பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தைப்பூச திருநாள்
சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத சக்திகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை பெற்றனர். தொடங்கினர். இதனால் தேவர்கள் அவர்களுக்கு அஞ்சி மறைந்து வாழும் நிலை உண்டானது.
தங்களது இக்கட்டான சூழலை மகாதேவரிடம் தெரிவித்த தேவர்கள், தங்களை எப்படியாவது அசுரர்களிடம் இருந்து காக்கும்படி வேண்டினர். சுரர்களை அழிப்பதற்காக சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீ பிழம்புகளை உருவாகினர். அந்த 6 தீப்பிழம்புகளும் 6 குழந்தைகளாக மாறின. அந்த 6 குழந்தைகளும் குழந்தைகளாக பெண்களிடம் வளர்ந்தது.
கார்த்திகை பெண்கள் அந்த 6 குழந்தைகளுக்கும் போர் கலை பயற்சி அளித்தனர். பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் 6 புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைத்து ஒருவராக மாறினர். 6 குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் ஒருங்கிணைத்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார். மார்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டப்படுகிறது.
27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும். தைமாதம் உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.
பூரணை தினத்தில்; சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க ”தைப்பூச திருநாள்” ஆமைகின்றது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் உகந்த இன்று விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
The post பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தைப்பூச திருநாள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.