கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஊர்மக்களால் பள்ளத்தை தோண்டிய போது கண்டொடுக்கப்பட்ட அம்மன் சிலை உள்ளது இங்கு அம்பாள் மகாலட்சுமி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இந்த அம்பாளை வணங்கினால் வேண்டிய வரம் கொடுப்பார் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் நோத்திகடனாக தலையில் தோங்காய் உடைத்து பிரார்த்தனைகள் நிறைவோற்றுகின்றனர்.
சிறிய கல் வடிவில் இருந்த அம்மன் சிலையை வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அம்மனுக்கு ஆலயம் எழுப்ப முயற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆலயம் இருந்த பகுதி வழியாக ரெயில் போக்குவரத்து அமைப்பதற்காக தேவையான தளவாட பொருட்கள் குவித்து வைக்கப்பட்டது. ஒருநாள் அதிகாலை அங்கு ரெயில் பாதை அமைக்க வைத்திருந்த தளவாடபொருட்கள் அனைத்தும், தேங்காய் வடிவில் கல் உருண்டைகளாக மாறிப்போய் இருந்தது. அதைப்பார்த்த அனைவரும் இது அம்மனின் சக்திதான் என்று முடிவு செய்தனர். மேலும் அம்மனை வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு பள்ளம் தோன்றி இருப்பதையும் பார்த்தனர். இதனையடுத்து அந்தப் பள்ளத்தை பொதுமக்கள் தோண்டி பார்த்தபோது, பள்ளத்திற்குள் மகாலட்சுமி அம்மன் சிலை ஒன்று புதுப்பொலிவுடன் தகதகவென்று மின்னியபடி காட்சியளித்தது.
இந்த நிலையில் ரெயில் பாதை அமைக்க இருந்த இடத்தில் அம்மன் சிலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆங்கிலேயர்கள், அம்மனின் மகிமையை கண்டு மிரண்டு போய் அந்த இடத்தில் ரெயில் தண்டவாளம் அமைக்கும் முயற்சியை கைவிட்டனர். அதன் பிறகு பக்தர்களின் எண்ணப்படி, அந்த இடத்தில் அம்மனுக்கு அழகிய ஆலயம் கட்டப்பட்டது. தன்னை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் இந்த மகாலட்சுமி அன்னையின் கோவிலுக்கு சென்று அன்னையை பயபக்தியுடன் வணங்கி அவரது ஆற்றலை பெறலாம்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு விழா அன்று நடைபெறும் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆடிப்பெருக்கு விழா அன்று கோவிலில் இருந்து வடக்கே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். அன்று மாலை மேட்டுமகாதானபுரம் ஊரில் உள்ள வீதிகளில் அம்மன் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். அடுத்த நாள் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிவடைந்ததும், கோவில் முன்புறம் உள்ள கருட தூணில் தீபம் ஏற்றப்படும். இதனை தொடர்ந்து பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து வழிபடும் நிகழ்ச்சி தொடங்கும். கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் பக்தர்கள் வரிசையாக அமர்ந்து இருப்பார்கள். கோவில் பூசாரி அங்கு வந்து ஒவ்வொரு பக்தரின் தலையிலும் தேங்காயை உடைப்பார். உடைந்த தேங்காயை சுற்றியிருக்கும் பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச் செல்வார்கள்.
அமைவிடம் :
திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் என்ற ஊரின் தெற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது.
The post வேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.