காலமெல்லாம் காத்திடும்
ஸ்ரீ சாரதா நவராத்ரி மஹோத்சவம்
நவசக்தி காமாக்ஷி அம்மன் கோவில், மடிப்பாக்கம்
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை நவசக்தி காமாட்சி. காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான நவசக்தி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன நவசக்தி காமாட்சி காட்சியளிக்கின்றாள்.
நவசக்தி நாயகிகளின் நாமங்கள்!
இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி, ஆதிசக்தி, பராசக்தி, குடிலாசக்தி என்ற ஆறு குணங்களைக் கொண்ட அம்பாள் ஒரே ரூபத்தில் அனைத்து குணங்களையும் ஒடுக்கிக் கொண்டு கருவறையில் வீற்றிருக்கும் ஒன்பது சக்தி தேவி (நவசக்தி) ஆலயங்கள் நம் நாட்டில் உள்ளன.
மகாசக்தியாக காஞ்சிபுரத்தில் காமாட்சி தேவி, ஸ்ரீ சைலத்தில் பிரம்மராம்பா தேவி, கோல்ஹாபூரில் மகாலக்ஷ்மி தேவி, உஜ்ஜயினியில் காளிகா (ஹரசித்தி) தேவி, அலகாபாத்தில் லலிதா (அலோபி) தேவி, விந்தியாச்சலில் விந்தியா வாசினி தேவி, காசி எனப்படும் வாரணாசி கே்ஷத்ரத்தில் விசாலாட்சி தேவி, காட்மண்டில் குஹ்யகேஷ்வரி தேவி, கயா தலத்தில் மங்கள தேவி என்ற திருநாமங்களுடன் அருளாட்சி செய்கிறாள். அனுதினமும் அன்னையின் பாதம் பணிவதுடன், நவராத்திரி நாட்களிலும் வணங்கி நவசக்தி அருளைப் பெற்று நலம் பெறுவோம்.
நவராத்திரியில் சொல்ல வேண்டிய ஸ்ரீதுர்கா, ஸ்ரீலஷ்மி, சரஸ்வதி துதி
நமோஸ்து தேவ்யை சர்வஜீவ சரண்யை!
நமோஸ்து மாதா துர்கே பவானி!
நமோஸ்து லக்ஷ்மி ஸர்வசுப காரணி!
நமோஸ்து வாணீ சகலகலா மாதா!
காலமெல்லாம் காத்திடும் மடிப்பாக்கம் நவசக்தி காமாக்ஷி!
சொர்ண விக்கிரகத் திருமேனியில் திருக்காட்சி நல்கும் ஸ்ரீ நவசக்தி காமாட்சி, தன்னை நாடி வரும் அடியார்களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் வரமாகத் தந்தருள்கிறாள். மடிப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்மன் ஆலயம். இத்திருக்கோயிலில், நவராத்திரி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒன்பது நாட்களும் அம்மனுக்குச் சிறப்பு அலங் காரங்களும், பூஜைகளும் நடைபெறும். ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் துவங்குகிறயாக பூஜையில், அம்மனின் நாம பாராயணம், ஸ்ரீ சண்டி ஹோமம், வேத பாராயணம் என விமரிசையாக நடைபெறும். நவராத்திரி விழாவில், அம்மனுக்குத் திருமஞ்சனம், நவாவரண பூஜை ஆகியவையும் விசேஷம். 9-ஆம் நாளன்று, யாக பூஜை நிறைவுற்று கலச நீரால் நவசக்தி காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். மாலையில் சரஸ்வதி பூஜை நடைபெறும். பிரம்ம முகூர்த்த வேளையில் நடை திறக்கப்படும். விடிந்ததும் விஜயதசமி பூஜைகள் நடைபெறும்.
தொடர்புக்கு :
திருமதி ராதா சேதுராமன்
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post காலமெல்லாம் காத்திடும் ஸ்ரீ சாரதா நவராத்ரி மஹோத்சவம் மடிப்பாக்கம் நவசக்தி காமாக்ஷி! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.