப்பையைத் திருடிக் கொண்டாள். கண்டக்டர் வந்தார்.டிக்கெட் எடுக்க வேண்டுமல்லவா? குரல் கேட்டு விழித்தெழுந்த அம்மையார்,பையில் பணப்பையைத் தேடினார். அது அங்கே இல்லை! பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் இருந்தது. “அது என் பர்ஸ்!” என்று இந்த அம்மையார் பதற்றத்தில்கதற…”இல்லை, இல்லை…இது என்னுடையதுதான்!” என்று பக்கத்திலிருந்த பெண் சொல்ல, அங்கே களேபரம்ஆகிவிட்டது!

 பர்ஸில் இவ்வளவு பணம்தான் இருக்கிறது என்று கச்சிதமாகச் சொல்கிறாள் எடுத்தவள். எண்ணியும் வைத்திருக்கிறாள் என்பது பர்ஸின் நிஜ சொந்தக்காரிக்கு மட்டுமே தெரியும்!.  கண்டக்டரோ, யாரை நம்புவது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.  அப்போதுதான் அந்த அம்மையாருக்குப் பெரியவா மரிக்கொழுந்து காம்பைப் பத்திரமா எடுத்துக்கொண்டு போகச் சொன்னது ‘பளிச்’சென்று ஞாபகத்துக்கு வந்தது.

  “கண்டக்டர் சார்…அந்த பர்ஸில் வேறொரு வஸ்து இருக்கிறது.அது என்னவென்று இந்தப் பெண்ணைச் சொல்லச் சொல்லுங்கள். திருடியவளிடமிருந்து இதற்கு எப்படிப் பதில் வரும்?. “நான் சொல்கிறேன்….மரிக்கொழுந்தின் சிறிய காம்பு ஒன்று உள்ளே இருக்கிறது. வாசனை உள்ளது மரிக்கொழுந்து. வேண்டுமானால் அந்த பர்ஸைத் திறந்து பாருங்கள்..தெரியும்!” என்றார் அம்மையார்.

  கண்டக்டர் புதியவளிடமிருந்து பர்ஸை வாங்கிப் பார்க்க..உள்ளே,அந்த மரிக்கொழுந்து காம்பு பத்திரமா இருந்திருக்கிறது. பிறகென்ன -திருடியவள் தன் தவறை ஒப்புக்கொண்டாள். அம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க அவள் மன்னித்து விடப்பட்டாள். தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

SWASTHIKTV YOUTUBE: MAHA PERIVA JAYANTHI – TRICHY IYAPPAN PART 01  to PART 16

 https://www.youtube.com/watch?v=mqlmt05xz6U

உங்கள் SWASTHIKTV மற்றும் SWASTHIKTV  YOUTUBE சேனல்யில் மகா பெரியவா ஜெயந்தியை

முன்னிட்டு சிறப்பு பூஜை, ஆர்த்தி நேரலையில்  கண்டு மகிழுங்கள்.

The post அதையேன் கீழே போட்டுட்டே! உபயோகமாக இருக்கும்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

யார் வரச்சொன்னது? யாரெல்லாம் தேடி வந்திருக்கிறார்கள்?

$
0
0

இன்று மகா பெரியவா ஜெயந்தி தினம்

உங்கள் SWASTHIKTV மற்றும் SWASTHIKTV  YOUTUBE சேனல்யில் மகா பெரியவா ஜெயந்தியை

முன்னிட்டு சிறப்பு பூஜை, ஆர்த்தி நேரலையில்  கண்டு மகிழுங்கள்.

 யார் வரச்சொன்னது? யாரெல்லாம் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள்? பெரியவா

என் பாட்டனார் தியாகி எஸ். சிதம்பரஅய்யர் தன்னுடைய 92-வது வயதில் உடல் நலம் குன்றியிருந்தார். அவருக்கு தெய்வம் உலகம் எல்லாமே காஞ்சி பரமாச்சாரியார்தான். மஹாபெரியவாளின் அவதார ஸ்தலமான விழுப்புரத்தில் அவர் அவதரித்த இடத்தில் அமைந்திருக்கின்ற வேதபாட சாலையின் கௌரவ நிர்வாகியாக பணியாற்றி வந்த நேரம் அது. அந்தச் சமயம் அவர் பேரரான நான் சபரிமலைக்கு செல்வதற்காக விரதமிருந்து மாலை அணிந்திருந்தேன்.

 என் தங்கையின் கணவரே எனக்கு குருசாமி. அவர் அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் தார்வார் என்னுமிடத்தில் LIC-ல் பணியாற்றி வந்திருந்தார். மலைக்கு செல்வதற்கு முன்பு என்னை தார்வார் வரச் சொல்லியிருந்தார். என் பாட்டனார் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே நான் தாராளமாக மலைக்கு போய் வரலாம் என்று டாக்டர்கள் தைரியம் கொடுத்ததின் பேரில் நான் தார்வார் போய்ச் சேர்ந்தேன். அப்பொழுது மாலை 6 மணியாகி விட்டது.

  இரவு ஐய்யப்பன் பூஜையை அவர் வீட்டிலேயே முடித்துவிட்டு பிறகு உறங்கினேன். மறுநாள் விடியற்காலையில் என் பாட்டனார் இறந்து விட்டது போலவும் அதனால் என் புனிதப் பயணம் தடைபட்டது போலவும் கனவு கண்டேன். விழித்துப் பார்த்தால் அது விடியற்காலை 4 மணியாகி விட்டது. விடியற்காலை கனவு என்பதால் எனக்கு பயம் பிடித்துக் கொண்டது.

  குருசாமியிடம் விளக்கம் கேட்டேன். இருமுடி கட்டுவதற்கு மட்டும்தான் நான் குருசாமியே தவிர வேறு என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. ஒருவேளை தாத்தாவின் நினைவாகவே நீ இருப்பதால் இதுபோன்ற கனவு வந்திருக்கலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஒரு யோசனையை சொன்னார். தார்வாரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் அப்பொழுது காஞ்சி பெரியவரும் அவருடன் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ‘கோகாக்’ என்ற இடத்தில் முகாமிட்டுக் காண்டிருந்தார்கள். என்னை அவர்களிடம் போய் உத்தரவு கேட்கச் சொன்னார். அவர்கள் உத்திரவு கொடுத்தால் நீயும் என்னுடன் வரலாம் என்று சொல்லிவிட்டார்.

  காலை 8 மணிக்கு நானும் குருசாமியின் தாயாரும் பஸ்ஸைப் பிடித்து ‘கோகாக்’ என்ற இடத்திற்கு போய் சேர்ந்தோம். அங்கே வெங்கடேஸ்வரா பள்ளிக் கூடத்தில் புது பெரியவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் செவ்வாய் கிழமை பூஜையை முடித்துவிட்டு எல்லா பக்தர்களுக்கும் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் மட்டும்தான் இருந்தார்கள். பெரியவாளை அங்கு காணோம்.

 நான் தீர்த்த பிரசாதத்திற்காக கையை நீட்டியபொழுது புது பெரியவாள் உத்தரினியை கீழே வைத்துவிட்டார்கள். இப்பொழுது தான் இங்கு வருகிறாயா? என்று கேட்டார்கள். மஹாபெரியவர் உனக்காக ஒரு சேதி சொல்ல காத்துக் காண்டிருக்கிறார்கள். உடனடியாக நீ இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மலையில் இருக்கும் கோகாக் நீர்வீழ்ச்சிக்கு போ. அங்கே சிவன் கோவிலில் பெரியவர் இருக்கிறார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.

  எனக்கு தாங்க முடியாத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நான் அங்க போகப்போவது எனக்கே முன்கூட்டி தெரியாது. அப்படி இருக்கும்பொழுது எனக்காக ஒரு சேதி சொல்ல மஹாபெரியவாள் எப்படி காத்துக் கொண்டிருக்க முடியும். அதுவும் அதை எப்படி ஸ்ரீஜெயேந்திர ஸ்வாமிகள் அறிந்துகொள்ள முடியும். இதில் ஏதோ தெய்வத்தன்மை உள்ளது என்பதை உணர்ந்தேன். மஹாபெரியவாளுக்கு இருக்கும் ஞானதிருஷ்டி காஞ்சி பீடாபதியான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு உண்டு என்பது அப்பொழுதுதான் என் மரமூளைக்கு எட்டியது.

 நீ போய் பெரியவாளை தரிசித்து பிறகு என்னை வந்து பார்த்து விட்டு போ என்று என்னை அனுப்பி வைத்தார்கள். நானும் என் குருசாமியின் தாயாரும் ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொண்டு கோகாக் மலைக்குச் சென்றோம். அது மிகவும் கடினமான பாதையை கொண்ட மலை. நாங்கள் சென்ற ஆட்டோவே மூன்று இடத்தில் ஏற முடியாமல் நின்று விட்டது. எப்படித்தான் அந்த காஞ்சி கடவுள் தன் தாமரை பாதங்களால் ஏறி சென்றாரோ என்று இப்பொழுது நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நாங்கள் அந்த நீர்வீழ்ச்சியை சென்று அடைந்தபொழுது பிற்பகல் 3 மணியிருக்கும். அங்கே அருவியை ஒட்டிய இடத்தில் ஒரு அழகான சிவன் கோவில் உள்ளது. அங்குதான் பக்கத்தில் மஹாபெரியவாள் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த அறை மூடியிருந்தது. அப்பொழுது என்னை நோக்கி இருவர் வந்தனர். அதில் ஒருவர் வடநாட்டுக்காரர். அவர் அந்த மலையில் ஒரு நூற்பாலையை நடத்திவரும் முதலாளி, மற்றொருவர் மாயவரத்தை சார்ந்த பிராமணர். அவர்தான் அந்த ஆலையின் மானேஜர் ஆவார். அவர்கள் சொல்லித்தான் இவையெல்லாம் எனக்கு தெரியும்.

  அவர்கள் என்னை பார்த்து ‘ஐய்யப்பா நீங்கள் வருவதற்கு முன்னாலே உங்கள் வருகை எங்களுக்கு தெரியும். தாங்கள் ஸ்னானம் செய்துவிட்டு நாங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உணவை சாப்பிட வேண்டும்’ என்று சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி தெரியும் என்று கேட்டேன். மஹாபெரியவாள் எங்களை இன்றுகாலை அழைத்து ‘என்னை பார்க்க ஒரு ஐயப்பன் வருகிறார். அவருக்கு மதியம் உணவு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கூறினாராம். அந்த காலத்தில் கர்நாடகா மாநிலத்தில் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மிகமிகக் குறைவு. இருந்தாலும் என்னை ஞானக் கண்ணால் தெரிந்துகொண்டு எனக்கு ஆகாரத்திற்கும் முன்னேற்பாடு செய்திருக்கிறார் என்று எண்ணியபொழுது என் கண்களில் என்னை அறியாமலே கண்ணீர் பெருகியது. பெரியவாளை தரிசனம் செய்யாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று உறுதியாக அவர்களிடம் சொல்லிவிட்டேன்.

 ஐந்து நிமிடங்கள் கழித்து மஹாபெரியவாள் தங்கியிருந்த வாசல் கதவு ‘படால்’ என்று திறக்கப்பட்டது. காவி உடையுடன் சிவந்த மேனியாக ஈஸ்வர ஸ்வரூபமாக காஞ்சி முனிவர் காட்சி கொடுத்தார்கள். ‘யாரெல்லாம் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள்?’ என்று தன் அருகில் இருந்த சீடர்களை கேட்டார்கள். அதுவும் கொஞ்சம் உரத்த குரலில் கேட்டார்கள். அருகில் இருந்த ஸ்ரீபாலு அவர்கள் என்னை அறிமுகம் செய்தார்கள். விழுப்புரம் சிரம்பரஅய்யர் பேரன் வந்திருக்கிறான் என்று சொன்னார். உடனே பெரியவாள் என்னைப் பார்த்து ‘உன்னை யார் இங்கு வரச் சொன்னது? உன் தாத்தாவின் உடல்நிலை இப்படி இருக்கும்பொழுது அவரை விட்டு விட்டு ஏன் வந்தாய்?’ என்று படபடப்போடு கேட்டார்கள். ‘டாக்டர்கள் தாத்தாவிற்கு ஆபத்து இல்லை என்று சொன்னார்கள். எனவே நான் சபரிமலை போய் வரலாம் என்று தைரியம் கொடுத்தார்கள்’ என்று பதிலளித்தேன்.

  மின்னல் அடிக்கும் நேரத்திற்குள் பெரியவாள் ‘டாக்டர்கள் ஊசி போடுவார்கள், மருந்து கொடுப்பார்கள், அவ்வளவுதான். பிராணனை கூடவா பிடித்து வைப்பார்கள். எங்கள் கணக்குப்படி இப்பொழுதே முடிந்துவிட்டது. உங்கள் கணக்கு நாளை காலையோடு முடிந்துவிடும். உடனே புறப்பட்டு திரும்பி போ’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்கள். ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருவரும் மலையிலிருந்து உடனே இறங்கி வந்து மீண்டும் புதுப்பெரியவாளை தரிசனம் செய்தோம். அப்பொழுது அவர் ‘என்ன, பெரியவா சொன்னதெல்லாம் புரிந்ததா? ஏதாவது சந்தேகமிருந்தால் என்னைக் கேள்’ என்று சொன்னார்கள்.

 நான் புரிந்தது என்று கண்ணீரோடு தலையாட்டினேன். உடனே புதுப்பெரியவாள் என்னிடம் விபூதி பிரசாதத்தை ஒரு இலையில் வைத்து கொடுத்து ‘இதை உன் தாத்தாவிடம் உடனே செலுத்தி விடு’ என்றார்கள். அப்பொழுதும் நான் அந்த பிரசாதத்தை தபாலில் தாத்தா விலாசத்திற்கு அனுப்பிவிட்டு சபரிமலை போய்வந்த பிறகு தாத்தாவை பார்க்கிறேனே என்று மடத்தனமாக உளறினேன். அதற்கும் அவர் சிரித்துக்கொண்டே ‘பேரன் மூலம் பிரசாதத்தை அனுப்ப நினைத்தால் நீ போஸ்ட்மேன் மூலம் அனுப்ப பார்க்கிறாயே. நீ காடு-மலையெல்லாம் திரிந்துவந்து அவருக்கு பிரசாதம் கொண்டு செல்ல நினைக்காதே. அதுவரை அவர் அவஸ்த்தை படவேண்டும். உடனே புறப்படு’ என்று உத்திரவு கொடுத்தார்கள். உடன் இருந்தவர்கள் ‘கடைசி பஸ் மாலை 5-45 மணியுடன் போய்விட்டது. இனி காலைதான் பஸ் உண்டு’ என்று அவரிடம் சொன்னார்கள்.

 அதற்கு அவர் ‘நீ தைரியமாக பஸ் ஸ்டேண்டு போ. அந்த பஸ் இன்னும் வந்திருக்காது’ என்று அதே புன்முறுவலுடன் ஆசிர்வதித்தார்கள். அவர் அருள்வாக்கு போலவே அந்த பஸ் இரவு 7 மணிக்குமேல் தாமதமாக வந்தது. நாங்கள் இருவரும் இரவு 10 மணிக்குமேல் தார்வார் வந்து சேர்ந்தோம். ஆதிசங்கரர் வழிவந்த காஞ்சிமட பீடாதிபதிகள் அனைவருக்கும் தொலைநோக்கும் அருள்சக்தி இருக்கிறது என்ற முடிவிற்கு அன்றே வந்துவிட்டேன். இரவு தார்வாரில் பஸ் கிடைக்காததால் மறுநாள் முழுவதும் பயணம் செய்துவிட்டு அன்று இரவு பெங்களூர் வந்து பிறகு பஸ் பிடித்து விழுப்புரம் வந்து சேர்வதற்குள் ஒருநாள் ஓடிவிட்டது. மஹாபெரியவாள் கூறியதுபோல மறுநாள் காலை 6-30 மணியளவில் என் தாத்தா இறைவனடி அடைந்தார். நான் மறுநாள் சஞ்சயனத்திற்கு மயானத்திற்கு போக முடிந்தது.

  அதுவரையில் தாத்தாவினுடைய இருதய பாகம் மட்டும் நெருப்பு அணையாமல் கணிந்துகொண்டே இருந்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. யாரையும் கலக்காமலே பெரியவாள் கொடுத்த விபூதி பிரசாதத்தை தாத்தாவின் மார்பு பாகத்தில் கொட்டிவிட்டேன். உடனடியாக ஒரு நீல நிற ஒளி தோன்றிய பிறகு அப்பகுதியும் அணைந்து விட்டது. அப்படி நான் பிரசாதத்தை செலுத்தியது சரியா தவறா என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை. ஆனால் குருவின் உத்திரவை நிறைவேற்றி விட்டேன்.

  என் தாத்தாவின் உயிர் பிரிவதற்குள் அவர் அருகில் மஹாபெரியவாள் இருந்ததாக எங்கள் ஊரில் உள்ள ஒரு அய்யங்கார் மாமி கனவில் பார்த்திருக்கிறார்கள். அதை கனவாக கருதாமல் நிஜம் என்றே எண்ணி எங்கள் வீட்டு கதவை விடியற்காலை 6 மணிக்கு தட்டி ‘மஹாபெரியவாள் இங்கு வந்தாரே, நான் அவரை சிதம்பர அய்யர் படுக்கையின் அருகில் பார்த்தேனே. இருவரும் மனவிட்டு பேசிக் கொண்டிருந்தார்களே. இப்பொழுது அந்த மஹான் எங்கே என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம். சில நிமிடங்களுக்கு பிறகுதான் என் தாத்தாவின் ஆவி பிரிந்ததாம். இவற்றையெல்லாம் நான் விழுப்புரம் சென்றவுடன் என் குடும்பத்தினர் என்னிடம் மெய்மறந்து சொன்னார்கள்.

  நாளை நடக்க விருப்பதை அந்த முனிவர் எப்படி எனக்கு முதல் நாளே அறிவித்தார்கள்? மஹாபெரியவாள் மலைமீது இருக்கிறார், உனக்காக ஒரு சேதி வைத்திருக்கிறார் என்று புது பெரியவாள் எப்படி சொன்னார்கள்? என்னைத் தேடி ஒரு ஐயப்பன் வரப்போகிறான், அவனுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என்று முன்னாலேயே அங்குள்ள இருவரிடம் எப்படி பெரியவர் சொன்னார்? மஹாபெரியவா சொன்னது புரிந்ததா? சந்தேகமிருந்தால் என்னைக் கேள் என்று எப்படி புது பெரியவாள் அறிந்து கேட்டார்கள்? மாலை புறப்பட வேண்டிய பஸ் காலதாமதமாகத்தான் வரும், நீ தைரியமாக போ என்று அவர் சொன்னதுபோல அந்த பஸ்ஸும் இரவு 7 மணிக்கு மேல் எப்படி வந்தது?

 இவையெல்லாம் எனக்கு புரிந்துவிட்டால் இன்னும் ஏன் நான் ஒரு சாதாரண சராசரி மனிதனாக இருக்கிறேன். அதனால்தான் அந்த மஹானை ‘காலங்கள் அறிந்த காஞ்சி மாமுனிவர்’ என்று போற்றி அவர் பாதம் என்றும் பணிகிறேன்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

SWASTHIKTV YOUTUBE: MAHA PERIVA JAYANTHI – TRICHY IYAPPAN PART 01  to PART 16

 https://www.youtube.com/watch?v=mqlmt05xz6U

உங்கள் SWASTHIKTV மற்றும் SWASTHIKTV  YOUTUBE சேனல்யில் மகா பெரியவா ஜெயந்தியை

முன்னிட்டு சிறப்பு பூஜை, ஆர்த்தி நேரலையில்  கண்டு மகிழுங்கள்.

The post யார் வரச்சொன்னது? யாரெல்லாம் தேடி வந்திருக்கிறார்கள்? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

TEN GUIDELINES FROM SHREE SATHYA SAI BABA

$
0
0

TEN GUIDELINES FROM SHREE SATHYA SAI BABA

  1. QUIT WORRYING

Life has dealt you a blow and all you do is sit and worry. Have you forgotten that I am here to take all your burdens and carry them for you? Or do you just enjoy fretting over every little thing that comes your way?

  1. PUT IT ON THE LIST

Something needs to be done or taken care of. Put it on the list. No, not YOUR list. Put it on MY to-do-list. Let ME be the one that take care of the problem. I can’t help you until you turn it over to Me. And although My to-do-list is long, I am after all…God. I can take care of anything you put into My hands. In fact, if the truth were ever really known, I take care of a lot of things for you that you never even realize.

  1. TRUST ME

Once you have given your burdens to Me, quit trying to take them back. Trust Me. Have the faith that I will take care of all your needs, your problems and your trials. Problems with the kids? Put them on My list. Problem with finances? Put it on My list. Problems with your emotional roller coaster? For My sake, put it on My list. I want to help you. All you have to do is ask.

  1. LEAVE IT ALONE

Don’t wake up one morning and say, “Well, I am feeling much stronger now, I think I can handle it from here”.  Why do you think you are feeling stronger now? It’s simple. You gave Me your burdens and I am taking care of them. I also renew your strength and cover you in my peace. Don’t you know that if I give you these problems back, you will be right back where you started? Leave them with Me and forget about them. Just let Me do my job.

  1. TALK TO ME

I want you to forget a lot of things. Forget what was making you crazy. Forget the worry and the fretting because you know that I am in control. But there is one thing I pray you never forget. Please, don’t forget to talk to Me – OFTEN! I love YOU! I want to hear your voice. I want you to include Me on the things going on in your life. I want to hear you talking about your friends and family. Prayer is simply you having a conversation with Me. I want to be your dearest friend.

  1. HAVE FAITH

I see a lot of things from up here that you can’t see from where you are. Have faith in Me that I know what I am doing. Trust Me; you wouldn’t want the view from My eyes. I will continue to care for you, watch over you, and meet your needs. You only have to trust Me. Although I have a much bigger task than you, it seems as if you have so much trouble just doing your simple part. How hard can trust be?

  1. SHARE

You were taught to share when you were only two years old. When did you forget? That rule still applies. Share with those who are less fortunate than you. Share your joy with those who need encouragement. Share your laughter with those who haven’t heard any in such a long time. Share your tears with those who have forgotten how to cry. Share your faith with those who have none.

  1. BE PATIENT

I managed to fix it so that in just one lifetime you could have so many diverse experiences. You grow from a child to an adult, have children, change jobs many times, learn many trades, travel to so many places, meet thousands of people, and experience so much. How can you be so impatient then when it takes Me a little longer than you expect to handle something on My to-do-list? Trust in My timing, for My timing is perfect. Just because I created the entire universe in only six days, everyone thinks I should always rush, rush, rush.

  1. BE KIND

Be kind to others, for I love them just as much as I love you. They may not dress like you, or talk like you, or live the same way you do, but I still love you all. Please try to get along, for My sake. I created each of you different in some way. It would be too boring if you were all identical. Please, know I love each of your differences.

  1. LOVE YOURSELF

As much as I love you, how can you not love yourself? You were created by me for one reason only – to be loved, and to love in return. I am a God of Love. Love Me. Love your neighbors. But also love yourself. It makes My heart ache when I see you so angry with yourself when things go wrong. You are very precious to me. Don’t ever forget that!

The post TEN GUIDELINES FROM SHREE SATHYA SAI BABA appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

மன தைரியம் அதிகரிக்க செய்யும் ஸ்லோகம்!

$
0
0

முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான்.

குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, “இவன் பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தெண்டம்’ என்று ஏளனம் பேசினர். அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறை கூறினர்.

சுவாமிகளின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது. அவருடைய கண்ணுக்கு அந்த இளைஞன் ஞானானுபவத்தில் திளைப்பவனாகவே தெரிந்தான். அவனுடைய அறிவு தீட்சண்யத்தை அவர் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். எனவே, தம்முடைய வாரிசாக அவனைக் கருதி வந்தார்.

அன்று நள்ளிரவு நேரம். குருநாதர், தம்முடைய மாணவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். அங்கே அந்த இளைஞனை தவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில், அவர்கள் படித்த புத்தகங்கள் கிடந்தன. அவனைத் தேடிக்கொண்டு வெளியே வந்தார் குருநாதர். அவன், கொடும்பனியில் நட்டநடு வழியில் படுத்திருந்தான். அவனருகே, ஒரு சுவடி நூல் இருந்தது. அதில் ஆங்காங்கே, அவன் எழுதிய விளக்கக் குறிப்புகளும் காணப்பட்டன. அவற்றை மேலோட்டமாய் பார்த்த குருநாதர் வியப்புற்றார். தூங்கிக் கொண்டிருந்த சீடனை தொந்தரவு செய்ய விரும்பாமல், தன்னுடைய மேலாடையை எடுத்து அவருக்குப் போர்த்தினார். சுவடிக் கட்டுடன் உள்ளே சென்றார். இரவு நெடுநேரம் வரை சீடனின் குறிப்புரைகளை அவர் அக்கரையோடு படித்தார். தமக்குள் பாராட்டிக் கொண்டார்.

பொழுது விடிந்தது. கண்விழித்தான் இளைஞன். பக்கத்தில் சுவடிகளைக் காணவில்லை. குருவின் மேலாடையை யாரோ அவன் மீது போர்த்தியிருந்தனர். மாணவர்களில் யாரேனும் அந்தக் குறும்புச் செயலைக் செய்திருக்க வேண்டும் என்று பட்டது. ஆனாலும், குருவின் மேலாடையை இரவு முழுதும் தான் போர்த்திக் கொண்டிருந்தோம் என்பதே அவனுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது. குருவிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றான் இளைஞன். குருநாதர் அவனை வரவேற்று, “”நீதான் இதையெல்லாம் எழுதியதா?” என்று அன்புடன் கேட்டார்.

“”ஐயனே! நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்!” என்று கூறியபடி, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

“”தன் சீடன் மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஒன்றும் மந்தபுத்திக்காரன் அல்ல; அவன் ஞானவான்!” என்று எல்லாரிடமும் பெருமையாய் சொன்னார் சுவாமிகள். அன்று முதல் அந்த இளைஞனை தம்முடைய முதன்மைச் சீடராக அறிவித்தார் குரு. அந்தச் சீடர்தான் பிற்பாடு, ஸ்ரீ ராகவேந்திரர் என்று உலகோரால் வணங்கிப் போற்றப்படுபவர்.

ராகவேந்திரர் இயற்றிய சுந்தரகாண்ட ஸ்லோகம்  படிப்போருக்கு மன தைரியம் அதிகரிக்கும்.

யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத்

தீர்ணாம்புதிர் லீலயா

லங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம்

பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்!

அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம்

தக்த்வா புரீம் தாம் புன:

தீர்ணாப்தி: கபிபிர்யுதே

யமனமத்தம் ராமசந்த்ரம் பஜே!

பொருள்: யாருடைய அருளின் வலிமையால் அனுமன் எந்தகளைப்பும் இல்லாமல் கடலைத் தாண்டி ராமனின் அன்புக்குரிய சீதையைக் கண்டாரோ, அசோக வனத்தை சேதப்படுத்தினாரோ, அட்சகுமாரன் முதலிய அரக்கர்களைக் கொன்றாரோ,  ராவணனைக் கண்டு இலங்கையை தீக்கிரையாக்கினாரோ, மறுபடியும் கடலைத் தாண்டினாரோ, மகேந்திர மலையில் இருக்கும் வானரங்களுடன் சாஷ்டாங்கமாய் யாரை வணங்கினாரோ, அப்படிப்பட்ட ராமரை  வணங்குகிறேன்.

 

The post மன தைரியம் அதிகரிக்க செய்யும் ஸ்லோகம்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

எடுத்த எந்த காரியமும் வெற்றியுடன் தொடங்க வேண்டுமா?

$
0
0

எடுத்த எந்த காரியமும் வெற்றியுடன் தொடங்க வேண்டுமா?

எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்து தரும் 27 நட்சத்திரங்களுக்கு உகந்த நட்சத்திர நாட்கள்

நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும். அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

The post எடுத்த எந்த காரியமும் வெற்றியுடன் தொடங்க வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>