எல்லா நோய் களுக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் !!!
சாய்பாபாவின் உதி
துவாரகாமாயீயில் சாய்பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.அதில் விறகுக்கட்டை போட்டு எரித்து கொண்டிருந்தார்.அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து ‘உதி’ என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்து தருவார்.அக்னி குண்டத்தை எடுக்கும்போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம். பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது.எல்லாவித ஊழ் வினைகளையும்,வியாதிகளையும் போக்கவல்லது.தினமும் குளித்தபின் உதியை நெற்றியில் இட்டு கொண்டும் ,கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.
உதி விதியை மாற்றும்
துகாராம் பார் ஷீரடியில் விவசாயம் செய்து வந்தார்.1912ம் ஆண்டு ஷுரடியிலிருந்து 20கிலோ மீட்டர் தொலைவில் கரஞ்சிகாவோன் என்ற கிராமத்திற்கு சென்று வேலை செய்து சம்பாதிக்க புறப்பட்டு விட்டார். அப்போதுதான் கோதாவரியை சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டார்கள்.அதனால் தனக்கு வேலை கிடைக்கும் என புறப்பட்டார்.
கோபர்கான் சாலையில் செல்லும்போது பாபா அவரது கழுத்தில் தன் கையை போட்டு போகாதே என்றார்.ஆனால் துகாராம் பாபாவின் வார்த்தை கண்டு கொள்ளவில்லை.கரஞ்சிகாவோன் வந்தார்.வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது.காய்ச்சல் நிற்கவே இல்லை.தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர் தற்போது சொந்தக்காரர்களை சார்ந்து இருக்க வேண்டியதாகி விட்டது.
பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பி விட நினைத்தார்.காய்ச்சல் நிற்கவில்லை. 45நாட்கள் தொடர்ந்தது.உடனே தன் அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை அனுப்ப சொன்னார்.உதியை இட்டு கொண்ட மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்று விட்டது.
உதியின் சக்தியும் செயல் திறமையும்
ஒருமுறை பாலாஜியின் திவசத்தின் போது சில விருந்தினர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது.ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்ட பேர்களை விட மூன்று மடங்கு பேர் வந்து விட்டனர். பாலாஜி மனைவி திகைத்து போய் விட்டாள்.குழுமியுள்ள மக்களுக்கு சாப்பாடு பற்றாது என்றும்,அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கெளரவம் பாதிக்கக்கூடும் என்றும் அவள் நினைத்தாள்.அவளுடைய மாமியார் பயப்படாதே.அது நம்முடைய உணவல்ல.சாயியினுடையது.
ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதி போட்டு ஒரு துணி போட்டு மூடி அதை திறக்காமலே அவர்களுக்கு பரிமாறப்பட்டது.சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார் என்று கூறித் தேற்றினாள்.அவரை கூறியபடியே செய்தாள்.சிறிது நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது.பரிமாறுவதற்கு உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததுடன் ,மீதமும் இருந்ததை கண்டார்கள்.
உதியில் பாபா என்னவாக இருக்கிறார்?
பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும்,பொறுமையும் ஆகும்.அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால்,பாபா அதை நிறைவேற்றி வைப்பார். என்ன நன்மையை இதன் மூலம் பக்தர்களுக்குத் தருகிறார் என்றால், திருநீறு, பஸ்பம் ,உதி என்றெல்லாம் அழைக்கப்படும் விபூதியில் நிலைத்து நிற்கக் கூடிய ஈசனாகிய சாயி ,அதை பய பக்தியோடு உடலில் தரித்துக்கொள்பவர்களுக்கு
மந்திரமாகி – உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துகிறார்.
மருந்தாகி – உடலைக்காக்கும் கவசம் ஆகிறது.
நெருப்பாகி – பகை தீமைகள் ,நோய் அழித்து நலம் தருகிறார்.
நீராகி – கோபம் ,அகங்காரம் அகற்றி மனத் தெளிவு தருகிறார்.
கருனையாகி – பாவங்களை அழித்துப் புகழடையச் செய்கிறார்.
ஐஸ்வர்யமாகி – சகல செல்வங்களையும் அருள்கிறார்.
ஒளி மயமாகி – வணங்கத் தோன்றும் தேஜசை அளிக் கிறார்.
திரிபுண்டரமாகி – தீங்கிழைக்கும் எண்ணத்தை அழிக்கிறார்.
பரமனாகி – இரவும் பகலும் இறை உணர்வைத் தருகிறார்.
பஞ்சாட்சரமாகி – ஐம்புலன்களையும் அடக்கியாள அருளைத் தருகிறார்.
சிவமாகி – சிவனருள் சித்திக்கிறார்.
சாயியாகி – சகல நன்மைகளையும் தருகிறார்.
இப்படி, ஒவ்வொரு வருக்கும் அவசியமானது என்பதற்காகவே உதியைத் தயாரிப்பதற்காக பாபா பெரும் தொகையை செலவழித்தார். எல்லா நோய் களுக்கும் எல்லா ரச்சினைகளுக்கும் உதி எனத் தந்தார்.!
ஓம் சாய் ராம்
The post எல்லா நோய் களுக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் !!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.