இதனுடைய நன்மைகள்:1,உடல் எடை(ஊலை சதை),மற்றும் தொப்பையை குறைக்கிறது.2,வைட்டமின்கள் இந்த இரண்டிலும் நிறைய இருப்பதால்,தெளிவான கண் பார்வைக்கு உதவுகிறது.3,இதய நோய்,புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.4,உடலுக்கு தேவையான நார்சத்து இதில் அதிகம் உள்ளது.5,உடம்பிலுள்ள தேவையற்ற நீர்,சிறுநீரின் மூலமாக வெளியேறுவதற்கு உதவி புரிகிறது.6,தொடர்ச்சியாக இதனை பருகுவதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுடன்,கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.7,முகம் மற்றும் உடலை பொலிவாக வைப்பதோடு,சரும பராமரிப்பிற்கும் மிகவும் ஏற்றது.8,இரத்தம் உறைவதை தடுப்பதோடு,உடம்பிலுள்ள அனைத்து பாகங்களும் சீராக இயங்க உதவுகிறது.9,ஆரோக்கியம் மற்றும் அழகு பராமரிப்பிற்கு இந்த ஜுஸ் மிகவும் ஏற்றது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை எல்லோரும் பருகலாம்.தேவையான பொருட்கள்:ஆரஞ்சு பழம்- 2 பெரியது(புளிப்பில்லாதது)கேரட்- 2 தேன்- தேவைப்பட்டால்தண்ணீர்- சிறிதளவு
செய்முறை: ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்து,விதையை நீக்கி வைக்கவும்.கேரட்டின் தோலை சீவி கட் பண்ணி வைக்கவும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.கேரட் கொர கொரப்பாக இருந்தால் மீண்டும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வடிகட்டவும்.தேவைப்பட்டால் சீனிக்கு பதிலாக சிறிதளவு தேன் கலந்து பருகலாம். ” நாவிற்கு தித்திப்பான,கலர் ஃபுல்லான,உடம்பிற்கு ஹெல்த்தியான ஆரஞ்சு கேரட் ஜூஸ் ரெடி “பின் குறிப்பு: செரிமான கோளாறு உள்ளவர்கள்,நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
The post ஆரஞ்சு கேரட் ஜூஸ் appeared first on SwasthikTv.