Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

நாளை ராகு கேது பெயர்ச்சி மகா யாகம் மொரட்டாண்டி

$
0
0

நாளை ராகு கேது பெயர்ச்சி மகா யாகம் மொரட்டாண்டி

நமது மொரட்டாண்டி நவகிரக கோவிலில் நாளை (27.07.2017) ராகு கேது பெயர்ச்சி மகா யாகம்.

புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டி டோல்கேட் அருகில் உள்ள விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ராகு கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.

வரும் 27ம் தேதி ராகு பகவான், சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசிக்கிறார். கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையடுத்து 12 அடி உயர ராகு பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், 22 ஆயிரம் உளுந்து வடை நைவேத்தியமும், அதேபோல் 12 அடி உயர கேது பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடக்கிறது.

காலை 8 மணிக்கு நட்சத்திர ராசி பரிகார ஹோமங்களும், 10 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், காலை 12.37 மணிக்கு சிதம்பர குருக்களால் சகல அபிஷேகமும் நடக்கிறது.

பகல் 12.37 மணிக்கு ராகு பகவான், கேது பகவானுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி, மகா தீபாராதனை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.

பரிகாரம் செய்பவர்கள் பால் அபிஷேகத்திற்கு 100 ரூபாயும், பரிகார ஹோமத்திற்கு 150 ரூபாயும், பரிகார ஹோமம் செய்வதற்கு 300 ரூபாயும், தோஷ பரிகார அர்ச்சனைக்கு 150 ரூபாயும் அலுவலகத்தில் செலுத்தி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

 உலகிலேயே மிக உயரமான சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில்- நின்ற கோலத்தில் மிக கம்பீரமாகக் காணப்படுகிறார். “பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் இவர் உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கி றார். ஆக மங்களில் இவரது வாகனம் கழுகு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் (சன் கார்டன்ஸ்) என்று அழைக்கிறார்கள். இந்தத் தோட்டத்தினைச் சுற்றி 27 நட்சத்திர மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. மேலும், வண்ண வண்ண ரகம் கொண்ட ரோஜா மலர் வகைகளும் மற்றும் பல மலர்ச் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித்தால் வாஸ்து தோஷம் நீங்குமாம்.

இத்திருத்தலம் திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ளது. பேருந்தில் பயணித்தால் கோரிமேடு என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி கிராமத்திற்குச் செல்ல வேண்டும்.

தொடர்புக்கு

கீதாராமன்

Cell : 9345451655 / 8124516666

The post நாளை ராகு கேது பெயர்ச்சி மகா யாகம் மொரட்டாண்டி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>