Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

“ஓ! தெரியுமே அது மராமரம்.”- “ராம் ராம்”

$
0
0

வால்மீகி பூர்வஜன்ம வாழ்க்கையில் வேடுவனாக, கொள்ளைக்காரனாகப் பிறந்தவர் தான். பிரியம் வைத்த ஆசைநாயகிக்காக எதையும் செய்யும் குணமுடையோன். அவனின் ஆசை மனைவிக்காக கொலை, கொள்ளை செய்து எடுத்து வந்த விலையுயர்ந்த ரத்தினங்களையும், வைரங்களையும், தன் மனைவிக்கு அணிவித்து அழகு பார்த்தவன்.

ஒரு நாள் காட்டில் சாதாரணமாக மகாதபஸ்வியான நாரதமுனிவர் அவனைச் சந்தித்தார். அவனிடம் முனிவர் கேட்ட முதல் கேள்வியே “நீ ஒரு கொள்ளைக்காரன். கொள்ளைக்காக, கொலையும் செய்கிறாய். கொள்ளையடித்ததை, உன் ஆசை மனைவிக்கு அன்புடன் கொடுக்கிறாய். அதில் ஆனந்தமும் சந்தோஷமும் அடைகிறாய். அவளும் அதை ஏற்று, உன்னை சந்தோஷப்படுத்தி இன்பங்களை வழங்குகிறாள்.

வேட்டையாடுவது தான் உன் தொழில். கொள்ளையடிப்பது, கொலைசெய்வது உன்தொழில் அல்ல. அதனால் பாபங்கள் உனக்கு வந்தடையும். இதை அவளிடம் “நான் செய்யும் கொலை கொள்ளைகளால் எனக்குப் பாபம் சம்பவிக்கிறது. இந்தப் பாபத்தில் உனக்கும், பந்தமும், கட்டும், கூட்டும் உண்டல்லவா? ஏனெனில் இது உனக்காகச் செய்யப்படும் ஈனச்செயல்கள். அதனால் என் பாபத்தை நீயும் சமபங்கு போட்டுக் கொள்ளவேண்டுமல்லவா?” என்று அவளிடம் சொல். அதன் பின் நாள் உனக்கு நல்வழி காட்டுகிறேன்.”என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

அந்த வேடுவனும் தன் ஆசை மனைவியிடம் சென்று நாரதர் சொன்னதை அப்படியே வரிவிடாமல் சொன்னான். அவளோ, “நீ செய்யும் பாபங்களில் எனக்குப் பங்கில்லை. உன்னுடைய சுகத்திலும், இன்பத்திலும், புண்ணியத்திலும், வாழ்விலும், சமபங்கு கொள்வேனேயல்லாது, உன்னுடைய அதாவது நீ செய்யும், கொலை, கொள்ளை அதனால் ஏற்படும் பாபத்தில் எனக்குப் பங்கில்லை. ஆனால் புண்ணியத்தில் பங்கு கொள்வேன்” என்று ஆணித்தரமாகப் பதில் சொன்னாள்.

ஓடி வந்தான் அதே இடத்திற்கு, மனம் பதறிப்போய், அந்த வேடுவன் அங்குமிங்கும் அந்த கானக முனிவரைத் தேடினான் அவனும் கண்டான் முனிவரை. “வேடுவனே! நான் உன்னிடம் சொன்னதை உன் ஆசை மனைவியிடம் கேட்டாயா?”

“கேட்டேனே பலமுறை. ‘உன் பாபத்தை நான் பங்கு போட்டுக் கொள்ளமுடியாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள். இனி மேல் இனி எனக்கு என்ன உள்ளது. அதனால் தான் உங்களை நாடி ஓடிவந்தேன். இனி ஒருவருமில்லை எனக்கு. நான் கடைத்தேறிட வழி சொல்லுங்கள். கேள்வி கேட்கச் சொன்னவரே நீங்கள் தான். இதற்கும் நீங்கள் தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் தான்இனி எல்லாம்”என்று அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.

அவனை அறியாமலேயே, அவன் குருவை சரணாகதம் அடைந்து விட்டான். அவனுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு நாரதருக்கு வந்தது.  நாரதர் சொன்னார், “வேடுவனே! உலகில் ஒன்றும் நிலையில்லை. மனைவி, மக்கள், சுற்றம், பொன், பொருள், இந்த உடல் எல்லாம் என்றேனும் ஒருநாள் அழிந்துவிடக் கூடியது. ஆனால் ஒரே ஒரு பொருள் மாத்திரம் அழியாதது, அழிவில்லாதது. அந்தப் பொருளை உனக்கு நான் தருகிறேன். அதை கெட்டியாக உன் மனத்தில் பற்றிக் கொள்.”என்றார்.“அது என்ன பொருள் சாமி? நாரதர் “உன் காதைக் காட்டு சொல்லுகிறேன்.”என்றார்.

அவர் “ராமா’ என்ற நாமம் மிகச்சிறந்தது. அதைத் திரும்பத் திரும்ப இரவு பகல் பாராமல் நாள்தோறும் சொல்லிக் கொண்டிரு. அதுவே உனக்கு அபயம் அளிக்கும்.”என்றார்.“ஐயா சாமி! நீங்க சொல்றது ஒன்றும் புரியலையே! இன்னொரு முறை நினைவு கொள்ளும்படியாகச் சொல்லுங்கள்”என்றான். உடன் அவர், “நீ வேடுவன் தானே! அதோ தெரிகிறதே ஒரு மரம் அது என்ன மரம் தெரியுமா?”

“ஓ! தெரியுமே அது மராமரம்.”

“அந்த மராமரத்தின் பெயரையே உச்சரித்துக் கொண்டிரு. அதுபோதும். உன்முக்திக்கு வழிகாட்டும்” என்று சொல்லிச் சென்றுவிட்டார் நாரதர்.

அந்த மராமரத்தின் அடியில் சென்று அமர்ந்தான். “மராமரா”என்று அதையே உச்சரித்தான். அது ‘ராமராம’ என மாறியது. வருஷங்கள் மாறின. கோலங்களும் காலங்களும் மாறின. மரத்தடியில் தவம் செய்து வந்த இடத்தில் புற்றும் வளர்ந்தது. அங்கு நாரத மகாமுனி தோன்றினார். புற்றிலிருந்து வெளிப்பட்டதால் வான்மீகி என்று அவனுக்குப் பெயர் சூட்டினார். ராம நாமத்தை பற்பல வருடங்கள் தியானமும், தபமும் செய்தவர் வால்மீகி முனிவர். இன்று முதல் நீவிர் வால்மீகி மகரிஷி ஆவீர்கள். ராம நாமத்தால் இந்தப் பதவியை அடைந்தீர். நீரே ராமகாவியத்தை எழுத வேண்டும் என்பதே நாராயணனின் கட்டளை. உமக்கு இராமபிரானின் சரிதங்களும், நிகழ்ச்சிகளும், நிகழ்வுகளும், சம்பவங்களும், கண்முன் காட்சிகளாகத் தோன்றும் அதைப் பார்த்து ரசித்து இராமகாவியத்தை வான்மீகி இராமாயணம் என்று இயற்றும். என்று நாரதர் அருள் புரிந்தார். அதன் பிறகு வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தான் இன்றும் கேட்கிறோம். இராமாயணத்தை எழுத வைத்ததே ‘ராமமந்திரம்’ தான்.

The post “ஓ! தெரியுமே அது மராமரம்.”- “ராம் ராம்” appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>