நோய், தோஷம், தரித்திரங்களை அகற்ற வேண்டுமா?
ஸ்ரீ மங்களாம்பிகை சடாதார மங்கள துதி
துதியின் சிறப்பு:
மங்களாம்பிகை தேவி 51 அட்சரங்களுடன் கூடிய சக்தி வடிவினளாகவும், மகாயாகம் என்று வர்ணிக்கப்படுகின்ற ஸ்ரீவித்யா பூஜையில் விருப்பம் கொண்டவளாகவும், அமுதேச சிவபெருமானின் அன்புக்குப் பிரியமானவளாகவும், 64 கலைகளோடு கூடிய மூலாதார சக்கரத்தில் வீற்றிருப்பவளாக வும் விளங்குகிறாள்.
ஸமஷ்டி மந்த்ர ரூபாம் தாம்
மஹாயாக ப்ரியாம் சிவாம்/
மூலதார ஸ்திதாம் வந்தே
அமிர்தேச ப்ரியாம் தலாம்//
மங்களாம் மாத்ருகாம் தேவீம்
ஸர்வ மங்கள ரூபிணீம்/
ஸ்வாதிஷ்டான ஸ்திதாம்
வந்தே ஸர்வ மங்கள தாயிம்//
ஸர்வகாமப்ரதாம் திவ்யாம்
ஸர்வக்ஞாம் ஞானதாம் சுபாம்/
துர்கடார்த்த ப்ரதாம் வந்தே
மணிபூரக வாஸினீம்//
கணபீத ஹராம் காளீம்
காருண்யாம்ருத ரூபிணீம்/
கணாம்பிகா மஹம் வந்தே
அநாஹத நிவாஸினீம்//
ஸர்வரோக ஹரீம் கௌரீம்
ஸர்வ தாரித்ரிய நாஸினீம்/
ருக்விபேதிநீ மஹம் வந்தே
விசுத்தே ஸ்தேதித காமிநீம்//
ஸர்வைஸ்வர்ய ப்ரதா தாத்சீம்
ஸர்வானந்த ப்ரதாயினீம்/
ஸர்வேப்ஸித ப்ரதாம் வந்தே
ஆக்ஞா சக்ர நிவாஸிநீம்//
மங்களம் தேஹி மந்த்ரேசி
சர்வ மந்த்ர ஸ்வரூபிணி/
கும்பேச வாமபாகஸ்தே
கும்பகோண நிவாஸினி//
மங்களாம்பிகா துதி நித்யம்
ய படேத் பக்தி மாந்நர:/
சர்வ சௌபாக்ய மவாப்னோதி
ஸகல கார்ய சித்திதம் ஸதா//
ஸ்ரீ மங்களாம்பிகை எனவும் மருவார் குழலி (மாறாத மணத்தை கொண்ட கூந்தலை உடைய நாயகி ) அம்பிகை எனவும் சிறப்புப்பெயரால் வழங்கப்பெறுகிறார் .
சர்வமங்கள ரூபிணியாகவும், ஞானத்தை அளிப்பவளாகவும், நமது மனவிருப்பத்தை அறிந்து கிடைப்பதற்கரிதான பொருளைத் தருபவளாகவும், நோய்கள், தோஷங்களை அகற்றி, தரித்திரங்களை விலகச் செய்து, நாம் விரும்புகிற அனைத்து ஐஸ்வர்யங்களையும் அருள்பவளாகவும் காட்சி தருகிறாள்.
மந்திர அட்சரங்கள் எல்லாம் அவளுக்குள் ஒடுங்கியிருப்பது போற்றுதலுக்குரியது என இத்துதி அம்பிகையின் சக்தியை எடுத்துச் சொல்கிறது.
The post நோய், தோஷம், தரித்திரங்களை அகற்ற வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.