Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்:

 ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனக்கவலை குறையும். தனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். ராசியை பார்க்கும் நிலையில் குரு மாறுவதால் சுணக்க நிலை நீங்கும். வீண்பழி மறையும். சில்லறை சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். இதற்கு கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள்மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். தொழிற் ஸ்தானத்தை கேது பகவான் அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்:

 ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் நன்மை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். சப்தமாதிபதி செவ்வாயின் சுகஸ்தான சஞ்சாரம் பல வழிகளிலும் நன்மையான பலன்களை அள்ளித் தரும். வீடு, மனை வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். மனசஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள்மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் மனம் மாறுவார்கள். ரணருண ஸ்தானத்திற்கு குரு மாறியிருந்தாலும் அவர் பார்வையால் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும்.

மிதுனம்:

 ராசிநாதன் புதனின் சஞ்சாரம் திருப்தி அளிக்கும்வகையில் இருக்கிறது. மேலும் குரு பார்வையும் ராசியில் படிவதால் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும்போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாக பதிலளிப்பது நல்லது. பேச்சின் இனிமை, சாதூர்யத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

கடகம்:

 ராசியில் சஞ்சாரம் செய்யும் சுக்கிரன் மூலம் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். ராசிக்கு இரண்டில் தனாதிபதி சூரியனின் ஆட்சி சஞ்சாரம் இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் காணாமல்போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன்மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்துசேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து மோதல்கள் மறையும்.

சிம்மம்:

 ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சி சஞ்சாரம் செய்கிறார். காரியங்களில் இருந்து வந்த தடை, தாமதம் நீங்கும். சுக பாக்கியாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் பயணங்களை ஏற்படுத்தலாம். குருவின் சஞ்சாரத்தின் மூலம் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். ராசியைப் பார்க்கும் சனியால் மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உடல்நலம் பாதிக்கப்படலாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம். குடும்ப நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனம் வருந்தும்படியான நிலை மாறும்.

கன்னி:

 தனஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி இருக்கும் குருவாலும் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தாலும் நற்பலன்களை பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அதே வேளையில் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சொத்துகள் வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். ராசிக்கு மாறியிருக்கும் குருவால் அனைத்து வகையிலும் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

 ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களுடன் நட்பை ஏற்படுத்தும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்னையை சமாளிக்க வேண்டியிருக்கும். ராசியில் இருக்கும் சனியின் சஞ்சாரத்தால் பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பணவிரயமும் இருக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

தனுசு:

 ராசிநாதனான குரு லாபஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார். நீண்டகாலமாக இருந்துவந்த கவலைகள் அகலும். ஆனாலும் விரயச்சனி இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ராசியாதிபதி குரு தனஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரத்து நன்றாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பார்ட்னர்களுடன் சுமுகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

மகரம்:

 சுக்கிரனின் சஞ்சாரம் சிற்றின்ப சுகத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்:

 தனலாபாதிபதி குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார். தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் காரியங்களில் இருந்த தாமதம் நீங்கும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

மீனம்:

 குரு அஷ்டம ஸ்தானத்திற்கு மாறினாலும் அவர் பார்வை மூலம் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்னையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Image result for web whatsapp png+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>