Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15459

தீபாவளி கொண்டாடுவதற்கான முக்கிய காரணங்கள்

தீபாவளி கொண்டாடுவதற்கான முக்கிய காரணங்கள்

 தீபாவளிப் பண்டிகை இந்தியா மற்றும் கடல் கடந்து பல கிழக்காசிய நாடுகளிலும் மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் தீபாவளி நாளன்று காளி பூஜை மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்தினத்தில்தான் மகாகாளி 64,000 யோகினிகளுடன் அவதரித்ததாக மேற்கு வங்க மக்கள் கருதுகின்றனர்.

Image may be NSFW.
Clik here to view.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அன்பில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்

 புரட்டாசி மாதம் மேற்கு வங்கத்தில் துர்க்கா பூஜை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த பூஜை முடிந்தவுடன் அதற்கடுத்த மாதத்தில் வரும் தீபாவளி நாளன்று மகாநிஷா என்று அழைக்கப்படும் காளிதேவிபூஜை மீண்டும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாநில மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், இன்ப துன்பங்களிலும் இணைந்த ஒரு தெய்வமாகவே வழிபடப்படும் காளிதேவியின் திருவிழாவே இங்கு தீபாவளி நாளன்று மிக பக்தியுடனும் சிரத்தையுடனும் கொண்டாடப்படுகிறது.

தீப ஆவளி என்றால், தீபங்களை வரிசை வரிசையாக ஏற்றுவது என்று பொருள்.

  • மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள் இது.

  • குப்த அரசன் விக்கிரமதித்த சந்திரகுப்தன் அரியணை ஏறிய திருநாள்.

  • சமண மதத்தினரின் வணக்கத்திற்க்குரிய வர்த்தமான மகாவீரர் பரிநிர்வாணம்- வீடு பேறு அடைந்த புனித தினம்.

  • குரு கோவிந்தசிங், சீக்கியமத அமைப்பான “கல்சா”வைத் தோற்றுவித்த தினம்.

    Image may be NSFW.
    Clik here to view.
    ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்க

  • ஆதிசங்கரர் ஞான பீடங்களை நிறுவியதும் இதே தினத்தில் தான்.

  • சாவித்திரி, யமதர்மனோடு வாதிட்டு தன் கணவனின் உயிரை மீட்ட தினமும் இதுவே தான்.

  • நசிகேதன் யமனுலகு சென்று, வரம் பெற்றுத் திரும்பியதும் அந்த நாளில் தான்.

  • வடநாட்டில் சிலர் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்காக கோவர்த்தன பூஜை செய்யும் திருநாள் இது தான்.

  • மத்தியப் பிரதேசத்தில் வாழும் “ரவுத்தாயார்” என்னும் பழங்குடி மக்கள் தங்களைக் கண்ணனின்ஆயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தீபாவளியை நமது பொங்கல் திருநாள் போல உழவர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். புதிய தானியக் கதிர்களை அறுவடை செய்து, லட்சுமி பூஜை செய்கின்றனர்.

  • மராட்டியர்கள் மாவலிக்கு பூஜை செய்கின்றனர்.

  • வங்காளத்தில் காளி பூஜை நிகழ்கிறது.  தீபாவளியன்று, மூதேவியை விரட்டி, ஸ்ரீ தேவியை வரவேற்கும் வைபவம் நிகழ்த்தப்படுகிறது.

  • சிலர் லட்சுமி பூஜை, குபேர பூஜை செய்கின்றனர்.

  • சில இடங்களில் புதுக்கணக்கு தொடங்கப்படுகின்றது.

  • சிலர் தீபாவளிக்கு இராமயானத்தில் ஆதாரம் தேடுகின்றனர். இராமர், இராவணனை வீழ்த்திவிட்டு, சீதையை மீட்டு, அயோத்திக்கு வந்த தினமே தீபாவளி என்று கூறப்படுகின்றது.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image may be NSFW.
Clik here to view.
Image result for mobile icon png
+91-9941510000     Image may be NSFW.
Clik here to view.
Related image
+91-8124516666  Image may be NSFW.
Clik here to view.
Image result for youtube subscribe png
Image may be NSFW.
Clik here to view.
https://www.facebook.com/swasthiktv/

The post தீபாவளி கொண்டாடுவதற்கான முக்கிய காரணங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>