தாழ்வு மனப்பான்மை அகன்று உற்றத்தில் தலை நிமிர்ந்து வாழ
மத்யாஷ்டமி அல்லது அஷ்டமி நாட்களில் 11 முறை ருத்ர வேத மந்திரங்கள், இதற்கு ஈடாக அப்பர் சுவாமிகள் அளித்துள்ள
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
போற்றித் திருந்தாண்டக மந்திரங்கள், மற்றும் சித்தர்கள் “ருத்ரத் தமிழ் வாடகம்” என அளிக்கும் ஞான சம்பந்தரின் திருக்கடவூர் மயானத் தேவாரப் பாக்களை
வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
ஓதுதல் மிகவும் விசேஷமானது. தன்னைப் பற்றி எழுந்துள்ள தன்னையே மாய்க்கும் தாழ்வு மனப்பான்மை அகன்று, சமுதாயத்தில், சுற்றம், உற்றத்தில் தலை நிமிர்ந்து வாழ இதன் பலன்கள் நன்கு உதவிடும்.
மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மல்லிகார்ஜுனம் (ஆந்திரா), திருப்புடைமருதூர், (திருநெல்வேலி அருகே) திருவிடைமருதூர் ஆகிய மூன்றில், நடுவனதாக, மத்தியார்ஜுனமாக விளங்குவது (கும்பகோணம் அருகே உள்ள) திருவிடைமருதூர் ஆகும். எனவேதான் இது மத்யார்ஜுனம் என அழைக்கப்படுகின்றது. மத்தியாஷ்டமி மற்றும் ருத்ராஷ்டமி உற்சவங்கள் பண்டைய யுகங்களில் இங்கு நன்கு பிரசித்தி பெற்றிருந்தன.
மதிலழகு மாமருதூர் தன்னில்
மத்திய ருத்திர மாதேவ சிவபோதம்
மகத்துவ அட்டமி மாதவ பாவனமே
மத்துவச் சித்தம் மங்களமாமதாம்
மங்களச் “சி” அது மாஇடை மதிசிவமே!
என்பது மத்திய ருத்ராஷ்டமித் திதியில் திருவிடைமருதூரில் அஷ்டமி நாளில் பூரிக்கும் திருநாளின் மகத்துவத்தை உணர்த்துவதாகும்.
வேத மந்திரங்களின் மத்தியமாக விளங்குவது ஸ்ரீருத்ரம் ஆகும். ருத்ராஷ்டமியான, மத்யாஷ்டமிதினங்களில் “சி” என்னும் அட்சர சக்திகள் பூமியில் பரிணமிக்கும். எனவே “சி” எனும் எழுத்தில் துவங்கும் திரவியங்களை, பொருட்களை வைத்து, (உ-ம் சிந்தூரம், சித்தரத்தை, சிவாநீ, சிப்பி, சிலாபஸ்மம், சிகப்பு நிற முள்ளஙகி, சிலம்பு, சிற்பம்) -போன்றவற்றால் அஷ்டமி திதிகளில் தெய்வக் காரியங்களை, பூஜைகளை, நற்காரியங்களை, அன்னதானக் காரியங்களை ஆற்றுவது மிகவும் விசேஷமானது. அலுவலகத்தில், வீட்டில் கஷ்டப்பட்டு உழைத்தும் நல்ல பெயரில்லையே என வேதனையுறுவோர்க்கு நல்வழி காட்ட உதவும்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post தாழ்வு மனப்பான்மை அகன்று உற்றத்தில் தலை நிமிர்ந்து வாழ appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.