Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

தீபாவளி ஸ்பெஷல் !

$
0
0

விரதங்களில் மிக முக்கியமான விரதம் அன்னபூரணி விரதமாகும்.மகத்தான சக்தி கொண்ட விரதம் இது.சிவபெருமானே ஞானத்துக்காக அன்னபூரணியிடம் வேண்டி நின்றிருக்கிறார்.இதிலிருந்து அன்னபூரணியின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.

அன்னபூரணி விரதம் முக்கியமாக தீபாவளி சமயம்வரும் 3 தினங்களிலும்,ஒவ்வொரு மாதத்திலும் வரும் வெள்ளிக்கிழமைகள்,மகா சிவராத்திரிக்கு மறுநாள்,ஸ்ரீ ராம நவமிக்கு முதல்நாள் வரும் அஷ்டமி தினம் போன்ற நாட்களில் விரதமிருந்து அன்னபூரணியை பூஜிப்பது நல்லது.

அன்னபூரணி விரதம் இருக்கும் முறை !

அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி மனத்தூய்மையுடன் அன்னபூரணியை வேண்டி தங்களது துயரம் தீர பிராத்தனை செய்து கொள்ள வேண்டும்.மாலை வரை பூரண விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.பசி தாங்காதவர்கள்,நோயாளிகள் மட்டும் சிறிது பால் அருந்தலாம்.மாலை 6 மணியளவில் பூஜையை மேற்கொள்ள வேண்டும். இப்பூஜையில் அன்னபூரணி விக்கிரகம் வைப்பது முக்கியம்.பூஜை செய்பவர்கள் வெண்பட்டு அல்லது கோதுமை நிற நூல்புடவை உடுத்தி கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து,அங்கு பச்சரிசியினால் மாக்கோலமிட வேண்டும்.

மனைப்பலகையைக் கிழக்கு நோக்கி வைத்து அதன்மேல் பித்தளைப்படியில் அரிசியை வைத்து,அதன்மேல் அன்னபூரணி விக்கிரகத்தை வைக்க வேண்டும்.வடஇந்தியர்கள் அரிசிமீது கோதுமை வைத்து செய்வர்.அன்னபூரணி சிலைக்கு ஆடை உடுத்தி ,கருகமணியை மஞ்சள்சரடியில் கோர்த்து அணிவிக்க வேண்டும்.5வகையான வாசனைமிகு மலர்களால் மாலை கட்டி போடவேண்டும்.பூஜை செய்பவர் வடக்கு பார்த்து பலகையில் அமர்ந்து செய்ய வேண்டும்.பச்சரிசி மாவினால் 16விளக்குகள் செய்து சுற்றிலும் வைத்து தீபமேற்றவும்.

முதலில் விநாயக பெருமானை வணங்கி விட்டு,பிறகு அன்னபூரணியை வணங்க வேண்டும்.
அட்சதை,புஷபங்களை கையில் எடுத்து மனமுருக பிராத்தித்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு 16வகை [ஷோடச]உபசாரம்செய்து,மலர்போட்டு அன்னபூரணிக்குரிய 108நாமாவளியை சொல்லி வழிபட வேண்டும்.இறுதியில் பஞ்சதீபம் காட்டவும்.

அன்னபூரணிக்கு பிடித்த உணவு பாயாசம்.எந்தவிதமான பாயாசமாகவும் இருக்கலாம்.உலர் பழவகை,வாழைப்பழம்,கற்கண்டு வைத்து வழிபடலாம்.
தாம்பூலத்தின் மீது அதிக விருப்பமுடையவள்.எனவே,தாம்பூலம் வைத்து வழிபட வேண்டும்.

இச்சாசக்தி,ஞானசக்தி,கிரியா சக்தியாக அன்னபூரணி திகழ்கிறாள்.அவளிடம் நம்முடைய சரீரத்தில் உள்ள முக்குணங்களின் தோஷங்களையும் நீக்க வேண்டி 3தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.கைநிறைய மலர்களை அள்ளி எடுத்து அம்பிகையின் பாதங்களில் சமர்ப்பித்து 4முறை நமஸ்கரிக்க வேண்டும்.

அன்னபூரணி அஷ்டகம்,அன்னபூரணா பஞ்சரத்னம் சொல்லலாம்.சொல்ல தெரியாதவர்கள் மனத்தில் அன்னையை நினைத்து மனமுருகி வேண்டி கொள்ளலாம்.நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி,வழிபட்ட பிறகு உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம்.நாம் கேட்டும் அனைத்து நியாயமான கோரிக்கைக்களையும் நிறைவேற்ற காத்துக் கொண்டு இருக்கிறாள் நம் அன்னை. நாமும் அன்னபூரணி விரதம் இருந்து அன்னையை பிராத்தித்து வேண்டிய வரத்தை பெறுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள் !

The post தீபாவளி ஸ்பெஷல் ! appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>