Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

என் பக்தர்களுக்கு என்ன நடந்தாலும்! அவாளை காப்பாத்துவேன்!

$
0
0

என் பக்தர்களுக்கு என்ன நடந்தாலும்! அவாளை காப்பாத்துவேன்!

 ஒருநாள் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகாபெரியவா முன்னால் வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா. பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா.சபையில சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறுதுக்காக என்னை அழைச்சிருக்கா. உங்க உத்தரவைக் கேட்டுண்டு பதில் சொல்றதா சொல்லியியிருக்கேன்!" பவ்யமாகச் சொன்னா.

மெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல கையை உசத்தின ஆசார்யா, ரொம்ப நல்லது.இது உனக்கு மட்டுமான கௌரவம் இல்லை. நம்ம தேசத்தோட கௌவரத்துக்கானது. அதனால் கண்டிப்பா போய்ட்டுவா; அப்படின்னு சொன்னதோட,ஒரு பாட்டு எழுதித் தரேன். அதை அவஸ்யம் அங்கே பாடுன்னு சொல்லிட்டு, பாட்டை எழுதிக் குடுத்தார்.

லோக மக்கள் சண்டை சச்சரவு இல்லாம, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்கற அர்த்தத்துல அமைஞ்ச அந்தப் பாட்டு, மைத்ரீம் பஜதன்னு தொடங்கினதால, அதுக்கு அந்தப் பேரையே வைச்சார்.

பரமாசார்யாளோட ஆசிர்வாதமே பெரிய சந்தோஷம். அதைவிடப் பெருசா, அவரே ஒரு பாட்டை எழுதிக்குடுத்து அதை அவஸ்யம் பாடுனு சொல்றார்னா,அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்றது? புளகாங்கிதத்துல கண்லேர்ந்து ஆனந்த பாஷ்யம் சொரிய,அந்த பாட்டை வாங்கி பத்திரப்படுத்திண்டு புறப்பட்டார் எம்.எஸ்.

ஆச்சு. குறிப்பிட்ட நாள்ல குறிச்ச நேரத்துல ஐ.நா.சபையில பாடறதுக்காக போய் இறங்கினா எம்.எஸ். சரியா அதே நேரத்துல தடங்கல் மாதிரி ஒரு லாக் ஏற்பட்டது. ஏரோப்ளேன்ல போய் இறங்கறவாளுக்கு ஜெட்லாக்னு ஒரு பிரச்னை ஏற்படும்னு சொல்வா. அந்தமாதிரி ஏதாவது ஏற்பட்டிருந்தா பரவாயில்லை.சமாளிச்சுண்டுடலாம்.

இவாளுக்கு ஏற்பட்டது, த்ரோட் லாக். ஆமாம் காற்றினிலே வரும் கீதம்னு பாடினவாளோட வாய்ஸ்ல வெறும் காத்து மட்டும் வர்ற மாதிரி தொண்டை அடைச்சுண்டுடுத்து. ஐ.நா.சபையில பாடறுதுக்கு இன்னும் ரெண்டு மூணு நேரம்தான் இருக்குங்கற சூழ்நிலையில என்ன செய்யறதுன்னே புரியலை அவாளுக்கு. கூடப் போயிருந்தஇசைக் கலைஞர்கள் எல்லாம் தெரிஞ்ச கைவைத்தியத்தை செஞ்சு பார்த்தா.ஊஹூம் எதுவும் கைகொடுக்கலை.

அழறதுக்குக்கூட முடியாம அப்படியே வாயடைச்சு பரிதவிச்சு நின்னுண்டு இருந்த சமயத்துல அவாளுக்கு பரமாசார்யாளோட ஞாபகம் வந்திருக்கு. இது உனக்கான கௌரவம் இல்லை. பாரத தேசத்துக்கானது கண்டிப்பா நீ பாடணும்னு சொல்லி ஒரு பாட்டையும் எழுதிக்குடுத்த அந்த மகானோட வாக்கு ஒருபோதும் பொய்க்காது.கண்டிப்பா அவா காப்பாத்துவார்!னு ஒரு நம்பிக்கை மனசுக்குள்ளே தோணித்து.உடனே,என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு, தங்கியிருந்த ஜாகைலேர்ந்து ப்ரோக்ராம் நடக்கப்போற இடத்துக்கு கிளம்பிட்டா.

 ஐ.நா.சபை கூடத்துல அவா போய் உட்கார்ந்ததும் சபையே நிசப்தமாச்சு.தம்புராவோட ஸ்ருதி மெதுவா ரீங்காரமிட ஆரம்பிச்சுது.  கண்ணை இறுக்க மூடிண்டு,கையைக் கூப்பிண்டு இக்கட்டு. இக்கட்டு பண்ணாம நீங்கதான் காப்பாத்தணும்! ஆசார்யாளே நீங்க விட்ட வழின்னு நினைச்சுண்டு மெதுவா வாயைத் திறந்தா இசையரசி. வழக்கத்தைவிடவும் ரொம்பவே இனிமையான கானம் மழையா பெய்ய ஆரம்பிச்சுது.

 தாளம்,லயம்,பாவம் எல்லாம் கைகோர்த்துக்க, சப்த ஸ்வரமும் ஸ்ருதி தவறாம சங்கிலியா இணைஞ்சு சங்கீதம் ஒலிச்சுது. நிகழ்ச்சியோட நிறைவா மகாபெரியவா எழுதிக்குடுத்த மைத்ரீம் பஜத பாடலைப் பாடிமுடிச்சா. அவ்வளவு நேரமும் அந்த கானசாகரத்துல ஐக்கியமாகி இருந்த ஐக்கிய நாடுகள் சபையோட உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் பண்ணினா.

 கண்ணுல நீர்க் கசிய எழுந்து நின்ன எம்.எஸ், மனசுக்குள்ளே,ஆசார்யாளே அத்தனை பெருமைக்கும் காரணம் நீங்கதான்!.ஒலிச்சது என்னோட குரல் இல்லை. கடவுளான உங்க அனுகிரகத்தால் வந்த குரல்.இதுன்னு நினைச்சுண்டு நெகிழ்ந்து நின்னா.

அங்கேர்ந்து திரும்பி வந்ததும்,பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.அவா எதுவும் சொல்றதுக்கு முன்னாலேயே என்ன பாடமுடியாதபடிக்கு தொண்டை,சண்டை போட்டுதாக்கும்! இருந்தாலும் சமாளிச்சு பாடிட்டே போல இருக்கு! சந்த்ரமௌளீச்வரரோட க்ருபை உனக்கு எப்பவும் உண்டு அப்படின்னு சொல்லி ஆசிர்வதித்தார் ஆசார்யா. இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும்.அவாளை நான் இருந்த இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்!.

நன்றி-இன்று வெளிவந்த குமுதம் லைஃப் இதழ்

ஹர ஹர சங்கர!  ஜெய ஜெய சங்கர!

The post என் பக்தர்களுக்கு என்ன நடந்தாலும்! அவாளை காப்பாத்துவேன்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


சாந்தனுவை மேம் ஆக்கிய நடிகை


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>