Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 22)

$
0
0

 பகவான் நாராயணனால் படைக்கப்பட்ட மாயை பண்டனையும், அவன் சேனைகளையும், மயக்க அசுரர்கள் ஆசாரங்களை விட்டு விட்டனர். இதனால் தேவர்கள் அனைவரும் சற்று ஆசுவாசமடைந்தனர்.

 இனி: தேவர்களைக் கண்ட நாராயணன், அவர்களின் இந்த நிலைக்கு காரணம் பண்டாசுரன் தான் என்று கூறி அவனது திட்டத்தை கூறினார், மேலும் அவனது இந்த தாக்குதல் மும்மூர்த்திகளையும் விடவில்லை என்றார்,இதனை கேட்ட தேவர்கள், இதற்கு என்ன தான் நிரந்தர தீர்வு என்று மாதவனை வேண்டினர்.

அதற்கு பகவான் விஷ்ணு, நமக்கு இந்நிலை ஏற்பட்டாலும், எதனாலும் மாறுபாடு அடையாத மஹாசம்புவால் தான் இதற்கான உபாயத்தை கூற முடியும் என்றார்.

 எனவே, அவரை சரணடைவோம். என்னோடு வாருங்கள் என்று அனைவரையும் பிரம்மாண்டத்தின் எல்லைக்கு அழைத்து சென்றார்.

 அங்கு சுவர் போன்றதொரு பிரகாரம் இருந்தது. தேவலோகத்து யானைகளை கொண்டு தொடர்ந்து ஒரு ஆண்டு முயன்றதில் ஒரு சிறிய வழி ஏற்பட்டது.

 அதன் வழியாக உள்ளே சென்ற தேவர்கள், அங்கே சின்மய ஆகாசத்தைக் கண்டனர். அது சுதந்திரமாக, பஞ்சபூத கலப்பின்றி, களங்கமற்று விளங்கியது.

 அங்கே நின்று அனைவரும் மஹா சம்புவை துதித்தனர். அவர்கள் வேண்டுதலுக்கு மனமிரங்கியவர் அங்கே தனது துணையான பராசக்தியுடன் தோன்றினார்.

 மஹா சம்புவானவர், மேகம் போன்ற கறுத்த மேனி உடையவராகவும், மூன்று கண்களை உடையவராகவும், இரு கைகளை உடையவராகவும், ஒன்றில் சூலமும், மற்றதில் கபாலமும் ஏந்தி காட்சியளித்தார்.

 அவரோடு அன்னை பராசக்தியும் தோன்றினாள். அவள் ஒரு கையில் அக்ஷமாலையும், மற்றதில் புத்தகம் ஏந்தி சந்திரனை போல் குளிர்ச்சியாக காட்சி அளித்தாள்.

 தேவர்களை கண்ட மஹா சம்பு புன்னகையுடன், நீங்கள் அனைவரும் வந்த காரணத்தை அறிவோம் என்று கூறி பின்வருமாறு கூறினார்.

பிரளயம் என்பது 3 வகைப்படும். அவை :

1. அவாந்தர பிரளயம்
2. மஹா பிரளயம்
3. காம பிரளயம்

 இம்மூன்று பிரளயங்களும் ஒவ்வொரு கல்ப முடிவிலும் சுழற்சி முறையில் தோன்றுவதாகும்.
இதில் அவாந்தர பிரளயத்திலிருந்து சிருஷ்டியை விஷ்ணுவும், மஹா பிரளயத்திலிருந்து நானும் காப்போம்.

 இப்படி இருக்கையில், இப்போது ஏற்பட்டிருப்பது காம பிரளயம். இதிலிருந்து நம்மை லலிதாம்பிகையால் தான் காக்க முடியும் என்றார்.

 அவளை மஹா யாகம் செய்து வழிபட அவள் அவதரித்து நம்மை ரட்சிப்பாள் என்று கூறி அதற்கான வழிமுறைகளை கூறத் தொடங்கினார்.
தொடரும்…

The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 22) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>