மூவுலகமும் பண்டாசுரனின் கொடுமைகளால் துயருற்றது. இதனை உணர்ந்த வசந்தன் மன்மதன் உயிர்த்தெழுந்து வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று ரதியை ஆறுதல் படுத்தினான்,அது கேட்ட ரதியும், அன்னை லலிதாம்பிகையை குறித்து தவமியற்ற தொடங்கினாள்.
இனி:இதனிடையே, சுக்ரர் சொற்படி அனைவரும் ஹோமங்கள், பூஜைகள் செய்து பரமசிவனை ஆராதித்தனர்,ஒவ்வொரு ராக்ஷஸர் வீட்டிலும் ரிக், யஜுர், சாம, அத்யாயனம் நடந்து கொண்டிருந்தது.
மகரிஷிகளின் ஆஸ்ரமத்தில் நடக்கும் வேள்விகளைப் போல அசுரர்கள் வீட்டிலும் தேவர்கள் ஹவிஸ்ஸை புசித்தனர்.
இங்ஙனம் உலகை ஆண்டு வந்த பண்டனுக்கு 60,000 ஆண்டுகள் அரை க்ஷணம் போல சென்றன,தவத்தாலும், யாகங்களாலும் அசுரர்கள் பலிஷ்டரானார்கள். தேவர்களின் பலம் குறைந்து வருவதைக் கண்ட நாராயணன், ஜகன் மோகினியான ஒரு மாயையை படைத்தார்.
அவளிடம், “ஓ மாயா !! நீ விரைந்து சென்று பண்டனை மயக்கி விஷயங்களை அனுபவி” என்றார். அப்படியே செய்கிறேன் எனப் பணிந்து அவளுக்கு சகாயமாக சில அப்சரஸ்களை அழைத்து சென்றாள்.
பண்டன் தனது மனைவிகளுடன் கிரீடை செய்யுமிடத்திற்கு சென்று அவர்களை மயக்கும்படி வீணாகானம் செய்தாள்.
அதில் மயங்கிய பண்டனும், அவனது மந்திரிகளும் அனைத்தையும் மறந்து அவர்களிடத்தே களித்திருந்தனர்,இதனால் அவர்கள் அனைவரும் ஆசாரங்களை மறந்து மோகத்தில் மூழ்கியிருந்தனர்.
இங்ஙனம் 800 ஆண்டுகளை ஒரு முகூர்த்தம் போல கழித்தனர்,அசுரர்கள் ஆசாரங்களை விட்டு விட, தேவர்கள் அனைவரும் அசுர பீடை நீங்கி சற்றே ஆசுவாசமடைந்தனர்.
அச்சமயம் அங்கு வந்த நாரதர் தேவர்களுடன் வைகுந்தம் சென்று மாலவனை பணிந்து தங்களது இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று வினவினர்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 21) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.