Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

விவசாயத்தை தழைக்க வைக்கும் வராஹி அம்மன்

$
0
0

 வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்

இவளுக்கு பல நாமங்கள் உள்ளன :

சேனநாதா ,

தண்டநாதா,

வராஹி,

பஞ்சமீ,

கைவல்யரூபி ,

வீரநாரி,

கிரியா தேவி,

வார்த்தாளி,

 தூமாவதி(வடிவம்),

 பலிதேவதா ,

ஸங்கேதா ,

ஸமயேஸ்வரி ,

மகாசேனா ,

அரிக்னீ,

 பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

 இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான வராஹி அம்மன் பக்தர்கள் வேண்டிக் கொள்வதை வழங்கக் கூடியவள். விவசாயம், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை அருள்பவள். பயிர்களை விளைவிப்பதும், பலன்தருவதும் கடமையாக கொண்டவள். அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம்.

வராஹி காயத்திரி :

 ஓம் ஸ்யாமளாயே வித்மஹே

ஹல ஹஸ்தாய தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்

 மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி :

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,

பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!

அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி

இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

தியான சுலோகம் :

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

வராஹி மூல மந்திரம் :

 1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி

ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ

வார்த் தாளி , வார்த்தளி

வாராஹி வராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :

ருத்தே ருந்தினி நம :

ஜம்பே ஜம்பினி நம :

மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

3)ஓம் வாம் வாராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

4) செல்வம் பெருக

ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவியை நம:

க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்

தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

மூலம்:-

 லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II

காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

The post விவசாயத்தை தழைக்க வைக்கும் வராஹி அம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>