Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

குழந்தை வரமளிக்கும் திருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில்

$
0
0

குழந்தை வரமளிக்கும் திருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில்

 குழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தை மனைவியருக்கு கொடுத்தார். அதை பருகிய தசரத பத்தினியருக்கு குழந்தைகள் (ராம சகோதரர்கள்) பிறந்தனர். இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருந்து, அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்த இடம். தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோயிலில் உள்ளது. 72 சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோயில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகம் மகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார். அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார்.

  இத்தகைய சிறப்பு பெற்ற அரச மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இந்த மரம் சுவாமி சன்னதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.
சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்த போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்ட ராமர்.
அதனால்தான், தருப்பை புல் அணை என்பது, நாளடைவில் திருப்புல்லாணி என மருவியதாக பெயர்க்காரணம் கூறுவர். ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம். மூலஸ்தான சுவரில் இலங்கைக்கு பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர். எத்தனையோ டாக்டர்களிடம் காண்பித்து சரியாகதவர்கள் இங்கு வந்து வணங்கி செல்கின்றனர். இங்கு வந்து வணங்கி சென்றால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
சக்கரத் தீர்த்தம், ஹம்ச தீர்த்தம், வருண தீர்த்தம், தரும தீர்த்தம், இராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம் ஆகிய குளங்களும்; இரண்ய நதி, கண்வ நதி, க்ஷீ ர நதி என்னும் நதிகளும்; ஆதிசேது எனப்படும் கடலும் நம் கர்ம வினைகளைப் போக்கி, மோட்சம் தந்திட நம்மை வரவேற்கின்றன. எனவே ஆற்றுநீர், குளத்துநீர், கடல் நீர் என மூன்று நீர்ப் பெருமை வாய்ந்த தலமாக இது உயர்ந்து நிற்கிறது.

The post குழந்தை வரமளிக்கும் திருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>