பலன் தரும் கணபதி ஹோமத்திற்குரிய ஆகுதிகள்
கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.
கணபதி ஹோமத்தின் பெருமை:
மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள்.
1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும்.
ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும்.
திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும்.
நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும்.
தேன் தங்கம் தரும்.
நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும்.
மோதகம் போரில் வெற்றி தரும்.
மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும்.
தாமரை செல்வ வளர்ச்சி தரும்.
வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும்.
அருகம்புல் குபேர சம்பத்து தரும்.
மோதகம் நினைத்ததைத் தரும்.
வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவை நினைத்ததைத் தரும்.
தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும்.
இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள் பெருமை சேர்க்க வல்லபை. பலன் தருபவை.
சங்கல்பம்:
சுபே சோபனே …. பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
நக்ஷ்த்ரே – ராசௌ ஜாதஸ்ய ஸ குடும்பஸ்ய
க்ஷமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய
ஐச்வர்ய அபிவ்ருத்த்யர்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்
ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்த்தம் மஹா கணபதி ஹோமம் கரிஷ்யே.
எட்டுத்திரவியங்கள் : கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் ஆகியவை.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post பலன் தரும் கணபதி ஹோமத்திற்குரிய ஆகுதிகள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.