Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 82)

$
0
0

அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம்.

இனி : ஒன்பதாவது ஆவரணம் – தொடர்ச்சி

ஹயக்ரீவர் : மேலும் பஞ்சபிரம்ம மயமான மஞ்சத்தின் கீழ் திசையில் தத்துவ ஸ்வரூபமான 36 படிக்கட்டுகள் விளங்குகின்றன.

மஞ்சத்தின் காலுக்கருகே கோடி சூரியர்களின் பிரகாசத்துடன், தகதகவென பிரகாசிக்கும் தங்கமயமான,

நுனியில் முத்து பூங்கொத்துகள் தொங்க விடப்பட்டதும், நானாரத்னமயமாய் விளங்குவதும், ஊமத்தம்பூ போன்ற அமைப்புள்ளதுமான அழகிய கலாசீ என்னும் தாம்பூலம் துப்பும் பாத்திரம் இருக்கிறது.

ஓ கடலைப் பருகியவரே! மூன்று முழம் உயரமும், 1600 முழம் விசாலமும் உள்ள ஹம்ஸதூலிகாதல்பம் மஞ்சத்தின் மேலிருக்கின்றது.

அதன் மேல் கால் தலையணைகள் இரண்டும், தலை தலையணைகள் இரண்டும் இருக்கிறது. சிவந்த காந்தியுள்ள நான்கு திண்டுகளால் படுக்கை மிகவும் அழகாக இருக்கின்றது.

அதன் மேல் சுத்தமானதும், மிருதுவானதும், பத்மராக மணியை ஒத்த காந்தியுடைய கௌஸும்ப வஸ்திரம் விரிக்கப்பட்டுள்ளது.

அதன் மீது கிழக்கு முகமாக இருப்பவரும், தயையோடு கூடியவரும், சிருங்கார வேஷத்தால் அழகானவரும், எப்பொழுதும் 16 வயதுடைய,

உதயசூரியனை போன்ற காந்தியுடைய, நான்கு கரங்களும், மூன்று கண்கள் உடையவரும், சிரிப்பு என்னும் அழகிய நிலவினால் பிரகாசிக்கும் அழகிய கன்னங்களை உடையவரும்,

மிகச்சிறந்தவருமான பகவான் ஆதிதேவன் ஸ்ரீகாமேஸ்வரர் பிரகாசிக்கிறார். அவருடைய மடி மீதிருப்பவள் ஸ்ரீலலிதா.
நாளை ஸ்ரீலலிதையின் வர்ணனை
தொடரும்…

The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 82) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>