தேவையான பொருட்கள்:
வடுமாங்காய் – 3 கப்
மிளகாய்தூள் – 3 மே.கரண்டி மஞ்சள்தூள் – ஒரு மே.கரண்டி
கடுகு – 3டீஸ்பூன்
தூள் உப்பு தேவையான அளவு
செய்முறை:
வடுமாங்கையை அலசி , துணி அல்லது கிட்சன் டிஸ்யூ வைத்து ஈரமில்லாமல் துடைத்து அதன் மேல் விளக்கெண்ணெய் தடவி வைக்கவும்.
இதனுடன் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பீங்கான் ஜாடி அல்லது பெரிய கண்ணாடி பாட்டில் அல்லது மண் சட்டியில் போட்டு மூடவும்.
ஜாடியை நன்றாக குலுக்கி விடவும்.
மறுநாள் ஜாடியை திறந்து பார்த்தால் நீர் விட்டிருக்கும்.
தினமும் 2 முறை ஜாடியை குலுக்கி விட்டவும்.
அடிக்கடி குலுக்கி விடுவதால் 3 நாட்களில் நிறைய நீர்விட்டு மாங்காய் நீரில் ஊறி விடும்.
சில நாட்களிலே நன்றாக மாங்காய் ஊறிவிடும். நன்றாக ஊறிய பிறகு தேவைக்கு பயன்படுத்தலாம்.
குறிப்பு:
இந்த மாவடு ஜாடியை நேரடியாக வெயிலில் வைக்கனும் என்று அவசியமில்லை.
வெளிச்சம் படும்படியான இடத்தில் வைத்தாலே போதும். கட்டாயம் அடிக்கடி குலுக்கி விடவும்.
தயிர் சாதத்துடன் வடுமாங்காயை தொட்டு சாப்பிட்டால் அட…டா என்னா சுவை என்னா சுவை…
The post வடுமாங்காய் appeared first on SwasthikTv.