தினசரி ராசிபலன்கள் இன்று 06.04.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்
மேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்: புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.
மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
கடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
சிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
கன்னி: வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.
துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்
விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
தனுசு: பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.
மகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.
கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.
மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.
The post தினசரி ராசிபலன்கள் இன்று 08.04.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.