Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 83)

$
0
0

அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம்.

இனி: பஞ்சபிரம்ம மயமான சிம்ஹாஸனத்தில் பகவான் ஆதிதேவன் ஸ்ரீகாமேஸ்வரர் பிரகாசிக்கிறார். அவருடைய மடி மீது அமர்ந்திருப்பவள் ஸ்ரீலலிதா.

பாலசூரியனை போல சிவந்த திருமேனி உள்ளவள். எப்போதும் 16 வயதுள்ளவள். புதிய யௌவனம் நிறைந்தவள்.

கடைசல் பிடித்த பத்மராகம் போன்ற காந்தியுடைய பாதாரவிந்த நகக்காந்தி உடையவள். இயற்கையாகவே சிவந்த பாதகாந்தியுள்ளவள்.

அதிமதுரமாக சப்திக்கும் பாத சலங்கையாலும், கங்கணங்களாலும் அழகாயிருப்பவள். யானையின் துதிக்கைகளை ஒத்த துடைகளால் அழகியவள்.

மன்மதன் என்னும் வீரனுடைய பாணப்பெட்டியின் கர்வத்தை அழிப்பதான முழங்கால்களை உடையவள். மென்மையான, சிவந்த, வழுவழுப்பான பட்டாடையால் பிரகாசிப்பவள்.

ரத்ன ஒட்டியாணத்தால் பிரகாசிப்பவள். வணக்கமான நாபிக்கு மேலே மூன்று மடிப்புகளை உடையவள். மொக்கு போன்ற ஸ்தனங்களிடையே ஊசலாடுகின்ற முக்தா ஹாரங்களுடன் கூடியவள்.

மிக பெருத்த ஸ்தனபாரத்தினால் சிறிது வணங்கிய இடுப்பை உடையவள். காட்டு வாகை புஷ்பம் போல அதி மிருதுவானதும், கேயூர, கங்கண வரிசைகள் உள்ளதும், மோதிரங்கள் தரித்த விரல்களை உடைய நாற்கரங்களை உடையவள்.

கடைசல் பிடித்த சங்கம் போன்ற கழுத்தை உடையவள். சிவந்த உதடுகளை உடையவள். சுத்தமானதும், வரிசையானதும், மல்லிகை அரும்பு காந்தியுள்ள வித்யாஸ்வரூபமான பற்களை உடையவள்.

பெரும் முத்தோடு கூடிய புல்லாக்கினால் பிரகாசிப்பவள். தாழம்பூ மடல் போன்ற மிக நீண்ட கண்களை உடையவள். அர்த்தசந்திரன் போன்ற நெற்றி திலகம் உள்ளவள்.

மாணிக்க குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளை உடையவள். கற்பூர வீடிகை என்னும் சதா வாசனை நிறைந்த தாம்பூல மடிப்புள்ளவள். சரத்கால சந்திர மண்டலத்தினை ஒத்த மதுரமான முகமுள்ளவள்.

சிந்தாமணிகளுடைய சாரத்தினால் இழைக்கப்பட்ட கிரீடமுள்ளவள். அழகிய திலகம் பிரகாசிக்கும் நெற்றிக்கண் உள்ளவள்.

அடர்ந்த இருள் போல நெருக்கமாகவும், கறுத்ததான கேசமுடையவள். வகிட்டு கோட்டில் வைக்கப்பட்ட சிந்தூரத்தால் பிரகாசிப்பவள். மிகுந்த பிரகாசமான சந்திர கலையை சிரசில் தரித்தவள்.

சஞ்சலமான கண்களை உடையவள். சிருங்காரத்திற்குரிய சமஸ்த வேஷங்களையும் உடையவள். சகல ஆபரணங்களுடன் திகழ்பவள்.

சமஸ்த உலகங்களுக்கும் தாயாக விளங்குபவள். சதா ஆனந்தத்தை விருத்தி செய்பவள். பஞ்ச பிரம்மாக்களின் ஆதி காரணமாயிருப்பவள்.

கடைக்கண்களிலிருந்து சுரந்து ஓடும் கருணா பிரவாகத்தால் அனைவரையும் மகிழ்விப்பவள். சகல பாவங்களையும் போக்கடிப்பவள்.

இத்தகைய குணமுள்ள பகவதி ஸ்ரீலலிதாம்பிகை அங்கு பிரகாசிக்கின்றாள்.
தொடரும்…

The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 83) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>