மன்மதனின் சாம்பலிலிருந்து சித்ரகர்மா என்பவர் ஒரு புருஷ வடிவினைச் செய்தார். ஈசனின் பார்வை பட்டதும் அது உயிர் பெற்று எழுந்தது.
அவன் சித்ரகர்மாவின் அறிவுரைப்படி ஈசனை மகிழ்வித்து பல வரங்களை பெற்று பண்டாசுரன் என்னும் பெயர் பெற்றான்.
இனி: பண்டாசுர பட்டாபிஷேகம் மயனின் உதவியுடன் சூன்யக பட்டணத்தை உருவாக்கினான். அதில் அவனை அரசனாகவும், விஷங்கன், விசுக்ரன் ஆகிய இருவரையும் யுவராஜர்களாக சுக்ரன் நியமித்தார்.
சகல ஆபரணங்களுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவன் கடைசல் பிடித்த ரத்தினம் போல விளங்கினான்.,மேலும், அமிலித்ரக்னன், இந்திரசத்ரு, விஜயன், வித்யுன்மாலி, விபீஷணன், உக்ரகர்மா, உக்ரதன்வா, ஸ்ருதிபாரகன் ஆகியோரை தனது பிரதானிகளாக வைத்துக் கொண்டான்.
பட்டாபிஷேகத்தின் போது சுக்ரன் முன்னர் பிரம்மா ஹிரண்யனுக்கு தந்ததும், அழிவற்றதுமாகிய கிரீடத்தை அவனுக்கு சூட்டினார்.
அஸ்திர, சஸ்திரங்கள் மேல் விழாதவாறு காப்பதுமான குடையையும், விஜயம் என்னும் வில்லையும், கத்தியையும், திவ்யாபரணங்களையும், சிம்மாசனத்தையும் கொடுத்தார்.
மேலும், பிரம்ம தேவரால் படைக்கப்பட்டதும், ரோகம், துக்கம் முதலியன ஏற்படாமல் காப்பதுமான சாமரங்களையும் அளித்தார்,ரதகஜதுரகபதாதிகள் அவனிடம் ஏராளமாக இருந்தது.
நாடு, நகரம், சேனைகள் போன்ற பல இன்னும் முழுமை பெறும் வரை சுக்ராச்சார்யர் கூறியது போல அனைவரும் ஹோமங்கள், பூஜைகள் செய்து பரமசிவனை ஆராதித்தனர்.
அனைத்தும் முழுமை அடைந்த பிறகு, தனது மந்திரி சபையினை கூட்டி தேவர்களையும், மற்ற சிருஷ்டியையும் விநாசஞ்செய்ய திட்டமிட்டான்.
நேரடியாக தாக்காமல், அதற்கு அவன் கையாண்ட நூதன முறையைப் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 18) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.