இன்று சந்திர கிரகணத்தன்று கிரிவலம் செல்வது ஆபத்தா?
கர்ப்பிணிகள் கிரிவலம் செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று இரவு 10.20 முதல் இரவு 12.05 வரை நீடிக்கிறது. கிரகணம் என்பது தோஷ காலமாக கருதப்படுவதால் கிரகண நேரத்தில் கோயில்களில் வழிபாடுகள் நடக்காது. கிரகணம் விட்ட பிறகு தோஷ நிவர்த்தி பூஜைகள் நடத்தப்பட்டு, பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும்.
சந்திரகிரகணத்தின்போது சிவ நாமத்தை உச்சரித்தபடி கிரிவலம் சென்றால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இது சிவ அருளால் ஏற்படும் அபூர்வ நிகழ்வாகும். சந்திர கிரகணம் ஏற்படுவதால் இரவு பவுர்ணமி நாளில் கிரிவலம் வர எந்த தடையும் இல்லை.
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (7 ம் தேதி ) மாலை 4.30 மணி முதல் நடை அடைக்கப்படுகிறது. இரவு 10.52 மணி முதல் 12.48 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இன்று மாலை முதல், நாளை காலை வரை நடை அடைக்கப்பட உள்ளது.
நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோல்மாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்ம ஆராதனைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் இன்று விசேஷ பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கர்ப்பிணிகள் மட்டும் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும். சந்திர கிரகணம் முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும். கோயில் நடைதிறப்பு, பூஜைகள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஆகஸ்ட் 7-ம் தேதி திங்கட்கிழமை இரவு 10.50 மணி முதல் நள்ளிரவு 12.44 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. எனவே, அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து நடக்கும் மற்ற பூஜைகள் வழக்கமான நேரப்படி நடக்கும். பின்னர், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்பாடு மற்றும் ராக்கால அபிஷேகமும் நடைபெறுகின்றன. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடைபெறும். இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை முடிந்ததும் நடை சாற்றப்படுகிறது. மீண்டும், இரவு 9 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. அதன்பின் சுவாமிமீது பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டு நடைதிருக்காப்பு இடப்படுகிறது. மீண்டும் அதிகாலை 3 மணிக்கு புண்ணியாகவாஜனமும், தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெறும்
The post இன்று சந்திர கிரகணத்தன்று கிரிவலம் செல்வது ஆபத்தா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.