Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

திருமண யோகம் கைகூட உதவும் பள்ளிகொண்டான்!

$
0
0

ஸ்ரீமந் நாராயணன், நதியின் குறுக்கே பள்ளி கொண்டுள்ள தலங்கள் மூன்று. அவை, பள்ளி கொண்டான், திருப்பாற்கடல், திருவெஃகா ஆகியனவாகும். இவற்றுள், அவர் எழுந்தருளிய திருக்கோலத்தையே தலத்தின் பெயராக கொண்டது பள்ளிகொண்டான் எனும் திருத்தலம் மட்டுமேயாகும். இத்தலம் வேலூரிலிருந்து ஆம்பூர் செல்லும் வழியில் உள்ள பள்ளிகொண்டான் எனும் ஊரில், பாலாற்றின் தென்கரையில் உள்ளது. இத்தலத்திலுள்ள பெருமாள் உத்தர ரங்கநாதர் என அழைக்கப்படுகின்றார். பிரம்மலோகத்தில் பிரம்மனும், சரஸ்வதி தேவியும் பெருமாளின் கல்யாண குணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 முப்பெரும் தேவியருள் திருமகளே உயர்ந்தவள் என்று பிரம்மன் கூறினார். அதனை கேட்ட கலைமகள் கோபங்கொண்டு அவ்விடத்திலிருந்து நீங்கி நந்திதுர்க்கம் எனும் மலைக்குச் சென்றார். அந்த சமயம் பிரம்மன் தனது மற்றொரு தேவியான சாவித்திரியுடன் சேர்ந்து யாகம் செய்ய தீர்மானித்தார். ஓராயிரம் யாகங்கள் செய்தால் கிடைக்கும் பலனை ஒரு யாகம் செய்தாலே அளித்திடும் சத்ய விரதக்ஷேத்திரம் எனும் கச்சியம்பதியில் பிரம்மா அவ்வாறு யாகம் செய்யத் தொடங்கினார். இதனை அறிந்த கலைவாணி கோபத்துடன் நதியுருக் கொண்டு நந்தி துர்க்கம் மலையிலிருந்து பாலாற்றில் பெருவெள்ளமாய் யாகத்தை நோக்கிப் பாய்ந்தாள்.

 அதனையறிந்த பிரம்மன், ஸ்ரீமன் நாராயணனை சரண் புகுந்து யாகத்தைக் காத்திடுமாறு வேண்டினார். வேகமாக வரும் வெள்ளத்தின் குறுக்கே ஆதிசேஷனாகிய பாம்பணையின் மீது பள்ளிகொண்டார் பெருமாள். அவ்வாறு தடுக்கப்பட்ட அவ்வெள்ளம் அப்படி தடுத்ததற்காகக் கோபம் கொண்டு, வேறுதிசையில் விலகி ஆனால், மறுபடியும் யாகத்தை நோக்கி ஓடியது. திருப்பாற்கடல் எனும் மற்றொரு இடத்தில் இந்த வெள்ளத்தைத் தடுப்பதற்காகவும் அணையாய்ப் பெருமாள் பள்ளி கொண்டார். அதனால் கலைவாணி முன்னிலும் கடுங்கோபத்துடன் மற்றொரு திசையிலிருந்து பாய்ந்து வந்திட அவ்வெள்ளத்தின் குறுக்கேயும் பெருமாள் பள்ளிகொண்டார்.

 அதனால் கலைவாணி செருக்கை விடுத்து நாராயணனை பணிந்தாள். அதன் பின் பிரம்மன் யாகத்தை இயற்றி எண்ணிய பயன் அடைந்தார். இவ்வாறு பெருமாள் நதியின் குறுக்கே பள்ளிகொண்டு அருளிய தலங்களுள் முதலாவதாக உள்ள தலம் பள்ளிகொண்டானாகும். மூன்று தலங்களுள் வடதிசையிலுள்ள தலம் இதுவாகையால் இங்குள்ள மூலவர் உத்தர ரங்கநாதர் (உத்தரம் – வடக்கு) என்று அழைக்கப்படுகிறார். கிருதயுகத்தில் தேவேந்திரன் இந்திராணியுடன் வளத்தில் உலாவி கொண்டிருந்தபோது கிளிரூபத்தில் கூடியிருந்த ரிஷிகள் இருவருக்கும் இந்திரனால் அசம்பாவிதம் நேரிட அதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிற்று.

மரீசி புத்திரராகிய காச்யப முனிவர் இந்திரனிடம் உத்திர ரங்கநாதன் வாசம் செய்யும் வியாச புஷ்கரணியில் தினந்தோறும் நீராடி அங்கு ஓராண்டு காலம் க்ஷேத்திரவாசம் செய்தால் தோஷம் நீங்கி விடும் என்று சொன்னதைக் கேட்டு இந்திரனும் அவ்வாறே செய்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான் என்பது வரலாறு. இத்தலம், பெருமாள் திருமணம் செய்து கொண்ட தலமாகும். சம்பாதி என்னும் முனிவர் எம்பெருமாளை சேவித்து செண்பகவல்லி என்பவளின் விருத்தாந்தத்தைச் சொல்லி ‘‘சூடிக் கொடுத்த சுடர் கொடி ஆண்டாளைப் போல் இவளும் மானிடர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்ந்திடேன்” என கூறி, பெருமாளின் மேல் இவள் கொண்ட காதலை ஏற்க வேண்டியபோது எம்பெருமாள் திருவுளம் கொண்டு பங்குனி உத்திரத்தன்று செண்பகவல்லியை மணந்து கொண்டார்.

 பெருமாளே மனம் உவந்து திருமணம் செய்து கொண்ட இடம் இதுவென்பதால் இங்கு பலரும் வந்து திருமணம் செய்து கொள்கின்றனர். இங்கே வேண்டிக் கொண்ட பலருக்கும் தடைகள் நீங்கி வெகு சிறப்பாகத் திருமணம் நிறைவேறியிருக்கிறது . கோயில் அமைப்பு பார்த்தவுடன் கவர்ந்து இழுக்கும் சிறப்பு கொண்டதாக திகழ்கிறது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. உள்ளே பலிபீடம், கொடிமரம் கருடாழ்வார் சந்நதி ஆகியவற்றைக் கடந்தால் முகப்பு மண்டபத்தில் புராண சிற்பங்களுடன் விஜயநகர மன்னர் காலத்து கற்தூண்களைக் காணலாம்.

கருவறையில் தெற்கே தலை வைத்து வடதிசை பாதம் காட்டி பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளார் அரங்கநாதர். உட்பிராகாரத்தில் ஆழ்வார்களின் சிலைகள் உள்ளன. வெளியே தெற்குப் பிராகாரத்தில் தனிச் சந்நதியில் அரங்கநாயகித் தாயாரை தரிசிக்கலாம். தென்மேற்கு மூலையில் சீதாராமன் சந்நதி. மேற்கில் நர்த்தன கிருஷ்ணன், வடக்கு பிராகாரத்தில் ஆண்டாள் சந்நதிகள் உள்ளன. இவ்வாலயத்தின் தலமரம் பாதிரி ஆகும். இங்கே அரங்கர் விமானம் சிறப்பாக உள்ளது.

 இத்தலத்தில் வைகுந்த ஏகாதசி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசிக் கருடன் ஆனி திருமஞ்சனம், ஆடிபூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, விஷ்ணு கார்த்திகை, தனுர்மாதபூஜை, மாசி தெப்பம், பங்குனியில் பெரிய பிராட்டியார் உற்சவம் என எல்லா மாதங்களிலும் சிறப்பாக உற்சவங்கள் உள்ளன. திருமண யோகம் கைகூட உத்தர ரங்கநாதரை வழிபட்டு பலன் பெறுங்கள்.

The post திருமண யோகம் கைகூட உதவும் பள்ளிகொண்டான்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


எவடே சுப்பிரமணியம்?


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


முகம் காட்டச் சொல்லாதீர்.....


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


ஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்


சித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!


ஆசீர்வாத மந்திரங்கள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>