Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54)

$
0
0

 ரணகளம் புகுந்த பண்டன், அன்னை மீது மஹாஸுரா அஸ்திரத்தை பிரயோகித்தான். ஜகதாம்பிகை அதனை தனது விரல் நகத்திலிருந்து விஷ்ணுவின் தசாவதாரங்களை தோற்றுவித்து அழிக்கிறாள்.

இனி : பண்டாசுர வதம் இவ்விதம் அனைத்து அசுரர்களும் அழிந்த நிலையில் கடுஞ்சினம் கொண்ட பண்டன் மோஹாஸ்திரத்தை பிரயோகித்தான்.

 அதனால் சக்திகள் அனைவரும் மூர்ச்சை அடைந்தார்கள். உடனே, அம்பிகை சாம்பவாஸ்திரத்தை பிரயோகித்து மோஹாஸ்திரத்தை அழித்தாள்.

 இங்ஙனம் அஸ்திர, பிரதியஸ்திர தாரைகளால் பெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், சூரியன் அஸ்தமிக்க சென்றது.

 இது கண்ட தேவி, இனியும் தாமதிக்க கூடாதென்றெண்ணி, நாராயணாஸ்திரத்தால் பண்டனின் அனைத்து அக்ஷௌஹிணி சேனைகளையும் தீக்கிரையாக்கினாள்.

 அன்றியும் மஹாராக்ஞீ, பிரளய காலாக்னி போல் ஜ்வலிக்கும் பாசுபதாஸ்திரத்தால் 40 சேனாதிபதிகளையும் அழித்தாள்.

(மஹாபாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தா ஸுரசைனிகா – லலிதா சஹஸ்ரநாமம்)

 சமஸ்த பந்துக்களையும் இழந்து ஏகாங்கியாய் நிற்பவனும், உலகிற்கு துன்பத்தை மட்டுமேஅளித்தவனும், அதியுக்ர பராக்கிரமம் மிகுந்த பண்டமஹாசுரனை,தேவி ஆயிரம் கோடி சூரியர்கள் போல ஜொலிக்கும் மஹாகாமேஸ்வராஸ்திரத்தால் கொன்றொழித்தாள்.

அதிலிருந்து கிளம்பிய ஜ்வாலையானது அவனது சூன்யக நகரத்தையும் தீக்கிரையாக்கியது.

(காமேஸ்வராஸ்திர நிர்தக்தஸ பண்டாஸுர ஸூன்யகா – லலிதா சஹஸ்ரநாமம்)

 பண்டன் இறந்ததால் மூவுலகமும் ஆனந்தம் கொண்டது. விஜயலக்ஷ்மியுடன் கூடிய தேவியை சக்திகள் கண்டு மங்கள வாத்தியங்களை முழங்கினர்.

 சந்தோஷம் கொண்ட தேவர்கள் ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் முழங்கியது.

 கந்தர்வ ஸ்த்ரீகள் ஆரத்தி எடுத்தனர். ஊர்வசி, மேனகை திலோத்தமை போன்ற அப்சரஸ்கள் நர்த்தனம் செய்தனர்.

 ஸ்ரீமஹாராக்ஞியின் பராக்கிரமத்தினை எண்ணி வியந்து சகல சராசரங்களும் ஆச்சரியத்தில் மயிர் கூச்சலடைந்தனர்.

 கந்தர்வர்களும், தும்புருவும், நாரதரும், சாக்ஷாத் சரஸ்வதி தேவியும் ஜய மங்கள பத்யங்களை பாடினர்.

 அடிக்கடி ஜய ஜய என லலிதா தேவியை துதிப்பவர்கள் சந்தோஷத்தால் மெய் மறந்தவர்களாகி ஆனந்த கூத்தாடினர்.

 சப்த ரிஷிகளும் வேத மந்திரங்கள் முழங்க ஜயஸ்ரீயை விருத்தி செய்தனர். அவர்களால் துதிக்கப்பட்ட ஸ்ரீலலிதை, வெட்கத்தால் சிறிது தலை குனிந்து, பண்டாசுர ஜயத்திற்கு பின் தன்னிருப்பிடம் திரும்பினாள்.

தனது சேனைகளுடன் சம்பத்கரீ தேவியும், அஸ்வாரூடா தேவியும் முன்னே சென்றனர்.

மந்திரிணியும், தண்டினியும் தத்தம் சிறந்த ரதத்திலமர்ந்து தேவியின் இருபுறமும் சென்றனர்.

 இங்ஙனம் தேவகார்யத்தை செய்து முடித்த குற்றமற்ற ரூபமுள்ளவளும், மூவுலகிற்கும் மாதாவுமான, சக்ரராஜ ரதத்திற்கு அலங்காரஸ்ரீயாய் விளங்குபவளுமான ஸ்ரீலலிதை விஜயஸ்ரீயுடன் நிறைந்திருந்தனள்.

 ஓ அகத்தியரே !! ஸ்ரீலலிதையால் செய்யப்பட்ட இந்த பண்டாசுர சம்ஹார சரித்திரத்தை எவனொருவன் படிக்கிறானோ, அவனது அனைத்து பாபங்களும் அழியும்.

 அவன் அஷ்டஸித்திகளையும் அடைவான். முக்தியும் அவனுக்கு ஸ்வாதீனமாக இருக்கிறது.
சமஸ்த பாபங்களை அழிக்க வல்லதும், சகல சித்திகளை வழங்க வல்லதுமான இந்த லலிதா பராக்கிரமத்தினை புண்ணிய தினங்களில் படிக்கிறவர்கள் உத்தமமான பாக்ய ஸம்ருத்தியை அடைகிறார்கள்.
தொடரும்…

The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!