Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அம்பாள் மயில் வடிவில் பூஜித்த மயிலாப்பூர் கபாலீசுவரர்!

$
0
0

   சென்னை மயிலாப்பூரிலுள்ள, கபாலீசுவரரை கற்பகாம்பாள் மயில் வடிவில் பூஜித்த திருத்தலம். இந்த அம்பாள் தேவலோக கற்பக மரம் கேட்டதை தருவது போல் கற்பகாம்பாள் கேட்டவரங்களை தருவதாக பக்தர்கள் நம்பிக்கையாகவே உள்ளது.

தலபெருமை:-

  இத்திருத்தலம் 2000 ஆண்டு பழமைவாய்ந்த திருத்தலமாகும். கபாலீசுவரருக்கு 2016 ஏப்ரல் 3 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது. உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த இத்தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராமபிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஓருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம். சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொண்மைத்தலம்.

கபாலீசுவரம் :-

  பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை எந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய உசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஓரு வரலாறு கூறுகிறது.

பாம்பு கடித்த பெண்ணை பதிகம்பாடி உயிர்பித்த சம்பந்தர்:-

திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது ஆதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க செய்தார். இந்நேரத்தில்  மலர் பறிக்கச் சென்ற பூம்பாவை,பாம்பு தீண்டி உயிர் இறந்தான். அவளைத் தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஓரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார். சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தைக் கொண்டு வரக் கூறினார். அப்போது சம்பந்தர் சிவனை வேண்டி,

                “மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்

                கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்

                நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்

                தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”     என்று பதிகம்பாடினார்.

  மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம், என்ற ரீதியில் இந்தப்பாடல் அமைந்தது. அவர் பாடியதும், பூம்பாவை உயிர்பெற்று எழுந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் சம்பந்தரிடம் வேண்டினார். உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால், அவாள் எனக்கு மகளாகிறாள் எனச் சொல்லி சம்பந்தர் மறுத்துவிட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள்.

முருகனுக்கு வேல் கொடுத்த சிவபெருமான்:-

  சூரனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்துப்போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன், ஓரு சன்னதியில் இருக்கிறார்.

சிவபெருமானின் சாபத்தால் மயில் வடிவில் கற்பகாம்பாள்:-

  உமையவள் சிவபெருமானிடம் அந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க,சிவபெருமான் அவ்விளக்கத்தினை நல்கிட, அப்போது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் “நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்” என சாபமிட்டார். “சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்” எனக்கூறினார். அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தைப் பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி “மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காக என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி “மயிலை” என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். பரமனும் அவ்வாறே அருளினார்.

  கபாலீசுவரருக்கு ஓவ்வொரு பவுர்ணமியிலும் விசேஷ பூஜை நடக்கிறது. அம்பிகை மயில் வடிவில் பூஜித்த தலமென்பதால், மயிலாப்பூர் என்ற பெயர் எற்பட்டது. தேலோகத்துக் கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப் போல இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் கற்பகாம்பிகை எனப்பட்டாள். பங்குனியில் அறுபத்துமூவர் விழா நடக்கும்போது நாயன்மார்கள் வீதியுலா செல்வது சிறப்பு. இக்கோயிலின் கிழக்கு ராஜ கோபுரத்தில், ஏழு நிலைகள், ஓன்பது கலசங்கள் அமைந்துள்ளது. கோபுரத்தின் வடக்கில் பிரம்மனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கோபுரத்தைச் சுற்றி புராணாகாலச் சிற்பங்களும் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் நர்த்தன விநாயகரும், அவருக்கு இடது பக்க கோயிலின் தெற்குப் பிரகாரத்திலிருந்து பார்த்தால் ராஜகோபுரத்தின் முழுமையான தரிசனம் கிடைக்கும். ராஜகோபுரத்தை அடுத்து தேர் மண்டபமும், பிரகாரத்தின் தென்பகுதியில் மடப்பள்ளி, அன்னதான மண்டபம், பூங்காவனம், பழநி ஆண்டவர் சன்னதி, இத்தலத்தில் அவதரித்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஓருவரான வாயிலார் நாயன்மாரின் சன்னதி அகியவை அமைந்துள்ளது. பிரகாத்தின் நடுவில் 16 கால் நவராத்திரி மண்டபமும், நால்வர் மண்டபமும் உள்ளது. கோயிலின் மேற்கு பிரகாரத்தில் தான் கபாலீசுவரரின் மேற்கு நோக்கிய சன்னதியும், கற்பகாம்பாளின் தெற்கு நோக்கிய சன்னதியும் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய இந்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு எதிரில் நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளது. மேற்கு வாசலின் அருகே  சிவனைப் பார்த்தப்படி திருஞானசம்பந்தரும், அங்கம்பூம்பாவையும் தன சன்னதியில் உள்ளனர். இந்த வாசலுக்கு எதிரில் தான் கபாலீசுவரர் தெப்பக்குளம் அமைந்துள்ளது.

தல விருச்சம்:- புன்னை மரம்

தீர்த்தங்கள்:- கபாலி தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், கங்கை தீர்த்தம்,வாலி தீர்த்தம்,

வெள்ளி தீர்த்தம், இராமர் தீர்த்தம்.

 ஆலய தொடர்புக்கு : 044-24641670

செய்தி   : ப.பரசுராமன்

படங்கள் : ப.வசந்த்

The post அம்பாள் மயில் வடிவில் பூஜித்த மயிலாப்பூர் கபாலீசுவரர்! appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>