Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

புத்திர பாக்யம் அருளும் அழகப்பெருமாள்

$
0
0

பொன்னமராவதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக  விளங்குவது அழகப்பெருமாள்  ஆலயம். முன்னொரு காலத்தில் பொன்னன், அமரன் என்று இரு சகோதரர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.அவர்கள் பெயரால் இவ்வூர் பொன்னமராவதி என அழைக்கப்பட்டது. சகோதரர்களில் அமரன் நினைவைப் போற்றும் வகையில் ஊரின் மையப் பகுதியில் ‘அமரகண்டம்’ எனப்படும் மிகப்பெரிய ஊருணி அமைக்கப்பட்டுள்ளது. இது சரித்திர முponnamaravathi1க்கியத்துவம் வாய்ந்த இடமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

     வேள்பாரி  எனும் ஒரு வள்ளலால் ஆளப்பட்ட பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக பொன்னமராவதி நகரம் விளங்கியது. இப்பகுதி பாண்டியரைத் தொடாந்து சோழர்கள், நிக்ஷதராஜாக்கள், வானாதரையர்கள், அறந்தாங்கி  தொண்டைமான்கள், பொம்முநாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள் என வரிசையாக பலரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது இப்பகுதி. இந்தப் பொன்னமராவதி ஆலயமானது கி.பி.1216-ல் மதுரையை ஆண்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. வசந்த மண்டபத்தைத் தாண்டியதும் பலிபீடம், கருடாழ்வார் சன்னதி, உற்சவ  மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. உற்சவ மண்டபம் கேரள பாணி கலையில் அமைக்கப்பட்டுள்ளது  இதன்  சிறப்பு.

     இந்தக் கோயிலின் மகாமண்டபத்தில் உடையவர், ஆஞ்சநேயர், நாகர், விஷ்வக்சேனர் சன்னதிகள் அமைந்துள்ளது. மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகப்பெருமாள் அமர்ந்த கோலத்தில் கருவறையில் எழுந்தருளியுள்ளார். சன்னதியின் வலப்பக்கமாக சௌந்தரவல்லித் தாயார் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் வடக்கே பரமபத வாசல் மற்றும் தீர்த்தக்கிணறு உள்ளன.  இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றுவருகிறது.

புத்திர பாக்யம் உண்டாகும்:

     ஒரு கட்டத்தில் இந்த ஆலயம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காponnamaravathi2ணப்பட்டது. அப்போது ஒரு பக்தர் தன் முயற்சியால் ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்தார். எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைப்பேறு மட்டும் கூடி வராமல் மனம் வருந்திய பக்தர் பொன்னமராவதியில் மகிமையைக் கேள்விப்பட்டு மனதிற்குள் தமது வம்சம் தழைக்க ஒரு குழந்தைச் செல்வத்தை வேண்டிஅப்படி தனக்கு குழந்தைச் செல்வம் கிடைத்தால்  மகாகும்பாபிஷேகம் செய்து முடிப்பதாக பிரார்தித்துக்கொண்டார். வேண்டியபடியே பெருமாளின் அருளால் அவரது வீட்டில் மழலைக்குரல் கேட்கத் துவங்கியது.  தனது பிரார்தனைப்படி திருப்பணியை செய்தார்.

ஆலயத்தின் முக்கிய விசேஷங்கள்:

     அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, ஆடி திருவிளக்கு பூஜை, சித்ரா பௌர்ணமி, மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி போன்ற வைபவங்கள் இந்தக் கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அமைந்திருக்குமிடம்:

     புதுகோட்டையிலிருந்து கொட்டாம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் 35கி.மீ.தூரத்தில் பொன்னமராவதி அமைந்துள்ளது.

தரிசன நேரம்:

காலை  –  8 மணி   முதல் –  11மணி வரை .

மாலை –  5 மணி  முதல் – இரவு  8 மணி வரை .

நண்பர்களே! குழந்தைப்பேறு அருளும் இந்த பொன்னமராவதி ஆலயத்தை நீங்களும் தரிசித்து,அந்தப் பெருமாளின் ஆசி பெறுவீர்…

The post புத்திர பாக்யம் அருளும் அழகப்பெருமாள் appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Latest Images

Trending Articles


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


எவடே சுப்பிரமணியம்?


சித்தன் அருள் - 1613 - அன்புடன் அகத்தியர் - அம்பாஜி சக்தி பீடம்!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


திருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


புதுக்கோட்டையில் வலைப்பதிவு பயிற்சி


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 877 - தாவர விதி!



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>