தட்சிணாமூர்த்திக்கு உகந்த சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை சொல்லி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
குரு பகவான்ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா
தாட்சண்யம் நிறைந்த தட்சிணாமூர்த்திக்குரிய சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பது நன்மை பயக்கும். வியாழக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகிலுள்ள சிவன் கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி விக்ரகம் முன்பாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடுவதால் தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படாது. முக வசீகரம் உண்டாகி பிறருடன் விவகாரங்களில் ஈடுபடும் போது உங்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். சிறந்த வாக்குவன்மை உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
The post வருமானம் அதிகரிக்க தட்சிணாமூர்த்தி மூல மந்திரம் appeared first on SwasthikTv.