Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 85)

$
0
0

அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரியின் அவதாரம், அவளது திருமணம், அவள் செய்த பண்டாசுர வதம், காம சஞ்ஜீவனம், அவள் வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனைகளையும் கண்டோம்.

இனி : தேவி தியானம்

அகத்தியர் : ஸ்ரீதேவியின் ஆவிர்பாவம் முதலிய சரிதமும், பண்டாசுர வதமும், ஸ்ரீநகரத்தின் அமைப்பும் என்னால் சிரவணஞ் செய்யப்பட்டது. இனி தேவி தியானம் பற்றி கூறி அருள் புரியும்!

ஹயக்ரீவர் : காலையில் எழுந்ததும் பிரகாசமான ஆயிரம் தளங்களுள்ளதும், கேசரத்துடன் கூடியதுமான கமலத்தை சிரசில் நினைந்து,

அதில் கருணாவடிவினராய், மகிழ்ச்சி உள்ளவராய் ஸ்ரீகுருவை தியானம் செய்தல் வேண்டும்.
பிறகு வெளியில் சென்று நித்ய கடமைகளை முடித்து விட்டு, வாசனையோடு கூடிய தைலத்தை தேய்த்து உடலை பிடித்து விட்டு, சுத்தமான வெந்நீரில் நீராடி, அஃதில்லையெனில் கிடைத்த நீரில் ஸ்நானம் செய்து விட்டு சுத்தமான சிவந்த நிற வஸ்திரங்களை உடுத்தி கொண்டு கால்களை கழுவி விட்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, பரிசுத்தனாக பரதேவதையை தியானம் செய்து அவரவர் குல வழக்கப்படி நெற்றியில் திலகமிட்டு கொள்ள வேண்டும்.

வாசனாதிகளான கற்பூரம், கஸ்தூரி, சந்தனம் ஆகியவற்றை பூசிக் கொண்டு சிருங்கார வேஷம் தரிக்க வேண்டும். செல்வத்திற்கேற்றபடி ஆபரணங்களை அணிதல் வேண்டும்.

சக்தியற்றவர்கள் சங்கல்பத்தினால் அதாவது மனதினால் ஆபரணங்களை அணிந்ததாய் நினைத்தல் வேண்டும்.

பின்னர் மிருதுவான ஆசனத்தில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து மகத்தான ஸ்ரீநகரத்தினை தியானம் செய்ய வேண்டும்.

நானாவிருக்ஷ மஹோத்யானம் முதல் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீலலிதா தேவி வரை உள்ள திவ்யமான ஸ்ரீநகரத்தினை மனதை வெளியே செலுத்தாமல் தியானித்தல் வேண்டும்.

இந்திரனுக்கு இந்திர பதவியும், விஷ்ணு விஷ்ணுவாக இருப்பதும், சிவன் சிவனாயிருத்தலும், சந்திர, சூரியர் பிரகாசமாக இருப்பதும்,சகல தேவர்களும் அந்தந்த சித்திகளை பெற்றதும் இந்த ஸ்ரீலலிதா மந்திரத்தினால் தான் என்பதை அறிவாயாக!

மோக்ஷத்தை விரும்புபவர் நிலவைப் போல வெண்மை நிறமானவளாக தேவியை தியானிக்க வேண்டும். ஜனவசியம் வேண்டுவோர் சந்தியா காலம் போல சிவந்தவளாகவும், சிறந்த கவியாக விரும்புவோர் தேவியை ஸ்படிகம் போல நிர்மலமான வெண்மை நிறமானவளாகவும், தனத்தை விரும்புவோர் தேவியை ஸ்வர்ண வர்ணமாக தியானிக்க வேண்டும்.

சர்வ சம்பத்தும் வேண்டுவோர் சியாமளையாக தியானிக்க வேண்டும்.

கும்பஸம்பவரே! இங்ஙனம் அநேக வகையான பேதத்தினால் ஸ்ரீதேவியை தியானம் செய்பவர் அபரிமிதமான சம்பத்துகளை பெறுவர்.

சத்துகளால் மட்டுமே இத்தேவி அடையத்தக்கவள். அசத்துகளால் ஒரு போதும் தேவியை அடைய முடியாது.

எவனுக்கு அது கடைசி பிறவி பிறவி அல்லவோ, எவன் தான் ஸ்வயம் சங்கரன் அல்லவோ அவன் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியையோ அல்லது ஸ்ரீவித்யையையோ அடைய முடியாது.

ஓ கும்பஸம்பவரே! நீர் கேட்ட விஷயத்தையும், தேவி அனைவராலும் பூஜிக்கத்தக்கவள் என்பதையும் கூறினேன்.

பண்டாசுர வதத்திற்காக சிதக்னியிலிருந்து தோன்றிய ஸ்ரீலலிதாம்பிகை பிரம்மாவினால் காமாக்ஷீ என துதிக்கப்பட்டாள்.

அந்த சர்வோத்தமையான ஸ்ரீலலிதாம்பிகை அரிய சக்தியினால், தியானம் செய்யும் சதாசிவத்தின் மனதை லாலனை செய்ததால் லலிதா என பெயர் பெற்றாள்.
தொடரும்…

The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 85) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>