கோமாதாவை வணங்குவதால் தெய்வங்கள் அனைவரையும், மகரிஷிகள், தபஸ்விகளைத் தரிசித்த பலன் ஏற்படும். பில்லி சூன்யங்கள் விலக அமாவாசை அன்று கோமாதாவிற்கு அகத்திக்கீரை தரலாம்.
கோமாதாகோமாதாவை வணங்குவதால் தெய்வங்கள் அனைவரையும், மகரிஷிகள், தபஸ்விகளைத் தரிசித்த பலன் ஏற்படும். பில்லி சூன்யங்கள் விலக அமாவாசை அன்று – அகத்திக்கீரை தரலாம். அப்போது பில்லி சூன்யங்கள் என்னை விட்டு உன்னிடம் சேர வேண்டும் என்று வேண்டாமல் என்னை விட்டு விலக வேண்டும் என்று கூறுதல் வேண்டும்.
திருமணம் ஆகாத பெண்கள் பசுவை அரச மரத்தின் கீழ் நிற்க வைத்து அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து காமேஸ்வரி மந்திர மூலத்தை ஜபம் செய்திட எந்த வயது ஆனாலும் திருமணத் தடை அகன்று மணமேடை ஏறும் பாக்கியம் கிடைத்துவிடும். பசுவிற்கு மாலை அணிவித்து அதை எடுத்து தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அரச மர வலம் வருதல் வேண்டும்.
அகத்திகீரையை 1 நாள் வீட்டில் வைத்திருந்து சனிக்கிழமையில் பசுவுக்கு கொடுத்து வணங்கி அதன் கோமய நீரை மஞ்சள் நீருடன் கலந்து வீட்டில் தெளிக்க பில்லி சூன்யங்கள் விலகிவிடும்.
விலங்கு இனங்களில் அம்மா என்ற ஓசையை ஆசையாய் எழுப்புவது பசு மட்டுமே. ஆகவே அதனுள் இறைசக்திகள் நிறைந்துள்ளன. பசு இல்லாத ஒரு வீட்டில் காலையில் ஒரு பசு தற்செயலாக வந்து நின்றால் அவ்வீட்டிற்கு நல்ல செய்தி வரப்போகிறது என்று பொருள் கொள்வர். உடனே அதற்கு அகத்தி கீரை, வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசுவைக் கண்டால் மகா லட்சுமியைக் கண்டதாக பொருளாகிறது. தீட்டு, துர் மந்திரக்கட்டு இவைகள் அகன்றிட புதன்கிழமை பசுவுக்கு அகத்திக் கீரை தர வேண்டும்.
ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்து இறந்தால் மீண்டும் புத்திர சோகம் அகன்று குழந்தை பிறக்க கோவந்தனம் செய்து கீரை தரலாம். நல்ல சுத்தமான அகத்திக்கீரைகளையே கொடுக்க வேண்டும். பழுத்துவிட்ட மஞ்சள் நிற கீரைகளைத் தந்தால் அதற்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அது நமக்கு பாவமாகி விடும். ஆவுக்குத் தரும் அகத்திக்கீரை பாவங்கள் பொடியாகித் தொலையுமே! என்பது வாக்கு.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யார்வர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்றுரை தானே…!
திருமந்திரம்.
என்ற பாடலில் பசுவிற்கு கீரை கொடுத்தல் பற்றி கூறப்பட்டுள்ளது.
The post பில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு appeared first on SwasthikTv.