Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

திருப்புகழின் பெருமை சொல்லும் அற்புதமான திருப்புகழ்!

$
0
0
தவத்திரு அருணகிரியாரின் வைராக்கியத்திற்கு சான்றாகவிருக்கும் திருப்புகழ்…
திருப்புகழின் பெருமையை உலகுக்கு சொல்லும் அற்புதமான திருப்புகழ்….

அவர் அருளாலே அவர் தாள் வணங்கிட இன்னுமொரு வாய்ப்பை அளித்த செல்வத்துக்கு நன்றி. நம் வேண்டுதலில் தர்மம் இருக்கும் வரையில் ஓடோடி வந்து நிறைவேற்றி அருள்வதே குருவின் சிறப்பல்லவோ! தனிழறிவு குறைவாலே அடியவன் எழுத்திலே பிழையிருக்குமானால் அருட்கூர்ந்து அறிந்தவர்கள் அடியவனுக்குக் கற்றுத் தாருங்கள். உயிர்த்திருக்கும் ஒவ்வொரு ஜீவனும் எம்முறவே! அவர் மனத்தே நிறைந்து அருள்வதும் எம் பெருமானாம் திருக்கச்சீசன் ஸ்ரீமஹாஸ்வாமிகளே!

சங்கரம் போற்றி!

ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…

#குருப்புகழ்

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் …… தனதான

……… பாடல் ………

நினைத்தது மளிக்கும் பிறப்பினி லுயர்த்துஞ்
சிறப்பதை யளிக்குஞ் … … … சுடர்தேவா

மனத்துயர் அகற்றும் மகிழ்ச்சியும் நிறைக்கும்
குணத்தவ னுதிர்க்கும் … … … முறைபேணி

நிறைபுக ழுரைக்கும் குருப்புகழ் உரைத்தும்
மனத்தினி லுருக்கமுங் … … … கூடிடவே

நினைப்பவர் தமக்கும் மனத்திலு மினிக்குஞ்
சிறப்பதுஞ் செழிக்கும் … … … அருளீசா!

இனித்தவ ளிருக்குந் தலத்தினி லினிக்கும்
உருத்திரச் சுடர்குரு… … … நின்நாமம்

செபித்தவ ரெவர்க்கும் சிறத்தன வளிக்கும்
குருப்பத மொளிர்க்கும் … … … நிறைவாக

குருத்துணை யினிக்குஞ் சுரப்பதுஞ் செழிக்கும்
வழித்துணை யிருக்கும் … … … மா’தவனே

கனத்தன விலக்குந் துளிர்த்ததுந் திளைக்குந்
தலத்தினி லிருக்கும் … … … பெருமானே!

  மற்றொருவருக்காக நாம் ப்ரார்த்திப்பது என்பது மிகவும் உயரிய பலனை நமக்குத் தரும். நமக்கு இருக்கும்படியான பாபங்களும், தோஷங்களும், சாபங்களும் விலகி மங்களங்கள் நிறையும் ர்ன்பதில் ஐயப்பாடு இல்லை. எல்லோருக்குமாக ப்ரார்த்திப்போம். ஏகம்ப ரூபனாம் நம் காஞ்சி வரதன் கருணாமூர்த்தி சாந்தமுகன் சத்வக்ஞன் சதாசிவபூஜிதன் சங்கர மஹாபிரபு ஸ்ரீமஹாஸ்வாமிகள் இப்படியாக லோகக்ஷேமத்திற்கென ப்ரார்த்திக்கையில் சர்வ சத்தியமாக அங்கு ப்ரத்யக்ஷமாக நிறைந்து அருளாவரன்றோ!

உபனயனம் ஆனவர்கள் சஹஸ்ர காயத்ரீ ஜபிக்க வருகையில் பஞ்சபாத்ரத்துடனாக, திருமணமானவர்கள் பஞ்சகச்சத்திலுமாக வாருங்கள். தயை கூர்ந்து ப்ர்ண்டிர் அனைவரும் பாரம்பரிய உடையிலே வாருங்கள். ஒரு முறை இப்பஇயான ப்ரார்த்தனையிலே நேங்களும் வாழ் நாளிலே கலந்து கொண்ட திருப்தியுடனாக எல்லோரும் நலமோடு வாழ ப்ரார்த்தியுங்கள்.

அனைவருக்கும் நல்லன பெருக மஹாஸ்வாமியை பிரார்த்தித்து குருப்புகழ் பெருமையைச் சொல்லிப் ப்ரார்த்திக்கும் இன்றைய குருப்புகழை அவருடைய பாதாரவிந்தங்களிலே சமர்ப்பிக்கின்றேன்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

ஜெயா ஜெயா சங்கர ஹர ஹர சங்கர

பெரியவா கடாக்ஷம்.

The post திருப்புகழின் பெருமை சொல்லும் அற்புதமான திருப்புகழ்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>