Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

83rd Jayanthi Mahotsavam of Sri Jayendra Saraswathi Shankaracharya

$
0
0

83rd Jayanthi Mahotsavam of Sri Jayendra Saraswathi Shankaracharya Swamiji, Kanchipuram

The 83rd Jayanthi Mahotsavam of Shri Kanchi Kamakoti Peetadhipati Jagadguru Shankaracharya Pujyashri Jayendra Saraswathi Swamiji will be celebrated at Shri Kanchi Kamakoti Peetam Shri Shankara Matam, Kanchipuram on Tuesday – 8 August 2017. Veda Parayanam and Havans will take place on the occasion.
His Holiness Pujyashri Shankara Vijayendra Saraswathi Swamiji will perform Ashtotra pada puja and Pushpaabhishekam to His Holiness Pujyashri Jayendra Saraswathi Shankaracharya Swamiji. Various cultural programmes, bhajans and music concerts will be held at Shrimatam. Devotees are invited to participate in the celebrations and receive the blessings of Pujyashri Acharya Swamijis.

WhatsApp Image 2017-08-08 at 08.08.46

Programme

5 am – Vishwaroopa Darshan
6 am – Abhishekam to Sri Kamakshi Ambal by His Holiness at Sri Kamakshi Ambal Devasthanam
7 am – Sangeethasamarpanam by 83 Nadaswara Vidwans at Shrimatam
8 am – Shri Chandramouleeswara puja by His Holiness
11 am – Vatu puja, Kanya Puja, Suvasini Puja and Dampati Puja
12 noon – Poornahuti
1-3 pm – Bhajan by Smt. Padma Sitaraman and group
3 pm – Kavi arangam
4.30 pm – Swarna Pada Puja & pushpanjali
5.30 pm – Guruvandana Nadasamarpanam

The post 83rd Jayanthi Mahotsavam of Sri Jayendra Saraswathi Shankaracharya appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது ! பிரிந்து வர மனமும் மறுக்குது!

$
0
0

பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது ! பிரிந்து வர மனமும் மறுக்குது!

பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது !
தென்னாடுடைய பெரியவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சர்வக்ஞா சர்வ வ்யாபி பெரியவா சரணம்
மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி

பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
பெரியவாளை பிரிந்து வர மனமும் மறுக்குது
பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

விஸ்வரூப தரிசனம் காண
பக்தர் விடியகாலை காத்திடும் போது
வாழ்த்தொலிகள் ஒலித்திடும் போது
மேனா விளக்கினிலே துயில் எழும் போது
பெரியவாளை பார்த்துக்கிட்டடே இருக்கத்தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

பஞ்சாங்கம் படித்திடும் போது
செவியில் பாங்காக கேட்டிடும் போது
பணிவோர்கள் யார் எனும் போது
யாதும் புரியார் போல் நடித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத்தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

மங்கள நீராடிடும் போது
மெதுவாய் மூழ்கியே எழுந்திடும் போது
மேலாடை போர்த்திடும் போது
திருநீறு மேனியெல்லாம் பூசிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

அனுஷ்டானம் துவக்கிடும் போது
அழகாய் ஆசமனம் புரிந்திடும் போது
அதிகாலை ஒரு மணி நேர ஜபத்தில்
ஆழ்ந்தழகாய் அமர்ந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

ஓர் மணி தான் நிறைவுறும் போது
மணியும் ஓசையுடன் ஒலித்திடும் போது
ஓர் இரு கண் திறந்திடும் போது
விந்தை யீதனையாம் வியந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

ஜபம் முடிந்து நோக்கிடும் போது
கண்ணால் ஜயம் உனக்கு என்றிடும் போது
ஜகம் எல்லாம் மறந்திடும் போது
அந்த க்ஷண நேர பூரிப்பின் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

கை தட்டி அழைத்திடும் போது
பாலு ஸ்ரீகண்டன் உடன் வரும் போது
வேதபுரி விரைந்திடும் போது
மௌலி குமரேசன் குழைந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

தண்டமதை ஏந்திடும் போது
அழகாய் தளிர்நடை தான் போட்டிடும் போது
தொண்டர் படை உடன் வரும் போது
நாமும் திருவீதி வலம் வரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

தரிசனம் தான் தர வரும் போது
ஒவ்வோர் இடமாக நகர்ந்திடும் போது
தனியாக நடந்திடும் போது
முன்னால் படி என்று ஒளி வரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

மேனாவில் அமர்ந்திடும் போது
பின்னர் மரத்தடியில் இருந்திடும் போது
மேடை மேல் ஏறிடும் போது
வந்தோர் மனம் எல்லாம் களித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

மலராகக் குவிந்திடும் போது
பக்தர் கரம் சேர குவித்திடும் போது
மனமார ஏற்றிடும் போது
மலரை சிரம் சேர போட்டிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

பூவினந்தான் சேர்ந்திடும் போது
கொன்றை சரமாகத் தான் வரும் போது
தாமரையும் உடன் வரும் போது
சிரம் மேல் சூட்டியுடன் சிரித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

மல்லிகைப் பூ மலர் வரும் போது
அல்லி மூவகையும் மலர்ந்திடும் போது
மெய்யன்பர் கொணர்ந்திடும் போது
ஏற்று மணம் எங்கும் பரப்பிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

பழமாக குவித்திடும் போது
அன்பர் தொழுதேற்ற தினம் வரும்போது
பழுதில்லா மனம் எனும்போது
பார்த்து அழகாக கரம் தொழும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

வந்தோரை விளக்கிடும்போது
அவரின் தந்தை யார் என்றிடும் போது
சொந்தம் கூற் எனும் போது
அன்னார் முந்தை எல்லாம் தான் சொல்லும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

மானசீக பூஜையின் போது
கரத்தால் வந்தனைகள் புரிந்திடும் போது
உபசாரம் பல செய்யும் போது
மலர்கள் திருக்கரத்தால் கொட்டிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கரா

பத்திரிக்கை படித்திடும் போது
மூக்குக் கண்ணாடி அணிந்திடும் போது
நான்கைந்து மாற்றிடும் போது
கூடைக்குள் எடுத்து வைத்திடும்போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

லென்ஸ் எடுத்து படித்திடும் போது
கையால் டார்ச் அடித்து படித்திடும் போது
புத்தகங்கள் படித்திடும் போது
கீழேவைக்காமல் முடித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

பிரசாதம் பல வரும் போது
திருநீற் குங்குமங்கள் இட்டிடும் போது
தேங்காயை தொட்டிடும் போது
கொண்டு வந்தோர்க்கே திருப்பிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

தீர்த்தங்கள் வந்திடும் போது
ஹோமம் செய்வோர்கள் கொணர்ந்திடும் போது
ரட்சைகள் உடன் வரும் போது
நெற்றித்திலகம் என தரித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

தஞ்சமென வந்திடும் போது
ஏழை திருமணங்கள் என வரும் போது
அஞ்சேல் என அருளிடும் போது
வாரி தங்கம் என வழங்கிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

அருள் எனக்கு என்றிடும் போது
கோவில் குடமுழுக்கு என வரும்போது
அருள் மழையாய் பொழிந்திடும்போது
பூர்ணபலம் கொடுத்து மகிழ்ந்திடும்போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

புறங்கையை தட்டிடும் போது
அழகாய் ஒய்யார நடையிடும் போது
வேகமுடன் நடந்திடும் போது
சீடர் ஓடியுடன் வழி செய்யும்போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

பாலகுரு படித்திடும் போது
அங்கே பாஷ்ய பாடம் நடந்திடும் போது
பெருங்குருவாய் அமர்ந்திடும் போது
பரிவாய் தீஷண்யம் வீற்றிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

சர்ச்சைகள் நடந்திடும்போது
தானும் சந்தேகம் கேட்டிடும் போது
விற்பன்னர் விளக்கிடும் போது
தெளிவாய் விளக்கங்கள் தான் தரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

வலக்கரத்தால் அருளிடும் போது
இதமாய் இடக்கரத்தால் அருளிடும் போது
இரு கரத்தால் அருளிடும் போது
மேலே உயர்க்கரத்தால் அருளிடும்போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

விழியிரண்டால் நோக்கிடும் போது
கனிவாய் மொழி சொல்லும் போல் நோக்கிடும் போது
கருவிழியால் நோக்கிடும் போது
கருணை மொழித் தாய்போல் நோக்கிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

அருள்நோக்காய் நோக்கிடும் போது
மனதில் இருள்நீக்க நோக்கிடும் போது
களி நோக்காய் நோக்கிடும் போது
ஞான ஒளிநோக்காய் நோகிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

மெதுவாக நடந்திடும் போது
கமல பதமலரை கண்டிடும் போது
பதமாக நடையிடும் போது
மனதும் இதமாக சுகம் பெரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

அபிஷேகம் நிறைவுறும் போது
பூஜை ஹாரத்தி நடந்திடும் போது
அவசரமாய் விரைந்திடும் போது
சந்திர மௌலீஸ்வர் வலம் வரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

குருவணக்கம் செய்ய சொல்லும் போது
ஆதி குருபீடம் பணி செய்யும் போது
என் முறை தான் வணங்கிடும் போது
தோடகாஷ்டகம் தான் முடித்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

காய்கறிகள் குவித்திடும் போது
பிக்ஷாவந்தனத்தார் கொணர்ந்திடும் போது
ஒவ்வொன்றாய் ஆய்ந்திடும் போது
அவற்றை தனித்தனியாய் வை எனும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

அரிசி எங்கே என்றிடும் போது
பருப்பு வகைகள் என்றிடும் போது
வெல்லம் எங்கே என்றிடும் போது
தரமாய் வகைபிரித்து நகைத்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

வாழைக்காய் வைத்திடும் போது
அவரை வெண்டைக்காய் உடன் வரும் போது
மென்விரலால் அள்ளிடும் போது
வந்தோர் எண்ணமெல்லாம் குளிர்ந்த்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

பழவகைகள் பார்த்திடும் போது
கீரை பசுக்களுக்கு என வரும் போது
வேறு வகை கொண்டிடும் போது
தானே பசுக்களுக்கு ஊட்டிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

வேழம் தான் முன்வரும் போது
கையால் வாழைக்கனி கொடுத்திடும் போது
உண்டாயா என்றிடும் போது
யானை கொண்டாட்டம் கொண்டிடும் போது
பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

மனை போட்டு அமர்ந்திடும் போது
முறையாய் மாத்யானியம் புரிந்திடும் போது
மென்கரத்தால் ஜபித்திடும் போது
இமைகள் மூடித் தவம் தான் செய்யும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

காட்சிக்கள் பல தரும் போது
வந்தோர் யாவர்க்கும் விடை தரும்போது
பிஷைக்கு இலை கொளும்போது
தானும் பிஷைக்கு திரும்பிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

பசி சேர்த்து வந்திடும் போது
கயிற்றுக் கட்டில் மேல் அமர்ந்திடும்போது
கற்கண்டை மென்றிடும் போது
ஏலம் லவங்கம் தான் சுவைத்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

காத்திருப்போர் நிறைந்திடும்போது
தானும் காத்திருந்தே அகன்றிடும் போது
குறை சொல்வோர் கேட்டிடும் போது
மேலும் கருணை கொண்டு அருளிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

மதியத்தில் காத்திடும் போது
அயலும் நேரத்தும் அருளிடும் போது
மனமார சிரித்திடும் போது
வந்தோர் மகிழ்வோடு விடை பெறும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

மாலைத்தான் வந்திடும் போது
மீண்டும் மெய்யன்பர் சேர்ந்திடும் போது
மெதுவாக வெளிவரும் போது
மாலை மதியம் போல் களி தரும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

திருநீறு அணிந்திடும் போது
மாலை அனுஷ்டானம் புரிந்திடும் போது
முக்காலம் முடிந்திடும் போது
இதையே எக்காலம் புரிந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

பிரதோஷ பூஜையின் போது
சிரஸில் ருத்ராட்சம் தரித்திடும் போது
மார்பெங்கும் அணிந்திடும் போது
மாலை மலை போல மிளிர்ந்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

இரவென்னும் வேளையின் போது
பக்தர் நிறைகின்ற நேரத்தின் போது
இரக்கம் தான் மேலிடும் போது
இதையாய் எழுந்திட்டே அருள் செய்யும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

ஓய்வுக்கு அமர்ந்திடும் போது
கயிற்றுக் கட்டில் மேல் ஓய்ந்திடும் போது
ஓரிருபேர் வந்திடும் போது
அவரின் குசலம் தான் கேட்டிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

விஸ்ராந்தி பொழுதெனும் போது
தொண்டர் விநயத்தோடு இயம்பிடும் போது
குழந்தை போல் கேட்டிடும் போது
அவரின் வேண்டலுக்கு இணங்கிடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர சங்கர ஜய ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா

மேனாவுள் அமர்ந்திடும்போது
மீண்டும் ஓர் முறை தான் நோக்கிடும் போது
ஓர் கதவைமூடிடும் போது
திறந்த ஓர் கதவால் பார்த்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

யாரும் தான் இல்லை எனும் போது
மேனா கதவைத்தான் முடிடும் போது
துயில் கொண்டார் இவர் எனும் போது
நாமும் தாலாட்டு இசைத்திடும் போது
பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா
ஹர ஹர ஹர சங்கர ஜய ஜய ஜய சங்கர

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
சம்போ சங்கர சாம்பசதாசிவ
பிரதோஷ சங்கர பிரத்யச்ய சங்கர
ஓரிக்கை சங்கர ஓங்கார சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

The post பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது ! பிரிந்து வர மனமும் மறுக்குது! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன்!

$
0
0

‘‘மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன்’’ என்று பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு காய்திரி மந்திரம் உயர்வானது. சிறப்பு வாய்ந்தது. இது மகரிஷி விஸ்வாமித்திரர் உபதேசித்த மந்திரம்.

ஓம் பூர்புவ ஸ்வஹ
தத் ஸ்விதூர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்

– இதுதான் காயத்ரி மந்திரமாகும்.

‘‘பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன். அந்த பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும்’’ என்பதாகும். காயத்ரி மந்திரம் சூரியனை குறித்தே உருவாக்கப்பட்டது. பரம்பொருளிடம் வேண்டுவதாகவே இது உள்ளது.

நாளை வரலட்சுமி விரதம், விரதம் இருப்பது ஏன்

 காயத்ரி மந்திரம் உலகுக்கு பொதுவானது. பொதுவான பரம்பொருளை தியானிக்க சொல்வதால் எல்லாரும் இந்த மந்திரத்தை உச்சரித்து பயன் பெறலாம். காலை, மதியம், மாலை மூன்று நேரமும் காயத்ரி மந்திரம் சொல்வது நல்லது. ஆலய வழிபாடுகளின் போது ஒவ்வொரு சன்னதிலும் இறை மூர்த்தத்துக்கு ஏற்ப காயத்ரி மந்திரம் சொன்னால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும். காயத்ரி மந்திரத்தை நம் இஷ்டத்துக்கு உச்சரிக்கக் கூடாது. 5 இடங்களில் நிறுத்தி ஜெபிப்பதே சரியான முறையாகும்.

முதலாவது நிறுத்தம் – ஓம்,

இரண்டாவது நிறுத்தம் – பூர் புவஸ்வஹ.

மூன்றாவது நிறுத்தம் தத் ஸ்விதூர் வரேணியம்.

நான்காவது நிறுத்தம் – பர்கோ தேவஸ்ய தீமஹி.

ஐந்தாவது நிறுத்தம் ‘‘தியோ யோ நஹ ப்ரசோதயாத்’’

என்று இருத்தல் வேண்டும்.

 காயத்ரி மந்திரத்தை முதலில் சொல்லத் தொடங்கும் போது 9 தடவை சொல்ல வேண்டும். அடுத்த வாரம் அதை 18 ஆக உயர்த்த வேண்டும். மூன்றாவது வாரம் 27 தடவை சொல்ல வேண்டும். இப்படி ஒன்பது ஒன்பதாக உயர்த்தி தினமும் காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லும் வகையில் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காயத்ரி மந்திரம் 27 அட்சரங்களைக் கொண்டது.

vai2

 இது ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் மிக, மிக சக்தி வாய்ந்தவை. காயத்ரி மந்திரத்தில் இருந்துதான் வேதங்கள் தோன்றின. எனவே வேதங்களுக்கு மூலமாக காயத்ரி மந்திரம் கருதப்படுகிறது. காயத்ரி மந்திரம் எப்படி தோன்றியது என்ற கேள்வி உங்கள் மனதில் ஏற்படலாம். ஒரு சமயம் ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்தனர். அப்போது ‘‘த்ரயீ’’ என்ற வேதசாரம் கிடைத்தது. அதை காரணமதி எனும் மத்தினால் கடைய அது காயத்ரி வடிவமாக உருவம் பெற்றது.

 காயத்ரி தேவிக்கு 5 முகங்கள் உண்டு. பஞ்ச பூதங்களும் காயத்ரி தேவியில் அடக்கம் என்பதை இந்த உருவம் உணர்த்துகிறது. காயத்ரி தேவி ரத்தின மாலை அணிந்து, கமண்டலம், தாமரை, ஜெபமாலை ஆகியவற்றை ஏந்தி தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பாள். காயத்ரி மந்திரத்துக்கு சாவித்திரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. எனவே இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், மதியம் சாவித்திரிக்காகவும், மாலையில் சரஸ்வதிக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

 காலையில் காயத்ரிதேவி குழந்தை வடிவமாக காட்சி அளிப்பாள். அப்போது அவள் ரிக் வேதம் உச்சரிப்பாள். மதியம் நடுத்தர வயது பெண் போல காயத்ரி காட்சி அளிப்பாள். அப்போது அவள் யஜுர் வேதத்தை சொல்வாள். மாலையில் காயத்ரி முதிர்ந்த பெண்ணாகத் தோன்றுவாள். அப்போது சாமவேதம் உச்சரிப்பாள். இதன் மூலம் காயத்ரி எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் ஆகிறாள். ஆகையால் எப்போதும் காயத்ரி மந்திரத்தை உச்சரித்த பிறகே மற்ற மந்திரங்களை சொல்ல வேண்டும்.

mangalabigai amman

காயத்ரி ஜெபம் செய்யாமல் வேறு எந்த மந்திரம் கூறினாலும், ஆராதனை செய்தாலும் அது பலன் தராது விடும் என்பார்கள். காயத்ரி மந்திரம் சொல்வதற்கு மனத்தூய்மையும் உடல் தூய்மையும் மிக, மிக அவசியம். சுத்தமான இடத்தில் இருந்து தான் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

காயத்ரி மந்திரத்தை எப்போது சொல்லத் தொடங்கினாலும் 27 தடவை சொல்வது மிகவும் நல்லது. காயத்ரி மந்திரத்தை வெளியில் கேட்கும்படி உச்சரித்தால் 10 மடங்கே பலன் கிடைக்கும். உதடுகள் மட்டும் அசைந்தபடி கூறினால் 100 மடங்கு பலன் கிடைக்கும். ஆனால் உதடு கூட அசையாமல் மனதுக்குள் காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் ஆயிரம் மடங்கு பலன் உண்டாகும். வீட்டில் இருந்து சொல்வதை விட ஆலயத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் அப்போது கிடைக்கும் பலன் அளவிட முடியாதது.

குறிப்பாக அம்மன் சன்னதிகளில் கிழக்கு நோக்கி அமர்ந்தபடி அல்லது நின்றபடி காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் இந்த ஜென்மத்து தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6 மணி வரையிலான ராகு காலத்தில் காயத்ரி மந்திரத்தை கூறினால் நாம் எதிர்பார்க்கும் பலன்கள் வந்து சேரும்.

தினமும் காயத்ரி மந்திரம் சொல்லி வருபவர்களுக்கு ‘‘ஆத்மசுத்தி’’ கிடைக்கும். ஆலயத்தின் எந்த பகுதியில் நின்றும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆனால் மனம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறும் போது யாக சாலைகள் அருகில் அமர்ந்து காயத்ரி மந்திரம் சொல்லாம். இது 100 மடங்கு பலன்களை அதிகமாக தரும். காயத்ரி மந்திரத்தை சொல்ல, சொல்ல குடும்பத்தில் மங்களம் உண்டாகும். அதோடு நான்கு வேதங்கள் ஓதியதன் பலன் கிடைக்கும்.

ஆலயத்துக்கு செல்லும் போது, அந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்துக்கு மறுநாள் காயத்ரி ஜெபம் வரும். அன்று 1008 தடவை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்பது மரபு. காயத்ரி மந்திரத்தை நீங்கள் எந்த அளவுக்கு ஜெபிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அறிவுக் கூர்மை உண்டாகும். இவ்வுலகில் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வல்லது காயத்ரி மந்திரம் மட்டுமே என்று தேவிபாகவதம் சொல்கிறது.

‘‘மூன்று வருடங்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வருவர், வாயு போல சுதந்திரமாக இயங்கி பிரம்மத்தை சென்று அடைவார் என்று மனுஸ்மிருதி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு செல்லும் போதும், மற்ற நேரங்களிலும் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து மனம் பக்குவப்பட்டு விட்டால், அவர் எந்த ஒரு செயலிலும் நிதானமாகவும் தெளிவாகவும் இருப்பார். காயத்ரி மந்திரத்தை தினமும் மூன்று நேரம் உச்சரிப்பவர்கள் எல்லா விஷயங்களிலும் மிகச் சரியான முடிவு எடுப்பவர்களாக இருப்பார்கள்.

சத்தியவான் உயிரை காப்பாற்ற சாவித்திரி தேவிக்கு காயத்ரி மந்திரமே உதவியது. முனிவரின் சாபத்துக்கு எதிராக கால கதியையே ஸ்தம்பிக்க வைத்த நளாயினிக்கு உதவியது காயத்ரி மந்திரமே. மும்மூர்த்திகளின் சோதனையை அனுசுயா தேவி அறிந்து கொள்ள காயத்ரி மந்திரமே உதவியாக இருந்தது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர்-லட்சுமணர் இருவரு¢க்கும் சோர்வு ஏற்படாமல் இருக்க காயத்ரி மந்திரமே உதவியாக இருந்தது.

சுருக்கமாக கூறினால், அவரவர் கோரிக்கைக்கு ஏற்ப, அந்தந்த தெய்வத்துக்கு உரிய காயத்ரி மந்திரங்களை ஆலய வழிபாடுகளின் போது சன்னதி முன்பு அமர்ந்து ஜெபித்தால், வாழ்வில் எந்த கஷ்டமும் வராது. சில ஆலயங்களில் காயத்ரி தேவிக்கு தனி சன்னதி இருக்கும்.  காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் முழுமையான பலன்களைப் பெறலாம். கடவுளுடன் மிக, மிக எளிமையாக நம்மை இணைப்பது காயத்ரி மந்திரங்கள்தான்.

The post மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் அனைத்தும் கிடைக்க!

$
0
0

 மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் அனைத்தும் கிடைக்க!

அசுரர்களையும், அவர்களின் தலைவன் சூரபதுமனையும் வதம் செய்து சினம் தணிந்து வீற்றிருப்பதால், இத்தலத்திற்கு தணிகை என பெயர் வந்தது. முருகப்பெருமான், ஞானவேல் பெற்றதன் மூலம் ஞானசக்தியும், தெய்வயானையை மணம் புரிந்து கிரியா சக்தியும், வள்ளி மலையில் வேடுவ அரசன் நம்பி அரசனால் வளர்க்கப்பட்ட வள்ளியை வலிந்து சென்று திருவிளையாடல் புரிந்து தமிழ் இலக்கண முறைப்படி திருமணம் செய்து கொண்டதால் இச்சாசக்தியும் பெற்றார்.

thiruthani

 முருகனுக்கு ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சா சக்தி ஆகிய முழுமை குணம் நிறைந்த வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிப்பதே திருத்தணியின் சிறப்பாகும். திருதணிகை மலையின் வடக்கே உள்ள மலை வெண்ணிறமாக உள்ளதால் பச்சரிசி மலை என்றும், தெற்கே உள்ள மலை கருநிறத்துடன் உள்ளதால் பிண்ணாக்கு மலை என்றும் கூறப்படுகிறது.

 ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் விதமாக 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் அபராஜிதவர்மன்(கிபி 875-893) எனும் பல்லவ மன்னனின் கல்வெட்டும், பராந்தகச்சோழன்(கிபி 907-953) காலத்து கல்வெட்டும் காணப்படுகிறது. மலைக்கோயில் கட்டிடகலையானது சாளுக்கியர் காலக்கட்டிடக்கலையை சார்ந்தது. 16 சைவகோயில்களும், 4 சக்தி திருதலங்கள், 6 வைணவ கோயில்கள், 1 மடாலயம் என மொத்தம் 27 கோயில்கள் இதனுடன் இணைந்த உப கோயில்களாகும்.

 தமிழில் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கிய நூல் திருமுருகாற்று படையிலும் முருகப்பெருமான் புகழை சிறப்பாக குறிப்பிட்டுள்ளனர். தமிழ்கடவுள் முருகன் என்பதை கடைச்சங்க தலைவராக திகழ்ந்த புலவர் நக்கீரர் தனது பாடலில் அழகாக எழுதியுள்ளார். அருணகிரிநாதர் இயற்றிய 64 திருப்புகழ் பாடல்களில் திருத்தணி முருகன் பெருமைகள் குறித்து விளக்கியுள்ளார். முருகன் தலங்களில் ஐந்தாம் படையான குன்று தோராடல் என்னும் திருத்தணியே சிறந்த திருத்தலமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.

  முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருத்தணி. அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடம் இத்திருத்தலம்.

  திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

 திருத்தணிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் சரவண பொய்கையில் நீராட வேண்டும். தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து, திருநீறு பூசி உத்திராட்சம் போன்ற சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏறவேண்டும். மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை பாடுவது சிறப்பு. மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்தில் உள்ள கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும். பின்னர் தெற்கில் உள்ள இந்திர நீலச் சுனையை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் சென்று ஆபத்சகாய விநாயகர், அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்கள், குமாரலிங்கேஸ்வரரை வணங்க வேண்டும்.

  பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும், வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும். முருகன் சன்னதியில் திருநீறு, குங்குமப் பிரசாதங்களுடன் திருமேனிப் பூச்சு என்னும் சந்தனமும் வழங்கப்படும். இதை உட்கொண்டால் சகலவிதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.

 தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடு என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு. முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று. இந்த கோயிலில் அமைந்திருக்கும் தங்க விமானம், கோயிலின் சிறப்பை மேலும் மெருகேற்றியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழாவுக்கு அதிகளவில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு அமைந்துள்ள இலவச தங்கும் விடுதி, நவீன வசதிகளுடன் கூடிய கோயில் காட்டேஜ் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து திருத்தணி முருகனின் அருள் பெற்று செல்கின்றனர்.

 ஆடிக்கிருத்திகை நன்னாளில் திருத்தணி முருகனை வழிபடுதல் சாலச்சிறந்தது. திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சித்து இருநெய் விளக்கை முருக பெருமானுக்கு ஏற்றி வழிபாடு செய்வதன்மூலம் சகல நன்மைகளையும் பெறலாம். முருகப் பெருமானுக்கு உகந்த இந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும், விவசாயம் மேன்மையடையும், உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும், நல்ல வாழ்க்கைத்துணை அமையும், மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்

The post மக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் அனைத்தும் கிடைக்க! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

அனுமனே!…நானே நரசிம்மன்! நானே ராமன்!

$
0
0

அனுமனே!… நானே நரசிம்மன்! நானே ராமன்!

ஆனந்தம் அள்ளித்தரும் ஆஞ்சநேயன்

  சோளிங்கர் பெரிய மலையில் யோக நரசிம்மரை தரிசித்த பின் அந்தக் கோயிலிலிருந்தே பார்த்தால், சற்று உயரம் குறையான இன்னொரு மலையும் அதன் உச்சியில் ஒரு கோபுரமும் தெரியும். இந்த மலையில் அனுமன் கோயில் கொண்டுள்ளார். ராமர் அவதார காலத்து அனுமனுக்கு அதற்கு முந்தையதான நரசிம்மருக்காக உருவான மலைக் கோயிலுக்கு நேர் எதிரே கோயில்! இது எப்படி சாத்தியம்?. தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின் வைகுண்டத்துக்கு எழுந்தருள ஆயத்தமானார் ராமர். அனுமன், தானும் அவருடன் வருவதாகக் கோரினார்.

நாராயணா...நாராயணா... திருநாமத்தின் பெருமை

அவனுக்கு ராமர் ஒரு விஷயத்தை நினைவூட்டினார். அதாவது, அசோக வனத்தில் ராமதூதனாக வந்து தனக்கு ராவணனிடமிருந்து மீளக்கூடிய நம்பிக்கையை அளித்த சந்தோஷத்தில் அனுமனுக்கு ‘சிரஞ்சீவி’ பட்டமளித்து மகிழ்ந்தாள் சீதை. இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் அனுமன் மட்டும் நித்தியவாசியாக நிலைத்திருப்பான். அந்த ஆசியால், தனக்கு என்றென்றும் ராமநாமம் சொல்லிக் கொண்டிருக்கும் பாக்கியமும் யார் ராமநாமத்தை ஜபித்தாலும் அதைக் கேட்டுக் கொண்டேயிருக்கும் பாக்கியமும் கிடைத்திருப்பதாக எண்ணி சந்தோஷப்பட்டான் அனுமன்.

பன்னிரண்டு ராசிகளுக்கான பரிகார மந்திரங்கள்

‘‘அவ்வாறு நீ சிரஞ்சீவியாக வாழ்ந்து ஒவ்வொரு யுகத்திலும் உலக மக்களுடைய துயர்களைத் துடைக்க வேண்டும் என்பது உனக்கேற்பட்ட விதி. அது மட்டுமல்ல; உனக்கு நான் இடும் இன்னொரு பணியும் இருக்கிறது. அதாவது, கடிகாசலம் எனப்படும் அரியவகை மூலிகைகள் நிறைந்த மலைமீது ஏழு ரிஷிகள் தவமிருக்கிறார்கள். அவர்களுக்கு அசுரர்களால் பெருந்தொல்லை உண்டாகிறது. அந்த இடரைக் களைந்து, அவர்கள் நோக்கம் நிறைவேற நீ உதவ வேண்டும்.

இந்த ஒரு பணியைத் தவிர அடுத்தடுத்து உனக்குப் பல பணிகள், உன்னால் நிறைவேற்றப்பட காத்திருக்கும். ஆகவே நீ என்னுடன் வருவதை விட, என் மக்களுடைய சேவைக்காக நீ பூவுலகிலேயே நீடித்திருப்பதுதான் என் விருப்பம்,’’ என்று ராமன் சொன்னவுடன் அப்படியே அவர் பாதங்களைத் தொழுது அவர் இட்ட ஆணையை சிரமேற்கொண்டான், அனுமன். அதன்படி, கடிகாசலம் வந்தான். அங்கே மனங்கசிந்து நாராயணனை நோக்கி தவம் இயற்றும் சப்த முனிகளைக் கண்டான். பகவான் மஹாவிஷ்ணுவை நரசிம்ம கோலத்திலேயே தரிசிக்க வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டான்.

கடன் தொல்லை போக்கும் பஞ்ச நரசிம்ம சேஷ்த்ரம்

நரசிம்மர் அவதாரம் எப்படியிருக்கும்? அந்தத் திருக்கோலத்தைத் தன்னாலும் காண இயலுமா என்று சிந்திக்கத் தொடங்கினான் அனுமன். அதே சமயம், காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் அங்கே தோன்றி ரிஷிகளின் தவத்தைக் கலைக்க முயற்சித்தார்கள். அவர்களை சீண்டி, வேதனைப்பட வைத்து சந்தோஷப்பட்டார்கள். உடனே அனுமன் அவர்களைத் தாக்க முற்பட்டான். ஆனால், சற்று நேரத்திலேயே அவன் சோர்ந்து விட்டான். தன் பலமெல்லாம் எங்கே போயிற்று என்று அவனுக்கே திகைப்பான சந்தேகம். உடனே ராமனை தியானித்தான். ராமன், நாராயணனாக அவன்முன் தோன்றினார்.

தன்னுடைய சங்கு, சக்கர ஆயுதங்களை அவனுக்குக் கொடுத்தார். உடனே அவற்றால், வெகு எளிதாக அரக்கர்களின் தலைகளைக் கொய்து ரிஷிகளுக்கு நிம்மதி அளித்தார், அனுமன். பூரண சுதந்திரத்துடன் தொடர்ந்து தவத்தில் ஈடுபட்ட முனிவர்களுக்கு, பகவான் நரசிம்மராகக் காட்சியளித்தார். அதை அனுமனும் காண நேர்ந்தது. ராமனுடைய சாந்தமான முகத்தையே கண்டு களிப்பெய்திருந்த அனுமன், நரசிம்மரின் கோபாவேச தோற்றம் கண்டு பிரமித்தான். ராவணனைவிடக் கொடியவனாக இரண்யன் இருந்திருப்பான் போலிருக்கிறது, அதனால்தான் இப்படி ஒரு கோலத்தை அண்ணல் மேற்கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான்.

ராமா ராமா - ராமனின் திருநாமமே இனிப்பானது!!!

ரிஷிகளுக்கு ஆசியளித்த நரசிம்மர், அனுமனை நோக்கி, ‘‘அனுமனே, நானே, நரசிம்மன்; நானே, ராமன். என்னைக் குறித்து தவமிருந்த மாமுனிவர்களைக் காத்ததுபோல, இந்த உலகவாழ் மக்களையும் நீ காக்க வேண்டும். அதற்கு, எனக்கு முன்னால் யோக ஆஞ்சநேயராக அமர்ந்து அவர்களுடைய தீராப் பிணிகளையும் தீர்த்து அவர்கள் வாழ்வில் ஆனந்தமளிக்க வேண்டும். என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் உன்னையும் தரிசிப்பார்கள். என்னோடு அவர்கள் வேதனை தீர ஒத்துழைப்பாயாக,’’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

நரசிம்மர் திருப்பாதங்களில் தன் சிரம்படிய வணங்கிய அனுமன், ராமனாகிய அந்த நரசிம்மர் ஆணைப்படி அவருக்கு எதிரேயே ஒரு மலை மீது கோயில் கொண்டான். அதுதான் சோளிங்கர் சின்னமலை. இந்த மலை 350 படிகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. இங்கு உச்சியில் 50 படிகள் செங்குத்தாக ஏறுகின்றன. இந்த மலையில் சஞ்சீவி செடிகள் இருப்பதாகவும் அதன் இலைகளை உட்கொண்டால் எல்லாவகையான உடல் நோய்களும் தீரும் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், அதை சரியாக அடையாளம் காட்ட யாரும் இல்லாததால் அந்த சோதனையில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கையும் விடுக்கிறார்கள். அதைவிட, மூச்சிறைக்க மலையேறும்போது, சுற்றுப் பகுதியிலிருந்து வரக்கூடிய அந்த மூலிகையின் வாசத்தை உள்ளிழுத்துக் கொண்டாலே போதும், அதுவே உடல் நோய்களை விரட்டிவிடும் என்றும் யோசனை சொல்கிறார்கள். இந்த மலையில் ‘டோலி’ சேவை உண்டு.

உச்சியில் அனுமன், யோக ஆஞ்சநேயராக வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் திவ்ய தரிசனம். சங்கு, சக்கரம் ஏந்தி, அரக்கர்களை மட்டுமல்ல, அரக்க குணங்களையும் அறவே அழித்தொழிக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். தம் பக்தர்களின் எந்தச் சிறு குறையையும் விட்டுவைக்காமல் முற்றிலுமாக தீர்த்து வைக்கும் கருணை அந்த முகத்தில் தெரிகிறது. அந்த முக தரிசனமே மனதில் தன்னம்பிக்கையையும் உறுதியையும் வளர்த்து விடுகின்றன.

மஹாவிஷ்ணுவைப் போலவே தன்னையும் சங்கு, சக்கரம் தரிக்க வைத்த பெருமைக்கு உள்ளாக்கிய ஸ்ரீராமபிரானுக்கு நன்றி சொல்லும் கனிவும் அதேசமயம், அந்தப் பெருமையை மிகுந்த தன்னடக்கத்துடன் ஏற்கும் பாவமும் தெரிகின்றன. ஒரு கரம் சங்கு, இன்னொரு கரம் சக்கரத்தைத் தாங்கி நிற்க, கீழ் வலது கரம் ஜபமாலையை ஏந்தியிருக்கிறது. கீழ் இடக்கை ஜபசங்க்யை எனப்படும் ஜப எண்ணிக்கையை அளவிடும் பாணியில் அமைந்துள்ளது.

இங்கே ராமர் தனிச் சந்நதியில் அழகுற கொலுவிருக்கிறார். சீதை, லட்சுமணனுடன் அவர், அனுமனுக்காகவே இங்கே அர்ச்சாவதாரமாகக் காட்சியளிக்கிறார். அதோடு, ரங்கநாதருக்கும் தனிச் சந்நதி உள்ளது. இந்த அமைப்பு, குல தெய்வ அல்லது குல குரு வழிபாட்டுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்றே சொல்லலாம். ஆமாம், அனுமனின் தெய்வம் ராமன்; ராமனின் குல தெய்வம் ரங்கநாதர்! குலதெய்வ வழிபாட்டு மரபு இங்கே அனுஷ்டிக்கப்படுவதைக் காணும்போது மெய் சிலிர்க்கிறது.

 யோக ஆஞ்சநேயர் உற்சவர் விக்ரகம் நின்ற கோலத்தில் எழில் தரிசனம் தருகிறது. இவருக்கும் சதுர்புஜம் – சங்கு, சக்கரம், ஜபமாலை, ஜபசங்க்யை. இந்த யோக ஆஞ்சநேயரின் பார்வை நேராக, எதிரே பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் பாதத்தை நோக்கியபடி இருப்பது அற்புதம். நிரந்தரமாய், நரசிம்மரின் பாத தரிசனம்!

 ஆஞ்சநேயரை வழிபட்டுப் படியிறங்கும்போது நம் மன பாரங்களும் துயர்களும் ஏன், நோய்களும்கூட நம்மைவிட்டு இறங்கியிருப்பதை உணர முடிகிறது. பொதுவாகவே, சோளிங்கர் அமானுஷ்ய பாதிப்புகளைத் தீர்க்கும் தலமாகத் திகழ்கிறது. இந்த ஊருக்கு வந்து, தினமும் தக்கான் குளத்தில் நீராடி, பெரிய மலையேறி நரசிம்மப் பெருமாளையும் சிறிய மலையேறி ஆஞ்சநேயரையும் தரிசித்தால் எல்லா பிரச்னைகளும் ஆவியாகி மறையும் என்பது கண்கூடு. தினமும் அந்த அற்புதம் நிகழ்வதைக் காண முடிகிறது.

 ஏகசிலா பர்வதம் என்று இந்த இரு மலைகளையும் தனித்தனியே குறிப்பிடுகிறார்கள். அதாவது, பாறைகளை அடுக்கினாற்போலவோ, பிளவுபட்டோ, மலைப்பாறைகளை சேர்த்தார்போலவோ இல்லாமல், ஒரே கல்லில் அமைந்த சிலைபோல இவை அமைந்திருக்கின்றன. அகோபில மலைதான் பரந்தாமன் நரசிம்மராக அவதாரம் எடுத்த தலம்.  ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள அந்த திவ்ய தேசத்துக்கு அடுத்தபடியாக, ரிஷிகளின் விருப்பத்திற்கிணங்கி, மலைமீது நரசிம்மர் கோயில் கொண்டிருப்பது தமிழ்நாட்டிலுள்ள இந்த சோளிங்கரில்தான்.

1781ம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இரண்டாவது கர்நாடகப் போர் நடைபெற்றது. அப்போது தரையளவில் இருந்த பல கோயில்கள் பாதிக்கப்பட்டன; ஆனால் இந்த மலைக் கோயில்கள் மட்டும் எந்தத் தாக்குதலுக்கும் உட்படவில்லை என்பதும் மலைமீதான கோயில் பொக்கிஷங்களைக் சூறையாட எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

 பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், மணவாள மாமுனிகள், ராமானுஜர் ஆகியோர் இந்தத் திருத்தலத்தைப் பாடிக் கொண்டாடியிருக்கிறார்கள். காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருத்தணி, வாலாஜாபாத், சித்தூர் என்று பல முனைகளிலிருந்தும் சோளிங்கர் தலத்தை அடைய நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

The post அனுமனே!… நானே நரசிம்மன்! நானே ராமன்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Weekly Numerology From 08th August To 14th August 2017

$
0
0

Weekly Numerology From 08th August To 14th August 2017

 

School For De Soul Therapy OK, Welcomes you to this week, scientific personality profiling. There is a saying, Know Thy to Know Others – which means , knowing the qualities possessed by you will be the gate for you to know the world and others. Let’s see what’s in store in for each NUMBERS FOR THE WEEK 32.

NUMBER 1 – (01,10,19,28)

STRENGTH:- you are a Born leader, you can make the world to revolves around you. You are a person of very strong character, you possess highest creativity , you possess Good Management and Leadership skills, you love being Independent & commanding. You are Action result oriented. You have high Inventive& Creativity

CHALLENGES:- you become, Too authoritative , too demanding, you are adamant, you tend to boast too much, you lack flexibility, you tend to be Overly ambitious or high expectancy.

ONE:- You need to remain calm, focus on going deep within. It will be easier to control your emotions in any highly charged situation. Your commanding and negotiating skills will come very handy. A cool and objective approach will help you make the best decisions. Reach out to someone close who needs your assistance or advice.

NUMBER 2 – (02,11,20,29)

STRENGTH:- you Possess excellent analytical ability & Creativity. You have your own rules, goals and set own standards of life. You are a Self motivator of your own. You speaks precisely. You are Flexible. You play the Brilliant mind strategy.

CHALLENGES:- you are sentimental & emotional. Your Dependant nature make you sensitive & submissive. You change and Swings Easily. you lack courage & self confidence. You suffer a lot from Low self esteem. Your Inconsistency & bad discipline earns a bad reputation. You tend to Day dream a lot, you are very shallow Person.

TWO – You may have to balance your feelings of inferiority or insecurity. Don’t allow the jealousy and possessive to imbalance you. A more generous, trusting, and compassionate attitude brings the best results in any relationship.

NUMBER 3 – (03,12,21,30)

STRENGTH:- you are a Born leader & carries special DIVINE GRACE, you possess more divine blessings/ wisdom. You Prefers slow & Steady Growth . you Have charismatic personality, your words/speech/conversation carries special power. You are very Compassionate & man of principles , values. You Maintains discipline .you are a good natured , gentle and broad mind soul.

CHALLENGES:- you are very Emotional& impatience. You suffer from Poor Management of money. And Falls into the vicious trap of debts. Tends to be Very Conservative & lacks the will to change and adept. You tends to be very sentimental often.

THREE – You will be flooded with opportunities to shine. Friends, family, and co-workers will respond to your sincere and open attitude. Be strong and optimistic. This is a lucky week to be recognized for your creative imagination and willingness to help others. Spend as much time as possible doing those things you enjoy most. Expecting good results has a way of making your ideas come true.

NUMBER 4 – (04,13,22,31)

STRENGTH:- You are an Excellent communicator. You are Open-mind for change & growth. You are Practical and Generous, you are straight forward person, you are an excellent orator, you have charismatic personality. You can debate on almost anything. Your Deep analytical ability can make you see things in Unconventional way and bring solution from out of the box. You are a person of high Integrity. you likes to live life in a grand manner. If you can properly nurture yourself, you can raise to power or be a top most people person.

CHALLENGES:- You suffer from Ego. Your Secretive nature & rebellious personality pulls you into unwanted issue, you are highly impulsive& short-tempered . you are very Emotional. You Argue too much. You Lack diplomacy & planning.

FOUR- You may be feeling a strong desire to be the star of the show. This is absolutely possible if you can balance this powerful energy and not dominate others near you. Arguments are possible, but they have a way of clearing the air if you’re honest. Remember, you can make more progress with a big smile than you can by demanding cooperation at all costs.

NUMBER 5 – (05,14,23)

STRENGTH:- you are an Intelligent & witty person, you have strong will power, you are well planned and shrewd person, you have a loving charisma to attract people, you have the excellent gift of knowledge and wisdom especially on money rotation, investment from others.

CHALLENGES:- you sometimes have to battle with your own Dual nature, you tend to be cunning & secretive. You get into the habit of being too much hypo critical & sometimes behave very childish as well. You are inconsistent on money making ideas. You stuck into being very materialistic & easily falls prey to Speculation gambling. You suffer a lot coz of your Doubting nature & self esteem issue.

FIVE – You will have the time and space to express your views freely and with authority. The energy is strong and supports a desire for freedom and change. You’ll be happiest in situations that offer a great deal of variety. Travel is especially recommended. Friendships take first place over more practical, down-to-earth concerns. Volunteer your time to help others in any area where you want to make a difference.

NUMBER 6 – (06,15,24)

STRENGTH:- You are highly Intellectual & can Play brilliant Mind Strategy, you are very courageous, you tend to live life in grand way. You are compassionate and understanding person. You are very Religious. You are blessed with marital bliss. You carry the charisma to Attract wealthy & Business men. You can Connect with gurus. You are Blessed with the power to give birth to a prodigal son/daughter.

CHALLENGES:- you lacks will power. You are very Obstinate & unyielding. You should learn to balancing with contenting life. You should work on your Laziness. You are impulsive and emotional.

SIX – You’ll mix deep sensitivity to the energy around you with a deep concern for the welfare of your family. Trust your first instincts in any situation. Your inner voice is strong and true. Dreams can help you understand how you really feel about a particular situation. Your diplomatic skills are strong and you may be called upon to be a peacemaker. You can shine in creative projects. Time alone that includes music, prayer, or meditation can be especially rewarding.

NUMBER 7 – (07,16,25)

STRENGTH:- You are gifted with excellent Mindpowers. You are Inventive & intuitive person. You love the slow & steady approach. You are an Excellent communicator. You have the Magnetic Charisma. You are very straight forward person. You like Debating & in depth analysis. You can see things in Unconventional way. You Loves to live grand way. You have high Integrity.

CHALLENGES:- you tend to day Dream. Some time you behave in a Mysterious way. You fall into the web of Animosity, Self limiting doubts. unwanted fears about life. . You suffer from Inferiority complex & submissive nature. You suffer from small thinking or self esteem. You Lack discipline. You are very shallow Person & lazy .you lack consistency & being impatience. You tends to be quarrel some and criticize too much. You Lack courage & fighting spirit.

SEVEN:- You can be on an emotional roller coaster this week! You have a clear idea about what you want and need. At the same time, it may be difficult to share this when a need to protect your feelings is especially strong. It takes time to build trust, and if you don’t trust, you won’t be entirely open. The happiest times will be with your family close to home. Be very conservative with your money even if you’re feeling generous.

NUMBER 8 -(08,17,26)

STRENGTH:- you are a Knowledge treasure. You are Melancholic & meticulous . if harnessed well, you can go beyond any limit. You carry indepth Analytical thinking & creativity. You can be a path breaker or innovator or pioneer or reformer. You like to travels a lot. You love to keep meeting more new people. Your biggest strength is your keep learning Attitude. You like to Do in grand/ extravaganza. You carry lot of Noble qualities. You prefer Slow and steady approach. You are strong willed person.

CHALLENGES:- you prefers loneliness. You tend to extremists and not balanced. You needed to reminded about your powers and encourage to have big dream & do big things. You suffer from unwanted webs of Animosity, fear. And, it impact your willpower. You tend to be more Revolutionary & Rebellious. You should work on not being bogged into low level of thinking.

EIGHT – You’ll have the strength to work hard and be especially organized this week. The energy favors doing your homework in any subject of interest. Explore all your options before making a decision that will commit precious resources. You can give your all for another, but you need to be sure this is the best course. Sometimes doing nothing will lead to change while you save your money and time. Keep your sense of humor and find reasons to laugh!

NUMBER 9 – (09,18,27)

STRENGTH:- You are a great Warrior & intensive thinker. You are always full of energy and aggression. You carry the best Leadership qualities. You possess ROBUST NATURE. You are impulsive decision maker. You carry the dynamism & commanding skills. You are full of Courage & confidence. You like to be Independent . you have big heart and want to be more Service oriented. You are compassionate & kindhearted. You like to do larger than life cause.

CHALLENGES:- you get Angry easily and suffers from short temperament. You fall easily to negative web of circles. You goes into courting unnecessarily. Your Quarrelsome nature & sensitiveness will put you into lot of trouble often. You lack discipline in handling money & as well as other habits. You adamant nature will not want you to oblige anyone.

NINE:- You’re naturally lucky and restless. The energy this week supports a more serious and down-to-earth approach. Stay on schedule and make lists of what you want to accomplish. It would be wise to ignore distractions and avoid taking on extra assignments. Pay attention to your health and don’t delay necessary care. You may need to make some small but important changes to your eating habits. Consult professionals in any area you hope to protect or improve.

Your Astro Healer

Your Crystal Therapist

Your Lifestyle Guru

Om Kameswaraa

+91 8825596557

School For De Soul Therapy OK

The post Weekly Numerology From 08th August To 14th August 2017 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்யதகுந்த – செய்யக்கூடாத காலம் எது?

$
0
0

செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்யதகுந்த – செய்யக்கூடாத காலம் எது?

பரிகார காலம்:

 சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

vara4

பரிகாரம் செய்யகூடாத நேரம்:

 ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

aadi1

செவ்வாய் தோஷம் போக்க எளிய பரிகார வழிபாடு:

 செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது. செவ்வாய்க்குரிய கல்லான பவளக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்வது, செப்புப் பாத்திரங்களை உபயோகிப்பது போன்றவற்றால் செவ்வாயால் உண்டாகக்கூடிய தோஷங்கள் குறையும். செவ்வாய்க்கு செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் முருகனுக்கு உகந்தது என்பதால் முருகனின் திருவருளும் கிட்டும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான பரிகார மந்திரங்கள்

குறுக்குத்துறை முருகன்:

 திருநெல்வேலி நகரில் இருந்து தெற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் குறுக்குத்துறை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் காணப்படும் கற்பாறைகளில் இருந்து இறைவனின் உருவங்கள் உருவாக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படியே திருச்செந்தூர் கருவறை இறைவனின் திருமேனி இங்குள்ள கல்லில் வடிக்கப்பட்டது.

பித்ரு தோஷம் நீங்கும் ஆடி அமாவாசை திருத்தலங்கள்!

  எனவே திருச்செந்தூருக்கு செலுத்தும் காணிக்கைகளை இந்தத் திருத்தலத்தில் செலுத்தலாம் என்பது ஐதீகம். தினமும் நண்பகல் உச்சி காலத்தில் திருக்குட பூஜையும், இரவு பள்ளியறை வழிபாடும் நடக்கிறது. செவ்வாய் தோஷம் உடையவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று ஆற்றில் நீராடி, முருகப்பெருமானை வலம் வந்து வழிபட வேண்டும். இப்படி 11 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கி திருமண வாழ்க்கை கூடும்.  இந்தக் கோவிலுக்கு வந்து சஷ்டி விரதம் மேற்கொண்டால், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

The post செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்யதகுந்த – செய்யக்கூடாத காலம் எது? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

இந்த வார ஆன்மீக நிகழ்ச்சிகள்(8-8-2017 முதல் 14-8-2017 வரை)

$
0
0

இந்த வார ஆன்மீக நிகழ்ச்சிகள்  

(8-8-2017 முதல் 14-8-2017 வரை)

8-ந் தேதி (செவ்வாய்)

* சங்கரன்கோவில் சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு விழா.

நோய்களிலிருந்து அனுதினமும் காக்கும் மாரியம்மன்

9-ந் தேதி (புதன்)

* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.

* சங்கரன்கோவில் சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் காட்சியருளல்.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா, இரவு வெள்ளிக் குதிரையில் அம்மன் பவனி.vai2

10-ந் தேதி (வியாழன்)

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* சங்கரன்கோவில் சுவாமி-அம்மன் ஊஞ்சல் சேவை.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா.

* வடமதுரை சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

சக்தி பீடங்களில் சேதுபீடம் பர்வதவர்த்தினி அம்மன்

11-ந் தேதி (வெள்ளி)

* சங்கடஹர சதுர்த்தி.

* இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா.

* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* வடமதுரை சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் விடையாற்று உற்சவம்.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

இன்று ப்ருஹ்மஹத்தி தோஷம் நீக்கும் காமிக ஏகாதசி!

12-ந் தேதி (சனி)

* திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் பவனி வரும் காட்சி.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

* தேவகோட்டை ரங்க நாதர் புறப்பாடு.

* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

Shanishchara Jayanti - Birth ceremonies of saturn

13-ந் தேதி (ஞாயிறு)

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

* சகல முருகன் ஆலயங்களிலும் இன்று வழிபாடு செய்வது நன்மை தரும்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு மற்றும் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் பவனி.

* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

எவ்வேளையும் செவ்வேலையே நினை!

14-ந் தேதி (திங்கள்)

* கிருஷ்ணஜெயந்தி.

* திருநெல்வேலி டவுண் சந்தான கோபால நவ நீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவரணம்.Interesting unknown facts about Krishna Janma Bhoomi

 

The post இந்த வார ஆன்மீக நிகழ்ச்சிகள்(8-8-2017 முதல் 14-8-2017 வரை) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைக்கும் முத்தாரம்மன்

$
0
0

தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைக்கும் முத்தாரம்மன்

 உலகம் முழுவதும் வாழும் தென்மாவட்ட மக்களை ஒருங்கிணைக்கும் மையமாக விளங்குகிறது குலசை முத்தாரம்மன் கோயில். அறுபடை வீடுகளில் சக்திவாய்ந்த திருத்தலமாகத் திகழும் திருச்செந்தூர் அருகிலிருக்கிறது குலசேகரப்பட்டினம். இங்கே அம்மையும் அப்பனுமாக முத்தாரம்மனும் ஞானமூர்த்தீஸ்வரரும் குடிகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

mutharaman

முத்தாரம்மன்:

 இந்தியா முழுவதும் ‘தசரா பண்டிகை’ கொண்டாடப்பட்டாலும் ஒரு சில இடங்களில்தான் மிகச்சிறப்பாகவும் தனித்தன்மையுடனும் கொண்டாடப்படுகின்றது. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற இடம்தான் குலசை என்கிற குலசேகரப்பட்டினம்.

 நவராத்திரி திருவிழா தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது இங்கு மட்டுமே! தசரா பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இங்கு பன்னிரண்டு நாள்கள் கொண்டாடப்படுகிறது. குலசேகரப் பாண்டியன் என்ற மன்னனின் நினைவாக இந்த ஊர் குலசேகரப்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே கோயில் கொண்டுள்ள முத்தாரம்மன் – ஞானமூர்த்தீஸ்வரர் சுத்த சுயம்புவாகத் தோன்றியவர்கள். இங்கு இருந்த சுயம்பு விக்ரகங்களை வழிபட்டு வந்த மக்களுக்கு, ‘பெரிய திருமேனிகளில் வழிபட முடியவில்லையே’ என்ற குறை இருந்தது. உலகையே ஆளும் அம்மன், மக்களின் உள்ளக் குறிப்பைக்கூட அறிய மாட்டாளா என்ன?

ஞானம், அறிவு, கல்வியில் மேம்பட வேண்டுமா

முத்தாரம்மன்- ஞானேஸ்வரர்:

 ஒரு நாள் இரவு கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன்,’ குமரி மாவட்டம், மயிலாடியில், சிற்பி சுப்பையா ஆசாரி என்பவர் வசித்து வருகிறார். அவரிடம் சென்று, எங்களின் பெரிய திருமேனியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறி மறைந்தாள்.

 இதைப்போலவே, சிற்பி சுப்பையாவின் கனவில் அம்மை அப்பன் தோன்றி, “எங்கள் வடிவங்களை ஒரே கல்லில் வடித்தெடுத்து, வருகின்ற மக்களிடம் வழங்கு” எனக் கூறி மறைந்தனர். தூக்கம் கலைந்து எழுந்த ஆசாரியார், இது என்ன விந்தை… இப்படியும் நடக்குமோ என ஆச்சர்யப்பட்டார். ஆனால், முதல் நாள் கனவில் கூறியது போலவே கோயில் அர்ச்சகருடன் ஊர்மக்களும் இணைந்து வந்து, தங்களது கோரிக்கையை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைச் சிரமேற்கொண்டு செய்துமுடித்தார். உயிரோட்டம் மிக்க இந்த சிலைகளை 1934-ல் பிரதிஷ்டை செய்தனர்.

sarvasakthi amman

 அம்மன் வலக்காலை மடக்கிய நிலையில், நான்கு கைகளோடு சிங்கப்பல் முகத்துடனும், அப்பன் இடக்காலை மடக்கிய நிலையில் இரண்டு கைகளோடும் காட்சியளிக்கின்றனர். அம்மையும் அப்பனும் வடதிசை நோக்கி அமர்ந்து காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின், முத்தாரம்மன் கோயிலுக்கு வந்து வணங்குவது வழக்கம். காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு காட்சி அளித்ததைத் தொடர்ந்து இங்கு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் எழுப்பப்பட்டது.

முத்து, மரகதம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், வைடூரியம், பவழம், மாணிக்கம், வைரம் ஆகிய நவரத்தினங்களில் முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமல் தானே ஒளிவிடும் தன்மை கொண்டது. அதனால்தான், இங்கு தோன்றிய அம்மன் ‘முத்தாரம்மன்’ என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்கு இங்கு நான்கு கால பூஜை. விசேஷ நாள்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி. சித்திரை விஷு மற்றும் நவராத்திரி இங்கு விசேஷம். தசரா திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் அன்னை ஒவ்வொரு திருக்கோலத்தில் காட்சி தருவாள்.

 மக்களுக்கு வரும் தீராத வியாதிகளை எல்லாம் முத்தாரம்மன், தீர்த்து வைப்பாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. பிரார்த்தனைகளை பலித்ததைத் தொடர்ந்து அவர்கள் தசரா திருவிழாவில் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அம்பாளுக்கு செவ்வரளி மாலை வாங்கிச் சார்த்தி பூஜை செய்தால், விரைவில் திருமணம் கைகூடும்.

The post தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைக்கும் முத்தாரம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில்

$
0
0

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் 

கோபுர தரிசனம் கோடி அருள்மிகு

வைத்தீஸ்வரன் கோவில்

 இந்தியாவில் கிரக, விஞ்ஞான பூர்வமான ஆகர்ஷண சக்திகள் வாய்ந்த பல ரகசியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் விந்திய மலை. இம்மலைத் தொடருக்கு தெற்கில் உள்ள பூமி, அங்கார பூமி என்றும், இங்கு செவ்வாயின் தோஷம் அதிக அளவில் ஏற்படாது என்றும் புராதன நூல்களில் கூறப்பட்டுள்ளன.

 இதற்கு காரணம், செவ்வாயின் சாரப்பாதையில் இருந்து விந்திய மலைக்கு தெற்கே உள்ள பூமிப்பகுதி, விலகி இருப்பதே. இந்த உண்மையை அறிந்த நமது பெரியோர்கள், செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த யந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

 சீதையைத் தேடிக்கொண்டு, தம்பி லட்சுமணனுடன் வனவாசம் வந்த ஸ்ரீ ராமபிரான், சீதா தேவியை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக போரிட்டு, உயிர் துறந்த ஜடாயுவுக்கு, திருப்புட்குழி என்ற புண்ணிய தலத்தில் அந்திம தகனக் கிரியைகளைத் தன் தொடை மேலேயே செய்துவிட்டு, அதற்குப்பின் செய்ய வேண்டிய தினச்சடங்குகளை வைத்தீஸ்வரன் கோவிலில் செய்ததால், மேலும் இத்திருத்தலம் புனிதம் பெற்று, புள்ளிருக்கும் வேளூர் எனச் சிறப்புப் பெயருடன் திகழலாயிற்று.

 மேலும், அங்காரகன் என்று புகழ்பெற்ற செவ்வாயும் இத்திருத்தலத்தில் ஒரு சமயம் தவம் செய்ததால், செவ்வாய் தோஷ பரிகார பலம் இந்த சேத்திரத்திற்கு மேலும் அதிகமாயிற்று.

 செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் திருக்கோவிலுக்கு வந்து, இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவனையும், வணங்கி, தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி, தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.

 ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லதுஅவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும்.

 செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி ஜோதிடம். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.

 ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர் தையல்நாயகி. மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார். வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.

கோவில் வரலாறு :

 செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான “தொழுநோய்’’ வந்ததாகவும் அதனை போக்க சிவ பெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது. ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில் இருந்து தூக்கி கொண்டு போகும் பொது , ராவணனை தடுத்த சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயுவின் உடல் கீழ் விழுந்தது. அதனை கண்ட ராமன் மற்றும் அவர் தமையன் இலக்குமணன் உடலை கண்டு அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர். இந்த சிதை இக்குளத்திற்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குளம் “சடாயு குளம்’’ என்று அழைக்கப்படுகிறது.

 அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில் கலந்த அமிர்தத்தால் அபிஷேகம் சேயும் போது அந்த அம்ரிதம் சிதறி குளத்தில் விழுந்தது. ஆதலால் இத்திருக்குளம் “சிதர்கள் அம்ரிதா தீர்த்தம்’’ என்ற பெயர் பெற்றது.

கோவிலின் சிறப்பம்சம் :

 இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது.

 இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அணைத்து நோய்களும் தீர்வாக உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால் தன்வந்திரி உள்ளார். மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.

 சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை குணபடுத்தும் வல்லமை பெற்றது இத்திருத்தலம். மேலும் இத்தலத்தில் கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும். இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் உள்ளார். இந்த சினை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம்

The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

நவகிரக தோஷங்களும் எளிய பரிகாரங்களும்…

$
0
0

நவகிரக தோஷங்களும் எளிய பரிகாரங்களும்…

சூரியன்:

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும் சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப் பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால் ஆன மாலையை அணிவித்து, கோதுமையினால் இனிப்பு செய்து நைவேத்தியம் செய்து, சூரிய காயத்ரி பாராயணம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.

சந்திரன்:

சந்திரனால் தோஷம் ஏற்பட்டால், சந்திர தசை மற்றும் சந்திர புக்தியில் திங்கட்கிழமை விரதம் இருந்து அம்பிகையின் திருவுருவப் படத்துக்கு வெள்ளை அரளி மலர்ச் சரம் சாத்தி, பால் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்திர காயத்ரியைப் பாராயணம் செய்து வந்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

chandra grah2

செவ்வாய் தோஷ நிவர்த்தி:

செவ்வாயால் தோஷம் ஏற்பட்டால், செவ்வாய் தசை மற்றும் புக்தி காலங்களில் செவ்வாய்தோறும் விரதம் இருந்து, செவ்வாய் பகவானுக்குச் செண்பக மலரால் அர்ச்சனை செய்து, வெண் பொங்கலும் துவரையும் நைவேத்தியம் செய்து, செவ்வாய் காயத்ரியைப் பாராயணம் செய்து, முருகப்பெருமானை வணங்கி வர செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகும்.

பன்னிரண்டு ராசிகளுக்கான பரிகார மந்திரங்கள்

புதன்:

புதனால் தோஷம் ஏற்பட்டால், புதன் தசை, புதன் புக்தி காலங்களில், புதன்கிழமை விரதமிருந்து, வெண் காந்தள் மலர் தூவி, புளி சாதம் படைத்து, புதனின் காயத்ரி மந்திரத்தை 24 முறை பாராயணம் செய்து ஸ்ரீமகா விஷ்ணுவை வழிபட புத பகவானின் பரிபூரண அருளும், சிறந்த அறிவும், கல்வியும் பெறுவார்கள்.

நவகிரக தோஷங்களை நீக்கும் சங்கடகர சதுர்த்தி

குரு:

குருவால் தோஷம் ஏற்பட்டால், குரு தசை மற்றும் புக்தி காலங்களில், வியாழக்கிழமை விரதமிருந்து முல்லை மலர் தூவி, கொண்டைக் கடலையுடன் தயிர் சாதம் படைத்து, குரு காயத்ரியை 24 முறை பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் குரு தோஷம் விலகி, சகல நன்மைகளும் பெறலாம்.

இதுவே சத்தியம், இதுவே நித்தியம்... தக்ஷிணாமூர்த்தி

சுக்கிரன்:

சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டால், சுக்கிர தசை மற்றும் புக்தி காலங்களில், வெள்ளிக்கிழமை விரதமிருந்து, வெண்தாமரை மலரிட்டு, நெய் சாதம் நைவேத்தியம் செய்து, சுக்கிர காயத்ரியை 24 முறை பாராயணம் செய்வதுடன், மகாலட்சுமியை வழிபட, சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும்.

தெய்வங்களின் குணமே கிரஹங்களின் குணம்!

சனி:

சனியினால் தோஷம் ஏற்பட்டால், சனி தசை மற்றும் புக்தி காலங்களில், சனிக்கிழமை விரதமிருந்து, கருங்குவளை மலர் தூவி, எள் அன்னம் படைத்து, சனி காயத்ரியை 26 முறை பாராயணம் செய்வதுடன், சனி பகவானின் வாகனமான காகத்துக்கு அன்னம் அளித்து வந்தால், சனி தோஷம் நிவர்த்தி ஆகும்.

ராஜ யோகத்தை அளிக்கும் சனீஸ்வரனுக்கு பிடித்த எளிய பரிகாரங்கள்

ராகு:

ராகுவினால் தோஷம் ஏற்பட்டால், ராகு தசை மற்றும் புக்தி காலங்களில் வெள்ளிக்கிழமை விரதமிருந்து, ராகு காலத்தில் மந்தாரை மலரால் ராகுவுக்கு அர்ச்சனை செய்து, உளுந்து கலந்த அன்னம் நைவேத்தியம் செய்வதுடன், துர்கை அம்மனை வழிபட வேண்டும்.

9

கேது:

கேதுவினால் தோஷம் ஏற்பட்டால், கேது தசை மற்றும் புக்தி காலங்களில் திங்கட்கிழமை விரதமிருந்து பல வகையான மலர்களால் கேது பகவானுக்கு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். தொடர்ந்து விநாயகரை வழிபட்டாலும் கேது தோஷங்கள் விலகும்.

ஒவ்வொரு கிரக மூர்த்தியையும் அவருக்குரிய நாளில் முறைப்படி வழிபடுவதால், நவகிரகங்களின் நல்லருள் கிடைக்கும்.

The post நவகிரக தோஷங்களும் எளிய பரிகாரங்களும்… appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

எந்த ஹோமம் செய்தல் என்ன பலன் !!!

$
0
0

எந்த ஹோமம் செய்தல் என்ன பலன் !!!

ஹோமங்களும் அதன் பயன்களும்

ஹோமங்களின் மிக முக்கியமானதாக கருதப்படுவது கணபதி ஹோமம், சண்டி ஹோமம் , நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம், மிருயுஞ்சய ஹோமம், சுயம்வர ஹோமம், புத்திர ஹோமம், காந்தர்வ ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், தில ஹோமம், கண் திருஷ்டி ஹோமம், கால சர்ப்ப தோஷம் ஆகியவை மிக முக்கியமான ஹோமன்களாக திகழ்கிறது.

கணபதி ஹோமம்:

கணபதி ஹோமம் செய்திட காரிய தடை நீங்கும்.எந்த செயல்கள் எடுத்தாலும் அதில் வெற்றி பெறுவார்.

சண்டி ஹோமம்:

சண்டி ஹோமம் செய்திட தரித்திரம் நீங்கி வாழ்வில் செல்வம் சேரும். பயம் விலகும்.

நவக்ரஹ ஹோமம்:

நவக்ராஹங்களினால் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் வளம் கொழிக்கும்.

சுதர்சன ஹோமம்:

இந்த ஹோமம் செய்வதால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார். பேய் , பிசாசு, ஏவல், பில்லி, சூனியத்தில் இருந்து விடுபடுவர்.

ருத்ர ஹோமம்:

ருத்ர ஹோமம் செய்வதால் நீண்ட ஆயள் பெறலாம்.

மிருத்யுஞ்ச ஹோமம்:

பிரேதத்தினால் வந்த சாபம் நீங்கும். மந்தியினால் வந்த தோஷம் போகும்.

புத்திர காமேஷ்டி ஹோமம்:

இந்த ஹோமம் செய்வதால் புத்திர பாக்கியம் விரைவில் கிட்டும்.

சுயம்வர ஹோமம்:

சுயம்வர ஹோமம் என்பது பெண்களுக்கு வரும் திருமண தடைவிலகி விரைவில் சுயம்வரம்
நிகழும்.

ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம்:

இந்த ஹோமம செய்வதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் திருமண தடை நீங்கும்.

லக்ஷ்மி குபேர ஹோமம்:

செல்வம் பெருகும். பொருளாதார சிக்கல்கள் தீர்ந்து பொருளாதார வளம் அதிகமாக ஏற்படும்.

தில ஹோமம்:

இந்த ஹோமம் செய்வதன் மூலம் சனி தோஷம் நீங்கி, பித்ரு தோஷம் நீங்கும்.

ஸ்ரீ பிரத்தியங்கிரா ஹோமம்:

எதிரிகளால் வரும் தும்பம் போகும். எதிரிகள் தொல்லை இருக்காது. நோய்களில் இருந்து விடுபடலாம் .

ஸ்ரீ பிரம்மஹத்தி தோஷம்:

எதிர்களின் தொல்லைகள் நீங்கி எடுத்தட காரியத்தில் வெற்றி பல நன்மைகள் கிட்டும்.

கண்திருஷ்டி ஹோமம்:

காரியத்தினால் வந்த சிக்கல்கள் விலகி, கண் திருஷ்டி குறையும் .

கால சர்ப்ப தோஷம்:

திருமணத்தினால் வந்த தடை நீங்கும். வாழ்வில் வரும் துன்பங்கள் நீங்கி வளம் பெருகும். உத்தியோகத்தினால் வந்த தடைகள் விலகும்.

The post எந்த ஹோமம் செய்தல் என்ன பலன் !!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 09-08-2017 by Astrologer Munaivar Panchanathan

$
0
0

Daily Raasi Palan 09-08-2017 by Astrologer Munaivar Panchanathan

 

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars, Taurus – Venus, Gemini – Wednesday, Cancer – the Moon, LEO – The Sun, Virgin – Wednesday, Libra – Venus, Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

The post Daily Raasi Palan 09-08-2017 by Astrologer Munaivar Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

திருமண தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

$
0
0

திருமண தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

ராசிக்கேற்ற மிக அற்புதமான பண்பு குணங்களை.....!

ஜாதக தோஷங்கள் என்ன?

பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷம்:

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

ராகு – கேது தோஷம்:

லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

மாங்கல்ய தோஷம்:

இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

சூரிய தோஷம்:

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.

களத்திர தோஷம்:

களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.

தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.

தோஷமும் பரிகாரங்களும்:

செவ்வாய் தோஷம்:

செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

ராகு-கேது தோஷம்:

திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.

சூரிய தோஷம்:

ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

களத்திர தோஷம்:

சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.

The post திருமண தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது! கண் திருஷ்டி பரிகாரங்கள்

$
0
0

கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது!

திருஷ்டியை விரட்ட எளிய பரிகாரங்கள்

 வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். சில மகாபாக்யவான்கள் பிறக்கும்போது சகல யோகத்துடன் பிறக்கிறார்கள். வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் நமக்கு துன்பம்.

 நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது பொறுமலாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. எனவேதான் பெரியோர்கள் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொன்னார்கள்.

 கல்லடி – கண்ணடி “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்களுக்கும் உண்டு.

ஒரு மாந்தோப்பில் ஒரு மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது. அந்த வழியாக சென்ற ஒருவனின் பொறாமை பார்வை அதன்மீது பட்டது. ஒரு சில தினங்களிலே நன்றாக இருந்த மரம் அதன் செழிப்பை இழந்து, காய்களில் ஒருவித நோய் தாக்கி கீழே உதிர்ந்து விழுந்தன. அதே நேரத்தில் தோப்பிற்குள் இருந்த மற்ற மரங்கள் நன்றாக இருந்தன. இதைத்தான் கண் பார்வை தோஷம் என்பார்கள். கல்லால் அடித்து இருந்தால் இரண்டு, மூன்று மாங்காய்கள்தான் சேதமடைந்து இருக்கும். ஆனால் கண்ணடி பட்டதால் முழு மரத்துக்கும் சேதாரமாகி விட்டது.

கண் பார்வை தோஷம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல் மனதில் எழும் தீய குணங்களை முகம் காட்டிக் கொடுத்துவிடும். இந்த தீய எண்ணங்களின் ஜுவாலை நம் கண்கள் மூலம் வெளிப்படும். ஒரு பெண்மணி விலை உயர்ந்த புடவை உடுத்திக் கொண்டு கோவிலுக்குச் சென்றார். அங்கு அவர் தோழியும் வந்திருந்தார். அவர் வந்ததில் இருந்தே புடவையை பற்றி புகழ்ந்து பேசி, “என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது“ என்று சொன்னார். பெண்மணிக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனால் மறுநாள் அந்தப் புடவை ஆணியில் மாட்டி பெரிய கிழிசல் ஏற்பட்டு விட்டது.

கிரகப் பார்வை தோஷங்கள்

பார்வைகளிலே சுப பார்வை, அசுப பார்வை என இருவகை உண்டு. பரந்த மனப்பான்மை உள்ளவர்களுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கும். இவர்கள் தொடங்கி வைக்கும் காரியங்கள் விருத்தியாகும். இவர்களை கைராசிக்காரர்கள் என்று சொல்வார்கள். இந்த பார்வை, ராசி மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் கிரகங்களுக்கும் உள்ளது. ஜாதகத்தில் குரு பார்வை மிகவும் சிறப்பாகும். குரு பார்க்க கோடி நன்மை குவியும் என்பது சாஸ்திர வாக்கு. சனி பார்வை சர்வ நாசம் என்பார்கள். அதேபோல் உச்சபலம் பெற்ற கிரகத்தின் பார்வை யோகத்தை கொடுக்கும்.

நீச்ச பலம் பெற்ற கிரகத்தின் பார்வை தோஷத்தை கொடுக்கும். சூரியன், சந்திரன் சமசப்தமமாக பார்க்கும்போதுதான் பவுர்ணமி உண்டாகிறது. இதன்மூலம் பார்க்கும் பார்வைக்கு உள்ள பலம் என்ன என்பதை நாம் உணர முடிகிறது. மகான்களுக்கு பல சக்திகள் உண்டு. அதில் பிரதானமானது அவர்களின் கருணை மிகுந்த அருள் பொங்கும் பார்வையாகும். அவர்கள் பார்வை மூலம் நம்மீது உள்ள திருஷ்டி, தோஷங்கள், தீய சக்திகள் விலகும் என்பது ஐதீகம். இதை நயன தீட்சை என்பார்கள்.

திருஷ்டி….  எப்படி உணருவது?

நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

perumal

கிரக தோஷ திருஷ்டிகள்

நம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து வருகிறோம். நல்ல யோகமான திசைகள் நடக்கும்போது எல்லா விஷயங்களும் சாதகமாகவும், மளமளவென்றும் கூடிவரும். யோகமான திசையில் சில கெட்ட ஆதிபத்ய புக்திகள் வரும் நேரத்தில் திடீர் சறுக்கல்கள், எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படும். திடீர் விபத்துகள், மருத்துவ செலவுகள், கைப்பொருள் இழப்பு போன்றவை எல்லாம் 6, 8, 12-ம் அதிபதியின் திசா, புக்தி, அந்தரங்களில் ஏற்படலாம். லக்னம், ராசியில் நீச்ச கிரகம் வந்து அமரும்போது காரியத்தடை, வீண் வம்புகள், மனச்சஞ்சலம், பொருள் நஷ்டம் போன்றவை வந்து நீங்கும். பட்ட காலிலே படும் என்று சொல்வார்கள். அதுபோல கெட்ட திசைகள், நீச்ச அம்சம் உள்ள திசைகளில்தான் இந்த கண் திருஷ்டி, பொறாமை போன்றவை ஒன்று சேர்ந்து வரும். கிரக திசா புக்தி அமைப்புகள் வலுவாகவும், யோகமாகவும் இருந்தால் திருஷ்டியின் வேகம் தணிந்து விடும். கிரக சுபபார்வை நமக்கு அரணாக இருந்து காக்கும் என்பது அனுபவ உண்மையாகும்.

திருஷ்டி பரிகாரங்கள்

ஆரத்தி, திலகம்:

விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

வாழை மரம்:

விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

am3

வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்:

வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

உப்புக்குளியல்:

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

எலுமிச்சம்பழம்:

வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

கடல் நீர்:

வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

திதிகள்:

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

ஜோதிடக்குறிப்பு- பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள்

சென்னையை அடுத்த மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டி பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இது திருஷ்டி நீக்கும் ஸ்தலமாகும். இங்கு சென்று வழிபடுவதன் மூலம் பொறாமை குணங்கள் மறையும். ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்க்கலாம்.

The post கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது! கண் திருஷ்டி பரிகாரங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் சூலினி துர்கா ஹோமம்

$
0
0

தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் சூலினி துர்கா ஹோமம்

 இன்றைக்கு வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் – மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்கவேண்டியது கிடைக்காமல் இருப்பது, குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகளுக்குத் திருஷ்டியும் ஒரு மாபெரும் காரணமாக இருந்து வருவதுபலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.

தனதான்யம், வளமான வாழ்வருளும் வைஷ்ணவி தேவி

 திருஷ்டியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட ஒருவருக்கு எதனால் தான் அவஸ்தைப்படுகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டால், என்னதான் பரிகாரம் செய்தும், நிவர்த்தி கிடைக்காமல் இருப்பது பெரும் சோகமே! இதன் பின், தொட்ட காரியம் எதுவும் துலங்காது. பணத்துக்குப் பெரும்தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வாழ்க்கை முழுக்க அவஸ்தைகள்தான் அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 ஒருவர் வீடு கட்டி விட்டால், அதைப் பார்த்துப் பலர் பொறாமைப்படுகிறார்கள். ஒருவர் குறுகிய காலத்துக்குள் அதிக சம்பளத்தில் ஒரு வேலையில்அமர்ந்து விட்டால், அதைப் பார்த்து உடன்பிறந்த சொந்தங்கள் உட்பட அக்கம்பக்கமே பொறாமைப்படுகிறது. கணவன் – மனைவி ஜோடியாக – அந்நியோன்னியமாக – சந்தோஷமாக இருந்தால், அதைப் பார்த்தும் பலருக்குப் பொறாமை ஏற்படுகிறது. ஒருவரது வாழ்வில் கூடவே கூடாத குணம் – பொறாமை. இது உறவுகளைப் பிரித்து விடும். நண்பர்களை அந்நியப்படுத்தி விடும்.

மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்க...

 பொறாமைதான் கண் திருஷ்டியில் முடிகிறது. பிறரது மோசமான கண் பார்வை உங்கள் மீது விழுந்து விட்டால்,அந்த திருஷ்டியை உடன் களைவதுதான் முக்கியம். ஒருவருக்குக் கண் திருஷ்டி என்பது இருக்கவே கூடாது. திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களாலும் பொறாமைத்தன்மையாலும் சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும் பாதிப்பே ஆகும். த்ருஷ்’ என்றால்பார்த்தல் என்று பொருள். ஒருவரது அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டு அவரைச் சுற்றி இருப்பவர்கள் பார்த்துப் பொறாமைப்பட்டால், அதுசம்பந்தப்பட்டவரைப் பாதிக்கும். இதனால், தீய விளைவுகளே ஏற்படும்.

 திருஷ்டியை விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபித்துள்ளார்கள். ஒருவரிடம் இருந்து புறப்பட்டு வரும் எண்ண அலைகள் மற்றவரின் சிந்தனைகளில் – இயல்புமுறையில் – அன்றாட நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதுவே திருஷ்டி எனப்படும். எனவே, பார்ப்பவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும் கவனமும் வேறு எதிலாவது படும்படி ஒரு பொருளை வீட்டிலோ, அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ வைத்து விட்டால், பார்ப்பவர்களின் கவனம் முழுக்க அங்கே செல்லும். இதனால் திருஷ்டியின் பாதிப்பு ஓரளவு குறைய வாய்ப்புஉண்டு.

 சிலர் வீட்டு ஹாலில் அழகான ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு அதில் வண்ண வண்ணப் பூக்களை வைத்திருப்பார்கள். வருபவர்களின் கவனத்தைமாற்றுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வீட்டு வாசலில் மீசையை முறுக்கியபடியோ, நாக்கை வெளியே தள்ளிக் கொண்டு நிற்கும் கோர உருவத்தையோ, அருவருப்பான உருவங்கள் வரைந்த பெரிய பூசணிக்காயையோ வைப்பதும் இதனால்தான்.  வீட்டில் ஜனித்திருக்கக் கூடிய குழந்தையின் அழகைப்பார்த்துப் பலரும் கண் வைத்து விடப் போகிறார்கள் என்பதற்காகக் குழந்தையின் கன்னத்தில் பெரிய அளவில் மையால் ஒரு திருஷ்டிப் பொட்டுவைப்பார்கள். திருமண நாளில் மணமக்களுக்கும் இது போல் திருஷ்டி பொட்டு வைக்கும் வழக்கம் நம்மிடையே இருக்கிறது.

 மஞ்சள் நிறத்துக்கு திருஷ்டியைப் போக்கக் கூடிய குணம் உண்டு. வீட்டு வாசலில் – அதாவது முகப்பில் – கடந்து செல்லும் பலரது கவனமும் விழும்படிமஞ்சள் வண்ணத்தைப் பூசி விட்டால், அவர்களது கவனம் அதில் மட்டுமே விழும். பண்டைய காலத்துப் பெண்கள், தினமும் மஞ்சள் தேய்த்துக் குளித்ததும்,புருவ மத்தியில் தூய மஞ்சளால் ஆன குங்குமத்தை இட்டுக் கொண்டதும் திருஷ்டி தங்கள் மேல் விழுந்து விடக் கூடாது என்கிற காரணத்தால்தான். இன்றுமஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் போய் விட்டது. குங்குமம் வைத்துக் கொள்வதும் போய் விட்டது. சோப்புகளும் ஸ்டிக்கர் பொட்டுகளுமே உலகை ஆள்கின்றன.

 பொதுவாக துர்கா  ஹோமம் – பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும்செய்யப்படுகிறது. இந்த துர்கா  ஹோமத்தில் சூலினி துர்கா ஹோமமும் இடம்பெறுகிறது.

 ஒன்றே ஒன்று… எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தூய எண்ணத்துடன் இருந்து முழுமையான கடவுள் பக்தியை இடைவிடாமல் அனுசரித்து வந்தால், திருஷ்டியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். என்றாலும், திருஷ்டி விலக்குவதற்கு உண்டான பரிகாரங்களையும்  மேற்கொள்வது அவசியம்.

The post தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் சூலினி துர்கா ஹோமம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று திருஆலங்குடி கோவில்

$
0
0

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு திருஆலங்குடி குருதட்சிணாமூர்த்தி கோவில் 

கோபுர தரிசனம் கோடி

அருள்மிகு திருஆலங்குடி குருதட்சிணாமூர்த்தி கோவில்

தலச்சிறப்பு :

இக்கோவிலில் குருதட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருதோஷம் நிவர்த்தியாகும். குருபலன் கிடைக்கிறது என்பது சிறப்பு. தோல் வியாதி உள்ளவர்கள் இத்திருக்கோவிலை சுற்றி உள்ள “அமிர்தபுஷ்கரணி” யில் நீராடி ஆலயத்தின் சிவபெருமானை வழிபட்டால் நோய் விலகும் என்பது ஐதீகம். குருபெயர்ச்சி தினத்தில் வழிபடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இத்தலத்தில் ஏழுந்தருளியுள்ள விநாயகர் பக்தர்களின் மனக்கவலையை தீர்த்து வைப்பதால் “கலங்காமல் காத்தவிநாயகர் ” என பக்தியுடன் அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு :

 முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முற்பட்டனர். அவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை, சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார்.

 விஷத்தை அருந்தி உலகைக் காத்ததால் சிவபெருமான் ரட்சகர் என்று பொருள் படும் படி ஆபத்சகாயேஸ்வரர் என்று அன்போடு அழைக்கப் படுகிறார். இந்த இடமும் ஆலங்குடி என்று புகழ் பெற்றது. சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபட மக்கள் தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர். எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற விக்ரஹத்திற்கு மங்கள அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

 மற்றொரு கதையில் முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார்.

 இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறு ஆகும். மற்றொரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று திருஆலங்குடி கோவில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி பெற

$
0
0

உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி பெற

 குரு பலன் கிடைக்க அதிகம் பரிந்துரை செய்யும் ஸ்தலம். குரு பகவான் – நம் அனைவருக்கும், கல்வி , தனம், வாக்கு , புத்திர பாக்கியம் உள்பட பல முக்கிய விஷயங்களுக்கு காரண கர்த்தாவாக விளங்குகிறார். நவ கிரகங்களில் முழு சுபர் .

குருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், நமைப் போன்ற மனிதர்களின் பொருளாதார வாழ்வில் – ஏற்ற , இறக்கத்தை ஏற்படுத்தி – உலக பொருளாதாரத்தையே , முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். சில வருடங்களுக்கு முன் , ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சி – குரு பகவான் , தன பலமிழந்து நீச வீட்டில் , மகரத்தில் இருந்த போது நிகழ்ந்ததே. சரியாக 12 வருடங்களுக்கு முன் , இதே நிலைமை தான். பல வங்கிகள் திவால் ஆனது.

நம் வாழ்வில் ஏற்படும் ஏற்ற , இறக்கங்களும் குரு பார்வையைப் பொறுத்தே வேறுபடுகிறது.
ஜாதகப் படி ஜனன காலத்திலோ , அல்லது நடக்கும் கோச்சாரத்திலோ – குரு பகவான் , பலம் இழந்து அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தால் – உங்களால் இயன்றவரை அடிக்கடி இந்த ஆலயத்திற்கு சென்று , மனமார குருவருள் வேண்டி பிரார்த்தனை செய்து வாருங்கள். வாழ்வில் , நிச்சயம் நல்ல மாறுதல் கிடைக்கும்.

எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு நீசமாக இருக்கிறாரோ, அவர்கள் நிச்சயம் இந்த ஆலயம் வந்து குருவுக்கு பரிகாரம் செய்தல் நலம் பயக்கும்.

முன் ஜென்ம பாவவினைகள் கரைந்தோடும் சனிப்பிரதோஷம்

நீண்ட நாட்களாக , நல்ல வேலை / தொழில் அமையாமல் அல்லல் படும் அனைவருக்கும் – ஒரு நிரந்தர தீர்வு கொடுத்து , ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு விடி மோட்சம் கொடுத்துள்ள ஆலயம் இது.
புத்திர சோகம் உள்ளவர்களுக்கும், தீய வழியில் செல்லும் குழந்தைகளுக்கு – நல்ல வழியில் வழிகாட்டிச் சென்று , அவர்களை மேம்படுத்தவும் , நவ கிரகங்களின் தோஷத்தை நீக்கவும் – இந்த சந்திரகாந்த கல்லில் அபிசேகம் பெறும் வசிஷ்டேஸ்வரரை வணங்குதல் , உங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு ஆகும்.

தல அமைவிடமும், பெயர்க் காரணமும்

dhatchana_moorthy

கும்பகோணம் – தஞ்சாவூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் திட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது திருதென்குடித்திட்டை எனும் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. திட்டை என்ற பெயர் ஏன்?. புராண காலத்தில் ஊழிப் பெரு வெள்ளத்தால் உலகின் அனைத்து பகுதிகளும் மூழ்கி விட்டது. மும்மூர்த்திகளும் இருள் உலகம் முழுவதையும் சூழ்ந்து விட்டதை கண்டு மனம் கலங்கினர். அச் சமயம், ஒரு பகுதி மட்டும் சற்று மேடாக, திட்டாக காணப்பட்டதை கண்டனர். விரைந்தனர் அப் பகுதிக்கு. அங்கு “ஹம்” என்ற ஒலியுடன் பல விதமான மந்திர ஒலிகளும் கேட்டனர். அப்பொழுது ஜோதி சொரூபமாய் சிவ பெருமான் தோன்றக் கண்டனர். அவரை போற்றி துதித்தனர். மும் மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்க இத் தலத்திலேயே வீற்றிருந்து அருள் புரியலானார்.

இறைவனும், இறைவியும்

shivayellow

இறைவன் வசிஷ்டேஸ்வரர். தாமாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி. தேரூர் நாதர், பசுபதி நாதர், ரதபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், அனந்தீஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகின்றார். யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது. சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும் அருள் பெற்றது இத் தல இறைவனை வேண்டியே. பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது. இறைவி உலகநாயகி. சுகந்த குந்தளேஸ்வரி, மங்களேஸ்வரி என்றும் வழிபடப்படுகின்றாள். இத் தல அம்பிகையை வழிபட்டு சுகந்த குந்தலா எனும் பெண்ணொருத்தி இழந்த தன் கணவனை உயிருடன் மீட்டாள் என்கிறது தல புராணம். மங்களா எனும் வைசியப் பெண்ணொருவள் தன் விதவைக் கோலம் நீங்கி நீடூழி வாழ்ந்து மணித்வீபம் சென்றாள். சங்க பால மன்னன் என்பவன் தன் இறந்து போன மத்சலாவை உயிருடன் மீண்டும் பெற்று இழந்த தன் அரசையும் இத் தல இறைவனை வழிபட்டே பெற்றான்.

வாழ்வில் எப்போதும் எதிலும் வெற்றி காண!

சிறப்பு மூர்த்தியாய் குரு பகவான்

அனைத்து சிவாலயங்களைப் போலவே இங்கும் தெட்சிணாமூர்த்தி தென் புறத்தில் அமர்ந்திருக்கின்றார். சுவாமிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் குரு பகவான் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி விமானத்துடன், தனி சந்நதி கொண்டு காட்சி தருகின்றார். பெரும்பாலான குரு தலங்களில் குருவின் அதிதேவதையான தெட்சிணாமுர்த்தியே குருவாக பாவித்து வணங்கப்படுகின்றார். ஆனால், இத் தலத்தில் மட்டுமே குரு பகவான நவக்கிரக அமைப்பில் உள்ளது போல் தனி சந்நதியில் காட்சி அருள்கின்றார். இவரே இத் திருத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இத் தலத்தில் குரு பகவானுக்கு உற்சவ மூர்த்தியும் உண்டு. திருவிழா நாட்களில் இறைவனுடன் இவரும் வீதி உலா செல்வார். இத் திருத்தலத்தை தவிர குரு பகவான் வீதி உலா செல்வதை வேறு எங்கும் காண இயலாது. இது இத் தலத்தின் மிகப் பெரும் சிறப்பு.

இதுவே சத்தியம், இதுவே நித்தியம்... தக்ஷிணாமூர்த்தி

குரு பார்க்க கோடி நன்மை

குரு பகவான் சப்த ரிஷிகளில் நடுவரான ஆங்கிரஸ மகிரிஷியின் புதல்வரே. இவரே தேவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றார். ஜோதிட ரீதியாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி இவற்றை சந்தோஷமாக அருள்பவர். குரு பகவான் முழுச் சுபர். தோஷங்களை நீக்குவதில் வல்லவர். கேதுவின் தோஷத்தை ராகுவும், ராகு, கேது இருவரின் தோஷங்களை சனியும், ராகு கேது தோஷத்தை புதனும், புதன் உட்பட ஐவரின் தோஷத்தை சந்திரனும் போக்க வல்லவர்கள். ஆனால் குரு பகவானோ அனைத்து நவக்கிர தோஷங்களையும் போக்க வல்லவர். எனவேதான் ” குரு பார்க்க கோடி நன்மை ” என்பர்.

The post உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி பெற appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 10-08-2017 by Astrologer Munaivar Panchanathan

$
0
0

Daily Raasi Palan 10-08-2017 by Astrologer Munaivar Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars, Taurus – Venus, Gemini – Wednesday, Cancer – the Moon, LEO – The Sun, Virgin – Wednesday, Libra – Venus, Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

The post Daily Raasi Palan 10-08-2017 by Astrologer Munaivar Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள்

$
0
0

நாளை 11-08-2017  மகாசங்கடஹர சதுர்த்தி 

வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள்

விநாயகர் அகவல் பிறந்த கதை

“சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு’ என்று ஔவையார் பாடிய விநாயகர் அகவலைச் சீர்காழி கோவிந்தராஜன் பாடக் கேட்டிருப்பீர்கள். தித்திக்கும் தேவகானம் அது. இந்த அகவலில் சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே ஔவையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, தலையாட்டிக் கேட்ட பாடல் இது.
திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.

ganapathi
அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் “சிவாயநம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.
இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு “நீயும் வாயேன் பாட்டி’ என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் ஔவையார் முன் தோன்றி, “நீயும் கைலாயம் போக வேண்டுமா?’ என்றார்.

“நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ’ என்றார் ஔவையார்.
“ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு’ என்றதும், “சீதக்களப’ என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.

பன்னிரண்டு ராசிகளுக்கான பரிகார மந்திரங்கள்

கைலாயத்தை அடைந்த பிறகு ஔவையாரை சுந்தரரும், சேரமான் பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முதற்கடவுள். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் ஔவை. இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல்.

நாயேன் பல பிழைகள் செய்து களைத்து உனை நாடி வந்தேன்
நீயே சரணம் நினதருளே சரணம் சரணம் விநாயகா

The post வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>