ஐம்பொன்னின் (பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள்
தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே ஐம்பொன் அல்லது பஞ்சலோகம் என்றழைக்கிறோம். பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்.
ஐந்து உலோகத்தின் விஞ்ஞான ரகசியம்.
இதை விஞ்ஞான ரீதியாக கண்டால் வியாழ கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், சனிகிரகத்தின் ஆற்றலை பெற இரும்பையும், சுக்கிர(வெள்ளி)கிரகத்தின் ஆற்றலை பெற வெள்ளியையும், சூரிய கிரகத்தின் ஆற்றலை பெற செம்பையும், கேது கிரக்கத்தின் ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்துகொள்கின்றனர்.
நவகிரகங்களின் கதிர்வீச்சு மனிதனின் சுபாவத்தையும் அவன் நிலைமையும் தீர்மானிக்கிறது என்பதை நாம் ஜோதிடம் என்ற விஞ்ஞானத்தை கொண்டு அறிவோம். இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ, காப்பாகவோ, தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம்.
ஐந்து உலோகங்களின் சூட்சம ரகசியம்
இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நாம் அறிந்திருப்பதால் அவற்றின் சூட்சமத்தை மட்டும் இங்கு காண்போம்.
தங்கம்
தங்கம் என்ற இந்த உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்க்கு அனுப்பமுடியும். அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது விருப்பங்களை கடவுளிடம் தெரிவிப்பார்கள். கடவுள் சிலைகளுக்கு தங்க நகைகள் போடுவது இதனால் தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறை. இதை தந்தரா யோகத்தில் கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயில் என்பார்கள் உங்கள் எண்ணங்கள் அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம்(கடவுளிடம்) அனுப்பபடும்.
வெள்ளி
வெள்ளியையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தினார்கள்.ஆனால் அது அதிகம் இல்லை ஏனெனில் இதன் அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது. இதற்க்கு மானிடர்களின் உணர்ச்சிஅலைகளை கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பது சூட்சமம்.
செம்பு
செம்பு உலோகத்தை பற்றி கூறினால் ஒரு புத்தகமே போடலாம்.இருப்பினும் இதன் சூட்சமம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை விழிப்புடன் வைக்க உதவுகிறது.கவனிக்க குண்டலினியை மேலே கொண்டு வராது. இதன் மிதமான உஷ்ணத்தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது, மனித உடலை சுற்றியுள்ள பிராண மண்டலத்தை பலபடுத்தும், மூளையின் செயல் திறன் அதிகமாகும்.
இரும்பு
இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான்.இருப்பினும் இதை அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள்(பேய்கள்) நெருங்காமல் இருக்க இந்த இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள்.ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும் பெரியவர்கள் கூறுவார்கள்.
இதன் சூட்சம ரகசியம்
“இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வை” என்ற பழமொழி உள்ளது.இதன் அர்த்தம் என்னவெனில் இடிமின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும். குறிபிட்ட இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள்.ஆனால் நாம் இங்கு மற்ற உலோகத்தோடு கலப்பதால் நன்மையே பயக்கும்.
ஈயம்
இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை,இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது.மனிதனின் உயிர்சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது. இப்படி ஐம்பொன்னும் சேர்ந்து மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்களும், சித்தர்களும் கண்டுபிடித்தனர் மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர்.இது தமிழர்களின் விஞ்ஞான முறைகளில் ஒன்று தான்.
இங்கு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த பஞ்சலோகத்தில் சூரிய ஒளிபட்டால் இதன் சக்தி அளப்பரியது.ஆக இதை காப்பாகவோ,மோதிரமாகவோ அணிந்து இதன் பயனைபெறவும்.
The post ஐம்பொன்னின் (பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.