Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 58)

$
0
0

பண்டனை வதைத்த அம்பிகையை அண்ட சராசரமும் கண்டு ஸ்தோத்திரம் செய்து, தங்களுக்காக உயிர் நீத்த மன்மதனை மீண்டும் எழுப்ப வேண்டினர்.

இனி : காம சஞ்ஜீவனம் வைதவ்யத்தினால் சகல ஆபரணங்களையும் களைந்து, கண்ணீர் பெருக, தலைமுடி கலைந்து அழுக்கடைந்த ரதி ஜகன்மாதாவை நமஸ்கரித்தாள்.

அவளை பார்த்த மாத்திரத்திலேயே கருணை ததும்பிய பரமேஸ்வரி தனது காந்தனாகிய காமேஸ்வரரை கடைக்கண்களால் பார்த்தனள்.

அந்த கடாக்ஷத்தினால் மலர்ந்த முகாரவிந்தமுள்ளவனும், முன்பை விட பன்மடங்கு அழகிய சரீரத்துடன், சர்வ ஆபரணங்களையும் அணிந்து, புஷ்பபாணம் மற்றும் கரும்பு வில்லை கொண்டவனுமான மன்மதன் உண்டானான்.

பேரானந்தக் கடலில் மூழ்கிய ரதி தேவி, தன் கணவனை வணங்கி சந்தோஷம் அடைந்தனள். கந்தர்ப்பன் என்னும் அவ்வீரன் பக்தியுடன் மஹேஸ்வரியை வணங்கி, பின்வருமாறு உரைத்தான்.

“ஹே லலிதாம்பிகே! ஈஸ்வரனால் சாம்பலாக்கப்பட்ட இந்த உடலானது உமது கடாட்சத்தால் மீண்டும் உற்பத்தியானது.”

“ஆதலால் யான் உமது புத்ரனே! உமக்கு ஏதேனும் கைங்கர்யம் செய்ய எனக்கு உத்தரவு அளிக்க வேண்டும்.” இங்ஙனம் வேண்டப்பட்ட பரமேசாநீ, மகரத்வஜனான மன்மதனை பார்த்து கூறினாள்.

“மனோவியாபாரத்தால் பிறந்த குழந்தையே! நீ செல்வாயாக! உனக்கு இனி பயம் கிடையாது. எனதருளால் சகல ஜகத்தையும் மோஹமடையும் படி செய்! உனது பாணம் எங்கும் தடைபடாது.”

“உனது பாணத்தால் அடிபட்ட ஈஸ்வரன் விரைவில் பர்வத குமாரியான கௌரியை மணப்பார். எனதருளால் ஆயிரங்கோடி காமர்கள் உன்னிடம் தோன்றி, எல்லோருடைய உடலிலும் புகுந்து உத்தமமான ரதியை அளிப்பார்கள்.”

“வைராக்கியத்தால் பரம கோபம் கொண்டவராயினும், ஈஸ்வரன் மீண்டும் ஒருமுறை உன்னை எரிக்கமாட்டார்.”

“ஓ கந்தர்ப்பனே! இன்று முதல் எனது மஹா பிராஸாதத்தினால் சகல பிராணிகளுக்கும் கண்ணில் தோன்றாமலிருந்தே மோஹத்தை உண்டு பண்ணுவாய்.”

“உன்னை நிந்திப்பவர்களும், உன்னிடத்தில் வெறுப்பான எண்ணம் உள்ளவர்களும், ஒவ்வொரு பிறவியிலும் ஆண்/பெண் தன்மை நீங்கி பேடியாக பிறப்பார்கள் என்பது நிச்சயம்.”

இங்ஙனம் ஸ்ரீலலிதை ஆக்ஞையிட மன்மதன் அஞ்சலி செய்து “அப்படியே” என்று அதை சிரசால் வகித்து பணிந்து சென்றான்.

மன்மதன் மீண்டும் ஸ்தாணு ஆஸ்ரமத்தினை அடைந்து, சந்திரமௌலியை தனது பாணங்களினால் அடித்தான்.

அதனால் தவத்தினை கைவிட்ட சந்திரசேகரன் பார்வதி தேவியை மணக்க தக்க முயற்சிகள் செய்தார். பிறகு, மன்மதன் பார்வதி தேவியையும் தனது பாணங்களினால் அடித்தான்.

பார்வதி தேவி, அவரை கணவனாக அடைய வேண்டி, கடுந்தவம் புரிந்தனள். அவளது தவத்தினால் மகிழ்ந்த ஈசன் காட்சியளித்து மணந்து கொண்டார்.

அவர்களுக்கு ஆறுமுகங்கள் கூடிய மஹாஸேனன் தோன்றி, சகல வித்தைகளையும் ஈசனிடம் கற்று, தாரகாசுரனை ஸம்ஹரித்தார்.

சந்தோஷம் அடைந்த தேவேந்திரன் தனது மகளாகிய தேவஸேனையை அவருக்கு தர, குஹன் அவளை மணந்து கொண்டார்.

இங்ஙனம் மன்மதன் தேவகார்யத்தை முடித்து விட்டு, ஸ்ரீபுரத்திற்கு மறுபடியும் வந்து சேர்ந்தான்.

புண்யமான அந்த ஸ்ரீநகரத்தில் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி லோக க்ஷேமத்திற்காகவே அங்கு வசிக்கிறாள். அங்கு அந்த தேவியை சேவிப்பதற்காகவே காமனும் சென்றான்.

(ஹரநேத்ராக்னி ஸந்தக்த காமசஞ்ஜீவனௌஷதி – லலிதா சகஸ்ரநாமம்)

(நாளை முதல் ஸ்ரீநகர நிர்மாணம்)

(தொடரும். . .)

The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 58) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>