Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ராகு &கேது பெயர்ச்சி யாகம்!

$
0
0

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ராகு & கேது பெயர்ச்சி யாகம் !

வருகிற 27.07.2017 வியாழக் கிழமைகாலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  நடைபெற உள்ளது

 ‘நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்’என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.

 ‘நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்’என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.

 வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும்,  டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 73க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.

 அவற்றுள் ராகு & கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகு & கேது-வாக தரிசனம் தரும் இந்த ராகு & கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகு & கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

 நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும்,சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.

 ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.

 பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே!ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு,கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.

 குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு & கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு & கேது பெயர்ச்சி என்கிறோம். வருகிற27.07.2017 வியாழன் அன்று சிம்மம் ராசியிலிருந்து இருந்து கடகராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் கும்பத்திலிருந்து மகரத்திற்கு  இடப்பெயர்சி செய்கிறார்

 அடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள். வாலாஜாவில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பு ஹோமங்களுடன் நன்றாகவே நடந்து வருகின்றன.

 இந்த முறையும். பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும்.‘ராகு & கேது பெயர்ச்சி’ விமரிசையாக வருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  நடைபெறஉள்ளது. அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்.

 மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு & கேது பெயர்ச்சி அன்று உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. சங்கல்ப காணிக்கையாக ஒரு ராசிக்கு ரூபாய். 500/-மட்டும் செலுத்தி பங்கேற்று பலன் பெற ப்ரார்த்திக்கின்றோம்.

யாகத்தின் பலன்கள்.

 திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:

ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,

அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை,

வாலாஜாபேட்டை . 632 513.

வேலூர் மாவட்டம்.

போன்: 04172 – 230033,

மொபைல்: 94433 30203/ 8124516666

The post வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ராகு & கேது பெயர்ச்சி யாகம்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>