சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்?
ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் அதாவது ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்;றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16 விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மைப் பதினாரும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கிறார். ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீ மஹா சுதர்ஸனர் ஸ்ரீ சக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார். மேற்படி ஸ்ரீ சக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம். எனவே இப்படிப்பட்ட ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தின் பலனை முழுமையாகப் பெற, நடத்திக்கொடுப்பவர் மிகுந்த பக்தி ச்ரத்தை, நீண்ட அநுபவம், வைராக்ய அநுஷ்டானம், நல்ல கைராசி, பூர்ண வாக் பலிதம் முதலிய தகுதி பெற்றிருத்தல் முக்கியமாகும். இவற்றுடன் வேதாப்யாசமும் உள்ளவராயின் மிகவும் நன்மை உண்டாகும்.
ஸ்ரீ சுதர்ஸன ஹோமத்திற்கு நாள் தேர்ந்தெடுக்க:
வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது குடும்பத் தலைவரின் ஜன்ம மாத ஜன்ம நக்ஷத்திர தினம், அல்லது எந்த மாதத்திலும் சித்திரை, ஸ்வாதி அல்லது திருவோண நக்ஷத்திரம் உள்ள நாள், அல்லது பொதுவான முஹ_ர்த்த நாள் அல்லது குடும்ப உறுப்பினர் யாருடையதாயினும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது ஏதாவது ஒரு சனிக்கிழமை என்று எந்த தினத்தில் வேண்டுமானாலும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தை அநுஷ்டிக்கலாம். விழுப்புத் தீட்டு கலக்காமல் சுத்தமாகவும் பக்தி ச்ரத்தையுடனும் பரம விஸ்வாசத்துடனும் நம்பிக்கையுடனும் செய்யப்படும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தினால் மட்டுமே நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியும். (நல்ல பலன் ஏற்படவேண்டும் என்ற விதி உள்ளவர்களுக்கே அவர்கள் முயற்சிக்குத தக்க இப்படிப்பட்ட வாய்ப்பு தாமாகவே உருவாகும்)
ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தில் அல்லது எப்போதுமே பெருமாளிடம் தன்னுடைய கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டிய முறை:
தனக்கு ஒரு சொந்த வீடு அமையவேண்டும் என்றால் பெருமாளே எனக்கு ஒரு சொந்தவீடு நீ தரவேண்டும் என்று வேண்டக்கூடாது பதிலாக பெருமாளே அடியேன் ஒரு சொந்தக் குடிலை அமைத்துக்கொள்ள தேவையான சக்தியினையும், அதற்குகந்ததான மற்ற அநுகூலங்களையும் அது ஸம்பந்தமான அடியேன் முயற்சிகளில் கால தாமதமும் ஏமாற்றமும் இன்றி நல்ல இடத்தையும் நல்ல மனிதர்களையும் காட்டிக் கொடுத்து ஒரு நல்ல க்ருஹம் அமைய ஆவன செய்ய வேண்டுமாய்ப் ப்ரார்திக்கிறேன் என்றும் வேண்டிக் கொள்ளவேண்டும்.
1. தங்கள் நக்ஷத்திரம்
2. ராசி
3.கோத்திரம்
4. சர்மண் (ஆண்களுக்கு உபநயனத்தின் போதும் பெண்களுக்கு திருமணத்தின்போதும் வைக்கப்படும் வைதீக பெயர்)
5. ஹோமம் நடத்தும் யஜமானனுக்கு உறவு
6. தங்கள் கோரிக்கை (விண்ணப்பம் வெளியில் சொல்ல முடியாததாயின் நினைத்தது நிறைவேற என்று சொல்லலாம்) என்ற ரீதியில் முன்கூட்டி ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி தயாரித்து வைத்துக்கொள்வது நலம். ஹோமம் நடக்கும் காலத்தில் மந்திர சப்தம் தவிர வேறு எந்த அப சப்தமும் (பேச்சும்) இல்லாமல் இருப்பது மிகுந்த பலனைத் தரும்.
ஹோமம் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முதல் நாளே க்ருஹத்திலுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அழுக்கு மற்றும் துர்வாசனை இன்றி அனைத்து இடங்களையும் அலம்பித் துடைத்து தேவையான இடங்களில் வண்ண வண்ணமாகக் கோலமிட்டு வைக்கவேண்டும்.
அனைவருக்கும் மடித்துணிகள் உலர்த்தி வைக்கவேண்டும். ஹோமம் நடைபெறும் நாளில் அடிக்கடி மலம் சிறுநீர் தொந்திரவு ஏற்படாத வகையில் வயிற்றையும் உடம்பையும் தகுந்த ஆகார நியமத்துடன் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
காலையில் எழுந்து தீர்த்தமாடி மடி உடுத்தி வாசலில் மாவிலைத் தோரணங்கள் கொண்டு அலங்கரித்து வாசலில் பெரிதாக அழகாக கோலங்கள் போட்டு வைத்து, வருபவர்கள் கால் அலம்பிக் கொண்டு உள்ளே வருவதற்கு ஏதுவாக ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்து மொண்டு ஆள்வதற்கு ஒரு சுத்தமான பாத்திரமும் எடுத்து வைக்கவேண்டும்.
சாம்பிராணி தூபம் தயார் செய்து ஒவ்வொரு அறையிலும் நன்றாகப் பரவச் செய்து மணம் கமழ வைக்கவேண்டும். வீட்டில் உள்ள பெருமாள் அறையில் உள்ள பழைய குப்பைகளை நன்றாகத் துடைத்து படங்களையும் கழற்றி நன்றாகத் துடைத்து மாட்டி வைக்கவேண்டும்.
பெருமாள் திருவாராதன பாத்திரங்கள் மணி, சொம்பு, ஸ்தாலி போன்ற அனைத்தையும் புளி, சாணி போட்டு கேஸவாதி 12 நாமங்களைக் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே ஜ்வலிக்கும்படியாக சுத்தி பண்ணி வைக்கவேண்டும்.
வீட்டில் நம் குடும்பத்தைச் சேர்ந்த மிக நெருங்கிய பந்துக்கள் அண்ணா தம்பிகள் சித்தப்பா பெரியப்பாக்கள் வீட்டில் உள்ள சாளக்ராம பெருமாள்களை யெல்லாம் கொண்டு வரலாம். ஹோமம் நடக்கப்போகும் அறையில் உள்ள வெப்பத்தால் சேதமடையக்கூடிய மெல்லிய ப்ளாஸ்டிக்கால் ஆன பொருட்கள், கண்ணாடி பொருட்கள் இவற்றை பத்திரமாக அப்புறப்படுத்தி வைத்துவிடுவது நல்லது.
காம, க்ரோத, வக்ர சிந்தனைகள் தமக்கும் ஏற்படாமல் காத்து, பிறருக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து காக்கவேண்டும்.
ஹோமம் மற்றும் பரிஹாரம் முதலிய சந்தேகங்களுக்கும், உதவிக்கும் தொடர்புக்கொள்ளவும்
Karthik Vishwanathan: +91- 9003267588 / 9941510000
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
Mobile: 9941510000
To Receive Our Daily Devotional News Update on Whatsapp message with Your name to 8124516666
Like us our Facebook page swasthiktv.com
Subscribe in Youtube: https://www.youtube.com/channel/UCGcuIrojwgrYpm5cKdf2bhg
The post சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.