Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

குழந்தை வரம் வேண்டி கோட்டைமலை மேல் கோவில் கட்டிய மன்னன்

$
0
0

 சம்புவராய  மன்னர்கள் படை வீட்டை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த போது அவர்களால் பல கோவில்கள் கட்டப்பட்டது. காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் பல கோவில்கள் சிதிலமடைந்தது. 25சென்னை வேணுகோபால சுவாமி கைங்கர்ய அறக்கட்டளை மற்றும் இந்து அறநிலையத்துறை இப்போது புனரமைக்கப்பட்டுள்ளது. அப்படி கட்டிய கோவில்களில் சம்புவராய மன்னன் தன் மனைவிக்கு புத்திர பாக்கியம் வேண்டி கட்டிய கோட்டை மலை மீது காட்சிதரும் ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி காட்சி தரும் மலைமீது மனங்கவரும் இயற்கை சூழலில் ஜொனைகளும்.கோட்டை கொத்தளத்துடன் சீரும் சிறப்புமாய் விளங்கிய இத்திருக்கோவில் இன்று மீண்டும் அச்சிறப்பான காலத்தை எதிர்நோக்கி நாடி வரும் பக்தர்களுக்கு வேணுகோபால சுவாமி அருளாசி வழங்கி வருகிறார்.காலை நேரத்தில் கதிரவனின் ஓளி பெருமாள் திருமுகத்தில் படும் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. கட்டிட கலையில் சம்பவராய மன்னனுக்கு சிறந்து விளங்கியது வியப்புக்குரியதாகவே உள்ளது.

DSC_5449   முதன்முதலாக சம்புவராயர்களின் தன்னுரிமையுள்ள தன்னாட்சியை நிறுவியவர் ராஜ கம்பீர சம்புவராயர் (1236-1268) ஆவார். இவரமைத்த படை வீட்டில் ஓரு மலையின் பெயர் ராஜ கம்பீர மலை என்று இவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.இவரது பெயரிலே 1239-ல் இவரால் கட்டப்பட்ட ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் இம்மலையின் 2560 அடி உயர உச்சியில் அமைந்துள்ளது.குண்டலிபுரம் படை வீடு ஆனது எப்படி?சோழர்கால ஆட்சியில் குறுநில மன்னர்களாய்த் திகழ்ந்த சம்புவராய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இத்தலம், போர் படையினர் தங்கும் இடமாகவும், ஆயுதங்களின் கிடங்காகவும் திகழ்ந்தது. படைவீடு அன்று அழைக்கப்பட்டதுஆதியில் குண்டலி நகரம், குண்டலிபுரம் எனப்பெயர் பெற்றிருந்தது. அன்னை ஸ்ரீ ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து அருள் பாலித்ததால்  படைவீடு என்றானது.

      சம்புவராய மன்னர் மறைவுக்குப்பின் இந்த கோட்டை மலை மேல் உள்ள கோவிலில் இன்றைக்கு சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். வாரத்தில் ஓவ்வொரு சனிக்கிழமை தோறும் பக்தர்கள் வழிபடுகிறார்கள் என்றும், மற்ற 6 நாட்களும் தேவர்களும், சித்தர்களும் பெருமாளுக்கு பூஜை செய்து வருவதாக மிகவும் விசேஷமாக நம்பப்படுகிறது. இக்கோவில் 5 மலைகளுக்கு இடையில் உள்ளதால் சமஸ்கிருதத்தில் இந்த இடம் பஞ்ச பருவத ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.முக்தி கல்வி,புத்திர பாக்கியம் வேண்டியவர்கள் சந்தான கோபால என்னும் மந்திரம் சொல்லி வழிபட்டால் புத்திர பாக்கியமும், சகல சவுபாக்கியமும் கிடைக்கும் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது. பக்தர்களின் நம்பிக்கையாகவே உள்ளது.

நடைதிறப்பு :

    ஓவ்வொரு சனிக்கிழமை தோறும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.

அமைவிடம் :  திருவண்ணாமலை -வேலூர் சாலையில் உள்ள சந்தவாசலிருந்து 8வது கிலோ மீட்டரில் உள்ளது.

தொடர்புக்கு ; 04181 – 248224 / 248279

படமும் செய்தியும்:                                                                                                                                           ப.பரசுராமன்

The post குழந்தை வரம் வேண்டி கோட்டைமலை மேல் கோவில் கட்டிய மன்னன் appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>