Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

மந்திரங்கள் –எல்லாவற்றையும் அறிய, உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல்

$
0
0

மந்திரங்கள் – ஏழு அங்கங்கள்

மந்திரமும் யந்திரமும் தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள். அவற்றுள் மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை:

1.ரிஷி

2. சந்தஸ்

3. தேவதை

4. பீஜம்

5. சக்தி

6. கீலகம்

7.அங்க நியாசம்

என்பன.

  1. ரிஷி

மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),. எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும்எ ன்பது விதி. மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.

நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவதையை வணங்கும்போது இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.

  1. சந்தஸ்

சந்தஸ் என்பது மந்தரத்தின் சொல் அமைப்பு. அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.

  1. தேவதை

தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவது தேவதா நியாசம்.

  1. பீஜம்

மிகச் சிறிய ஆலம்விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்துக்குப் பீஜம் என்பா். இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.

  1. சக்தி

அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.

  1. கீலகம்

சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்.

மந்திரங்களின் ஆற்றல்

மந்திரங்கள் என்பவை சில எழுத்துக்களின் சோ்க்கை. பல மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. ஆயினும் அந்த மந்திரங்களின் சப்தங்கட்குச் சக்தி அதிகம். பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.

இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓா் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வா். இந்த உருவங்களைப் படைக்கக்கூடிய எழுத்துக்களை எவ்வாறு கண்டு பிடித்து இணைத்தனா் என்பது வியப்பான ஒன்று. இந்த எழுத்துக்களையே ஆரம்ப காலத்தில் பீஜ அட்சரம் என்று குறிப்பிட்டனா்.

மேலே குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலமாக மந்திரங்களை அமைத்து, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையின் பெயரை இட்டு, அவ்வகைத் தேவதைகளின் சக்தியை உணரச் செய்துள்ளனா். இத் தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. குட்டிச் சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்கள்: காளி, துா்க்கை, ஆஞ்சநேயா், நவக்கிரகங்கள் என்பன தேவதைகள்: சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி என்போர் அதிதேவதைகள். ஒவ்வொரு தெய்வத்தின் உருவத்தையும் நேரடியாகப் பார்த்துத் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் உள்ளது.

மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை. விஞ்ஞானிகள் ஒரு குளக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகள் (Vibrations)  நீரின் மேலே மிதக்கின்ற இலேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்ததைக் கண்டு நாதத்துக்கே உருவம் கொடுக்கிற சக்தி உண்டு என்பதைக் கண்டறிந்தார்கள்.

இறையருளைப் பெற

இறையருளைப் பெறுவதற்கு மந்திர உபாசனை சிறந்த சாதனம். மந்திர ஜெபத்துக்குரிய வழி முறைகளையும் நுட்பங்களையும் தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன. மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள். எல்லாம் வல்ல கடவுளுக்கு வடிவம் மூன்று. அவை

1. தூல வடிவம்

2. சூக்கும வடிவம்

3. அதி சூக்கும வடிவம்.

அவற்றுள் தூல வடிவம் என்பது மந்திர வடிவம் ஆகும். சூக்கும வடிவம் என்பது உயிருக்குயிராய் நமக்குள்ளே இருக்கிற வடிவம். அதி சூக்கும வடிவம் என்பது உண்மை அறிவாக, ஆனந்த மயமாக உள்ள சிற் சக்தி வடிவம். முன்னைய இரண்டும் பொது இயல்பு. பின்னையது சிறப்பு இயல்பு.  எல்லாவற்றையும் அறியச் செய்யும் ஆற்றல், உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் என்னும் இரண்டு ஆற்றல்களைக் கொண்டவை மந்திரங்கள்.

The post மந்திரங்கள் – எல்லாவற்றையும் அறிய, உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>