Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அனைத்து நன்மைகளும் அடைய சங்கடஹர சதூர்த்தி விரத வழிபாடு

$
0
0

அனைத்து நன்மைகளும் அடைய சங்கடஹர சதூர்த்தி விரத வழிபாடு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

ganapati01

 விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். ‘ஹர’ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை ‘மகா சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக்கின்றனர்.

விரதத்தின் பலன்கள்:

 இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

 சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும்.

‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்’

 எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு. விநாயகர் ஓங்கார வடிவானவர், முப்பத்தி இரண்டு விதமான வடிவங்களுடன் தோற்றமளிக்கும் விநாயகரின் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு தத்துவங்கள் உள்ளன.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post அனைத்து நன்மைகளும் அடைய சங்கடஹர சதூர்த்தி விரத வழிபாடு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


எல்லாம் நாடக மேடை – பாடலாசிரியர் யார்?


அவதூறு + ஆபாசம் + சிபிஎம்


விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா – 2010


ஆசீர்வாத மந்திரங்கள்


‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18


பள்ளி ஆசிரியை இரும்பு ஸ்கேலால் அடித்ததில் 8ம் வகுப்பு மாணவன் பார்வை இழப்பு?...


Minority Report (2002) Tamil Dubbed Movie HD 720p Watch Online


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


தேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


நாராயண பட்டத்ரி


பாக்கியசாலிகளாக்கும் காமாட்ஷி அம்மன் நவாவரண பூஜை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>