திருச்செந்தூா் ஆவணித் திருவிழா பச்சை சாத்தி தாிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8ஆம் நாளான சனிக்கிழமை பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஆறுமுகப்பெருமான். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8ஆம் நாளான சனிக்கிழமை சுவாமி வெள்ளை,பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
![WhatsApp Image 2017-08-20 at 15.16.55]()
இக்கோயில் ஆவணித் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
7ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை அருள்மிகு சண்முகப்பெருமான் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
8ஆம் திருநாளான சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்தார்.
சுந்தரராமசுப்பிரமணிய பிள்ளை வகையறா 8ஆம் திருவிழா மண்டகப்படியில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பகல் 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேர்ந்தார்.
9ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமி, தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக. 21) காலை 6 மணிக்கு தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் வீதி வலம் வந்து நிலையை சேர்கிறது.
The post திருச்செந்தூா் ஆவணித் திருவிழா பச்சை சாத்தி தாிசனம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.