ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக தரிசனம்!
*ஸ்ரீ ராமரை வழிபடவேண்டிய நாள் !
கம்ப ராமாயணம்
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான் !
ஸ்ரீ ராம நவமி : ராமர் ஆலயங்களில் உற்சாகக் கொண்டாட்டம்
ராமன் அவதரித்த தினமான ஸ்ரீ ராம நவமி இந்தியா முழுவதும் உள்ள ராமர் ஆலயங்களில் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
பங்குனி மாதம் புனர் பூச நட்சத்திரத்தில், கிருஷ்ண பட்ச நவமி திதியில்தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளையே ராமநவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். ராம நவமி இந்தியா முழுவதும் விழா போல கொண்டாடப்படுகிறது.
மக்களைக் காக்க இறைவனே மனிதராக அவதாரம் எடுத்தார் அவர்தான் ராமர் என்கின்றன புராணங்கள். ஏக பத்தினி விரதனாகவும், மனைவியை கவர்ந்த அரக்கனை அழித்தார் என்றும் இந்தியாவின் இதிகாசத்தில் ஒன்றான ராமாயணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அவதார நாயகன் அவதரித்த நாளையே ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டுதோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்துநாட்களை முன்பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்துநாட்களைப் பின்பத்து எனவும் இருபது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நாட்களில் ராமர் ஆலயங்களில் பஜனைகள், இராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு நீர்மோர், பானகம்,சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.
ராமனின் நினைவாக…பானகம் , நீர்மோர் போன்றவை ஸ்ரீ ராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்தபோதும், கானகவாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர்மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவையிரண்டும் ஸ்ரீராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ராமர் பட்டாபிஷேகம்
வீடுகளில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜைசெய்து, பருப்பு, வடை, நீர்மோர், பானகம், பாயசம் நிவேதனம்செய்து வழிபட்டனர்.
ஸ்ரீ ராமர் அருளாளே இந்நாளும் திரு நாளாகட்டும்..!
The post ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக தரிசனம்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.