Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சித்தர்கள் சித்துகளைச் செய்ய வல்லவர்கள்

$
0
0

சித்துகள் பற்றிய தகவல் கள் நம் இலக் கியங்களிலும் புராணங்களிலும் நிறைய உண்டு. நமது முன்னோர்களான ரிஷிகள் எல்லாருமே சித்தர்கள்தான். இதிகாசங்களை எழுதிய வால்மீகி, வியாசர் இருவரும் சித்தர்களே. ராமாயணத்தில் வரும் வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஆகியோரும் கூட சித்தர்கள்தான்.வசிஷ்டர் தம் தவ வலிலிமை முழு வதையும் தன் கையிலிருந்த தண்டத்தில் இறக்கி, அதைத் தன் முன்னால் நிறுத்தி வைத்து விட்டார். ரிஷி ஆவதற்குமுன் மன்னராய் இருந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டரிடம் இருந்த பசுவான காமதேனுவைக் கவர ஆசைப்பட்டு, தன் படைவீரர்களையும் இணைத்துக் கொண்டு கடும் யுத்தத்தில் ஈடுபட்டார். அந்த மாபெரும் யுத்தம் முழுவதும் வசிஷ் டரின் தண்டம் என்கிற அந்த ஊன்றுகோலுடன் தான் நடந்தது! அவர்கள் எறிந்த அத்தனை அம்புகள், வாள், வேல், ஈட்டி போன்ற ஆயுதங் கள் அனைத்தையும் வசிஷ்டரின் தண்டமே சரசரவென அள்ளி விழுங்கி விட்டது! விஸ்வாமித்திரர் விதிர்விதிர்த்துப் போனார். வசிஷ்டர் கைவரப் பெற்றிருந்த அந்த சித்தை தானும் அடைய விரும்பி அவர் தவம் மேற் கொண்டதையும், வசிஷ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி என்று அவர் பட்டம் பெற்றதையும் ராமாயணம் சொல்கிறது. அது மட்டுமா? விஸ்வாமித்திரருக்கும் சித்துகள் கைவரப் பெற்றதையும், அவர் பின்னாளில் சொர்க்கத்திற்குப் போட்டியாக இன்னொரு சொர்க்கமாக திரிசங்கு சொர்க்கத்தை ஆகாயத்தில் நிர்மாணித்ததையும் அவரது வரலாறு தெரிவிக்கிறது.

 சித்தர்கள் சித்துகளைச் செய்ய வல்லவர்கள் என்பதால் சித்துகளைச் செய்ய வல்லவர்கள் எல்லாரையுமே ஒரு கண்ணோட்டத்தில் சித்தர்கள் என்று சொல்லலாம். அப்படிப் பார்த்தால் அனுமன்கூட ஒரு சித்தர்தான்! இன்று கடவுளாகவே கொண்டாடப்படும் அனுமன், அபார சக்தி நிறைந்தவன் அல்லவா? சஞ்சீவி மலையையே தூக்கிய அவன், தன்னை வழிபடுபவர்களின் வாழ்க்கையையும் தூக்கி விடக் கூடியவன் ஆயிற்றே? அனுமன் தன் இடைவிடாத ராம நாம ஜபத்தால் ஏராளமான சித்துகள் கைவரப் பெற்றிருந்தான். அஷ்டமா சித்திகள் என்று சொல்லப்படுபவை சித்துகள்தான். அதாவது எட்டுவிதமான ஆற்றல்கள் கைவரப்பெறுவது. அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என அந்த எட்டுவித ஆற்றல்கள் புராணங்களில் பட்டியலிடப்படுகின்றன. மகிமா என்றால் மிகப் பெரிய உருவம் எடுக்கும் வகையிலான சித்து கைவரப் பெறுதல். ஆனால் அப்படியொரு சித்து அனுமனுக்கு வாய்த்திருந்தது என்பதை அவனே அறியாதிருந்தபோதுதான் ஜாம்பவான் அவன் ஆற்றலை அவனுக்குச் சொல்லிலி அவனை உற்சாகப்படுத்த வேண்டியிருந்தது. அப்படி உற்சாகப்படுத்திய பிறகு அனுமன் அந்த சித்தின் வலிலிமையால் கடலையே கடந்தான் என்பதை கம்ப ராமாயணத்தில் பார்க்கிறோம்.

  மகேந்திர மலையின்மேல் நின்று பேருருவம் எடுத்து அனுமன் கடலைத் தாண்டியபோது பற்பல உற்பாதங்கள் நிகழ்ந்ததாக கம்பர் வர்ணிக்கிறார். அனுமன் காலை உந்தியதால் மகேந்திர மலை அழுந்தப் பெற்று, அதிலிலிருந்த அருவி நீருடன் அந்த மலையில் எங்கும் பரவியிருந்த செந்தூரத் துகள் கலந்து வழிந்த தாம். அது மலையரசன் சிந்திய ரத்தம்போல் தென்பட்டதாம். மலையிலிலிருந்து அஞ்சி வெளிப்பட்ட பாம்புகள் மலையரசனின் குடல்போல் தோன்றியதாம். அதுமட்டுமல்ல; நீண்ட வாலோடு அனுமன் கடலைத் தாண்டியது பட்டம் பறப்பதுபோல் தோன்றியது என்கிறார் கம்பர். (கம்பர் காலத்திலேயே பட்டம் விடும் பழக்கம் இருந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.) அனுமன் பெற்றிருந்த சித்திகளின் சிறப்பை அவன் சீதாதேவிமுன் பேருருவம் கொண்டு காட்சி தந்தபோதும் நாம் அறிய இயலும். அவனது காதில் சூரிய- சந்திரர்கள் இரு குண்டலங்களைப் போல் தோன்றின என்றும்; அவன் தலைமுடியில் அகப்பட்டுக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்கள், காட்டில் மின்னும் மின்மினிப் பூச்சிகளைப்போல் காட்சி தந்தன என்றும் கம்பர் வர்ணிக்கும் அழகே அழகு!

  இந்த இடத்தில் கம்ப ராமாயணத்திற்குப் பேருரை எழுதிய வை.மு. கோபாலகிருஷ்ண மாச்சாரியார், தம் உரையையே ஒரு கவிதை போல் எழுதுகிறார். மகிமா என்ற பேருருவம் எடுக்கும் சித்தைப் பற்றி விளக்கும்போது, கூடவே சித்துகளில் இன்னொன்றான அணிமா என்ற சித்தைப் பற்றியும் விளக்குகிறார் அவர். அணிமா என்றால் மிகச் சிறிய உருவம் எடுப்பது. எப்படி என்றால் ‘சோவெனப் பெய்யும் பெருமழையின் இடையே மழைநீர் மேலே படாதவாறு மிக மெல்லிய உரு எடுத்து இடை நடத்தல்‘ என்கிறார்! கம்பர் எழுதியது கவிதையா அல்லது கம்பர் கவிதைக்கு எழுதப் பட்ட வை.மு.கோ. வின் உரை கவிதையா என்ற பிரமிப்பு ஏற்படு கிறது நமக்கு. இத்தகைய சித்துகள் ஒருவருக்குத் தவ ஆற்றலால் வருவதா அல்லது குருவருளால் வருவதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டாலும் வரும் அல்லது இரண்டும் இணைந்தும் வரும் என்று கொள்ளலாம். ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஏராளமான ஆற்றல்கள் இருந்தன. கடும் தவத்தினால் அவர் பெற்ற சித்துகள் அவை.

 அவர் பூத உடலைத் துறப்பதற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்த இறுதிக் காலம். மாடியில் ஓர் அறையில் மிகவும் பலவீனமாக அவர் கட்டிலில் படுத்திருந்தார். தற்செயலாக சாரதாதேவி அந்த அறைக்கு வந்தார். ஒரு விந்தையான காட்சியை அவர் கண்டார். பரமஹம்சர் திடீரெனத் துள்ளிக் குதித்து அவர் இருந்த மாடியிலிலிருந்து தடதடவெனப் படியில் இறங்கி கீழே ஓடினார்! சற்று நேரத்தில் திரும்ப வந்து அதே கட்டிலிலில் பழையபடி புற்றுநோயாளியாகப் படுத்துக் கொண்டுவிட்டார்! சாரதா தேவியால் தன் கண்களை நம்ப இயலவில்லை. யார் இவர்? நோய்வாய்ப்பட்ட இவரால் எப்படி ஒரு பதினாறு வயது பையனைப்போல் இத்தனை வேகமாக ஓட முடிந்தது? அப்படியானால் எப்போதும் இப்படி ஓடும்படியாக அவர் தன் உடலை மாற்றிக் கொள்ளாதது ஏன் என எண்ணற்ற கேள்விகள். சாரதை பரமஹம்சரின் கட்டிலருகே நின்று கண்களாலேயே என்ன நடந்தது என வினவினார். பரமஹம்சர் விளக்கினார்.

 விவேகானந்தர் கீழே ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார். மரத்தின் மேலிலிருந்து ஒரு பாம்பு அவரை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. இந்தக் காட்சியை மாடியில் தன் அறையில் கண்ணை மூடியவாறே படுத்திருந்த பரமஹம்சர் அகக்கண்ணால் பார்த்து விட்டார். தடதடவென ஓடோடிச் சென்று அந்தப் பாம்பை விரட்டி விட்டு வந்திருக்கிறார் அவர். இதைக் கேட்ட சாரதாதேவி ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். பரமஹம்சர் பகவானேதான் அல்லவா? அவரால் ஓரிடத்தில் இருந்தபடியே உலகம் முழுவதும் பார்க்கமுடிவதில் என்ன ஆச்சரியம்? காளியின் சக்தி அல்லவா அவர் உடலிலில் இறங்கியிருந்தது? அதனால்தானே அவர் சித்தி அடைந்ததும், “காளி! நீ எங்கே போய்விட்டாய்?’ என்று சாரதை கதறினார். உண்மையில் பரமஹம்சர் இறைவனை நேரே காணவேண்டும், இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்று விரும்பினாரே தவிர, சித்துகளை அடைவதில் அவருக்கு அதிக அக்கறை இருந்ததில்லை. சித்துகள் மூலப் பரம்பொருளை அடையும் மார்க்கத்தில் பக்தர்களின் கவனத்தை சிதறச் செய்துவிடக் கூடியவை என்று அவர் கருதினார். உயர்நிலைத் தவத்தால் சித்துகள் தாமே சித்தியாகும் என்றும்; ஆனால் அதைப் பொருட் படுத்தாமல் தவத்தைத் தொடரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீர்மேல் நடக்கும் சித்து கைவரப் பெற்ற ஒருவர், “இப்படி உங்களால் செய்ய இயலுமா?’ என்று கேட்டதற்கு பரமஹம்சர் சொன்ன பதில்:

“இந்தச் சித்தினால் என்ன பயன்? இது நாலணா பெறும். ஏனென்றால் நீர் மேல் நடக்க முடியாதவர்கள் நாலணா கொடுத்து ஓடக்காரர் உதவியுடன் ஓடத்தில் போகிறார்கள்.

  அவ்வளவுதானே? இத்தகைய சித்துகளால் இறைவனைக் காண இயலாதபோது இவை பற்றி ஆணவம் கொள்வதில் அர்த்தமென்ன?’ விவேகானந்தரிடம் ஒருமுறை தாம் பெற்ற சித்துகள் அனைத்தையும் அவருக்குத் தர விரும்புவதாகவும்; அவற்றைப் பெறுவதில் அவருக்கு ஆர்வமுண்டா என்றும் பரமஹம்சர் கேட்டார். அவற்றால் இறைவனை நேரில் காண உதவ இயலாது என்கிறபோது அவற்றைப் பெறுவதில் தனக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என்று விவேகானந்தர் பதிலளித்தார். அந்த பதிலைக் கேட்டு பரமஹம்சர் மிகுந்த நிறைவடைந்தார். சித்துகளைப் பெற்றவர்கள் அந்த ஆற்றல் களை நல்ல விஷயத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அல்லாமல் சொந்த சுகபோகங்களுக்காக அதர்மமான வழியில் பயன்படுத்தினால் சித்துகளால் விளைந்த ஆற்றல்கள் அவர்களை விட்டுப் போவதுடன், அவை விட்டுப் போகிற நேரத்தில் தம்மை சரிவரப் பயன்படுத்தாதவர்களுக்குத் தீமையையும் செய்துவிட்டுப் போய்விடும். பரமஹம்சருடன் இரு துறவிகள் தங்கியிருந்தார்கள். அவர்கள் தங்கள் உடலைப் பிறர் காணாமல் உலவும் ஆற்றல் கைவரப் பெற்றிருந்தார்கள். அந்த சித்தை அவர்கள் அடைந்தவுடன் மிக அக்கிரமமான முறையில் அதை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பலரது அந்தப்புரங்களில் அவர்கள் பிறரறியாமல் உலவலானார்கள். அதர்ம வழியில் அந்த ஆற்றலைப் பயன் படுத்தியதால் அவர்களுக்குப் பெருங்கெடுதல் நேர்ந்தது. பரமஹம்சரே அவர்களின் உதாரணத் தைச் சொல்லிலி தம் சீடர்களை எச்சரித்திருக்கிறார்.

 

The post சித்தர்கள் சித்துகளைச் செய்ய வல்லவர்கள் appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>