திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்தூரில் பார்வதி தேவிவழிப்பட்ட முதல் கைலாய சேஷத்திரமும் பண்டவார்கள் வழிப்பட்ட தர்மநாதோஸ்வரர் ஆலயம் உள்ளது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பல் குன்றக் கோட்டத்து மேல் குன்ற நாட்டு மண்ட குளத்துப் பிரிவைச் சோர்ந்த ஊர் என்று பத்தாம் நூற்றாண்டுக்கல் வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு:
சேயாறு அல்லது செய்யாறு என்று வழங்கப்படும் ஆற்றின் தென் கரையில் உள்ளது. முருகப் பெருமானால் உருவாக்கப்பட்டதால் சேயாறு என வழங்கப்படுகிறது. சேயோன் ஸ்ரீ முருகன் ஒரு சமயம் கைகளை இழந்த பிராமணன் இவ்வாற்றில் மூழ்கி வழிபட்டு கைகளைத் திரும்பப் பெற்ற தால் பாஹீ நதி (பாஹீ = கை) என அழைக்கப்பட்டது. கை என்பதற்கு தெலுங்கில் ‘செய்” என்று சொல்வதால் ‘செய்யாறு” என வழங்கப் படுகிறது.
இறைவன் மாமரத்தின் அடியில் தோன்றினார்:
கயிலயங் கிரியிலே இறைவி விளையாட்டாக சிவபெருமானின் இரு கண்களை மூட உலகமே சூரிய சந்திரர்கள் மறைந்ததால் (சிவபெருமான் கண்கள் சூரியன் சந்திரன்) துயர் உற்றது. இதனால் கோபம் அடைந்த சிவ பெருமான் இறைவியைப் பூலோகம் செல்லுமாறு சபித்தர். இறைவி சாபவிமோசனம் கேட்க, பூலோகத்திலே மிக உயர்ந்த சேஷத்ரமான காஞ்சியம்பதிக்குச் சென்று இருநாழி நெல் கொண்டு 32 அறங்களையும் செய்து வருமாறும், தாம் வந்து ஆட்கொள்வதாகவும் வரம் அருளினார். அவ்வாறே இறைவி காமாட்சி என்ற திருநாமம் கொண்டு காஞ்சிபுரத்தில் இருந்தபோது இறைவன் மாமரத்தின் அடியில் தோன்றினர். பின்பு இறைவி அருணாச்லேசத்திற்குச் சென்று தவம் செய்யுமாறும் தாம் அவளுக்கு இடப்பாகத்தை அங்கு வழங்குவதாகவும் கூறி அருளினார். அவ்வாறே இறைவி காஞ்சிபுரத்திலிருந்து தன்னுடைய பரிவாரங்களுடன்கிளம்பி திருஅண்ணாமலைக்குப் பயணப்படும் போது அனுஷ்டான நேரம் வர, வாழைமரத்தில் பந்தல்கள் இட்டு தன்னுடைய மகனான குமரவேலை நோக்கிஅனுஷ்டானம் செய்வதற்குத் தீர்த்தம் கொண்டு வருமாறு கேட்டாள். முருகப் பெருமான் தம்முடைய வேலாயுதத்தை மேற்கு நோக்கி வீச அவ்வேல் பர்வதமலையில் உள்ள ஏழு சிகரங்களைத் தாக்கி ஒரு ஆறு தோன்றியது. அந்த சிகரங்களை உடைக்கும் போது தவம் செய்து கொண்டிருந்த அனந்தமாபுரத்தைச் சேர்ந்த ஏழு பிராமணர்களையும் மோட்சத்திற்கு அனுப்பியது. அப்பிராமணர்கள் பூர்வத்தில் பஞ்சமா பாவங்களைச் செய்தவர்கள். பிரமணுடைய அருளால் முருகப் பெருமானின் வேலால் முக்தி கிடைக்கும் என அருளப்பட்டு அவ்வாறே முக்தி அடைந்தார்கள். காமாட்சியின் அனுஷ்டானத்திற்காக ஆற்று நீர் வந்து உதவியது. ஆதனால் அது சேயாறு என வழங்கப்பட்டது.
இருப்பினும் பிரமணர்களைக் கொன்ற பாவத்தால் வந்த ‘பிரம்மஹத்தி” தோஷம் நீங்க ஏழு சிவாலயங்களை முருகப் பெருமான் எழுப்பித்தார்.அவை 1.காஞ்சி 2. கடலாடி 3.மாம்பாக்கம் 4. தென்மகாதேவமங்கலம் 5. எலத்தூர் 6. பூண்டி 7. குருவிமலை. இவற்றிற்கு சப்த கரை கண் டேஸ்வரஸ்வரஸ்தலங்கள் என்று பெயர்.இவை சோயற்றின் மேற்கு அல்லது வடக்கு கரையில் உள்ளன. இதேபோல் சேயாற்றின் கிழக்கு அல்லது தெற்குக் கரையில் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட ஸ்பத் கைலாச சேஷத்ரங்கள் தோன்றின. அவை முறையே 1. வாசுதேவம் பட்டு 2. தாமரைப் பாக்கம் 3. நார்த்தாம் பூண்டி 4. தென் பள்ளிப்பட்டு 5. பழங்கோயில் 6. கரைப்பூண்டி 7.மண்ட கொளத்தூர் முதலயின.
மண்டகொளத்தூர்:
ஒரு காலத்தில் ஐந்து சிவாலயங்களைத் தன்னகத்தே கொண்ட ஊராக விளங்கியது. ஊரின் நடுவில் ஒரு சிவாலயமும் இருந்திருக்கின்றன. கிழக்கு, வடக்கு, மேற்கு முதலிய திசைகளில் கோயில்கள் இருந்த இடத்தில் இப்போது சிவலிங்கங்கள்தான் உள்ளன. ஊர் நடுவே இருந்த கோவிலின் சிவலிங்கம் கூட கிடைக்கவில்லை. ஊரின் தென்புறத்தில் உள்ள சிவாலயம்தான் இப்போது திருப்பணி செய்யப்பட்டு ‘குடமுழுக்கு” நடத்தப்பட உள்ளது. நடுவில் இருந்த சிவாலயத்திற்கு ‘குந்தீஸ’வரன்” என்ற பெயரும் இப்போது குடமுழுக்கு நடைபெற்ற ஆலயத்திற்கு ‘தாமேஸ்வரர்” (அ) ‘தர்மநாதேஸ்வரர்” என்ற பெயரும் வழங்கப்படுவதால் மீதி மூன்று சிவலிங்கங்களும் பாண்டவர்களின் மற்ற சகோதரர் களானபீமன், அர்ஜீனன், நகுல, சகாதேவர்களின் பெயர்களில் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது திண்ணம். பஞ்ச பாணடவர்கள் வனவாசத்தின்போது இங்கு பூஜை செய்ததாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
ஸ்ரீ தர்மநாதேஸ்வரர்“ தர்மஸ்வர்த்தினி” என்ற திருநாமம் கொண்ட இறைவியோடு அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறர். செய்யாற்றின் கரையில் கிழக்கிலிருந்து வரும்போது ஸ்பத கைலாச சேஷத்ரங்களில் முதல் தலமாகப் பெருமை பெறுமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
அமைவீடம் :
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து 6 கிலேமீட்டர் தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு :
பரத்வாஜ் ரவி – 9600014199
படம்: வசந்த்.
செய்தி: ப.பரசுராமன்.
The post பார்வதிதேவியால் தோன்றிய சப்த கைலாயம் appeared first on SWASTHIKTV.COM.