இன்று ஆடி மாத பௌர்ணமி – வ்யாஸ பௌர்ணமி. தக்ஷிணாயன புண்ணிய காலம் முழுவதும் உபாஸனைக்குரிய காலம். தக்ஷிணாயனத்தில் வரும் முதல் ஏகாதசி ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸயனமூர்த்தி. அவர் உறங்குகிறார் என்றால் அது தாமஸ நித்திரை அல்ல. “நித்ரா முத்ராம் நிகில ஜகதீ ரக்ஷணே ஜாகரூகம்” அவர் நித்திரை முத்திரை பிடித்து எல்லோரும் எவ்வளவு பக்தியுடன் இருக்கிறார்களோ திரை மறைவில் பார்த்துக் கொண்டிருப்பார். அவ்வளவு பக்தி வர வேண்டுமென்றால் குருவின் அனுக்ரஹம் இல்லாமல் குரு வாக்கியம் கேட்காமல் பக்தி வராது. அப்பேற்பட்ட குரு, குருவின் குரு, குரு மண்டலத்திற்கெல்லாம் அதிபதி வேத வியாஸர். எப்பொழுதாகிலும் ரிஷிக்கு தர்ப்பணம் கொடுத்தால் முதலில் வியாஸர் பேரையே சொல்லுவோம். “க்ருஷ்ணத்வைபாயன த்வயோ யே ருஷய: ஏவ ருஷிம் தர்ப்பயாமி” என்று வியாஸ பகவானின் பேரை முதலில் சொல்லி அப்பேற்பட்ட ருஷி மண்டலத்திற்கு ‘தர்ப்பணம்’ தருகிறேன் என்று ஜலத்தை விடுவர். வியாஸர்க்கு ‘வியாஸ பௌர்ணமி’ அன்று பூஜை நடக்க வேண்டும். வியாஸரை ஆராதித்து அவரின் அனுக்ரஹத்தை பரிபூரணமாக பெற வேண்டும். அவர் பூஜை நிர்மால்யத்தை ஸிரஸின் மீது தரிக்க வேண்டும். அவரின் பிரசாதத்தை ஸ்வீகரிக்க வேண்டும்.
The post இன்று குரு பூர்ணிமா வியாசரை வழிபடுவது நல்லது appeared first on SWASTHIKTV.COM.