Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

பெருமாளை போற்றும் 108 போற்றி

$
0
0

நல்லவைகள் அனைத்தையும் பக்தர்களுக்கு அருள்பவர் நாராயணன் ஆகிய பெருமாள். அவரை போற்றும் 108 போற்றி துதிகள் இதோ.

பெருமாள்மகாவிஷ்ணுவான பெருமாளை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த 108 போற்றி துதிகளையும் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், நீர் கூட அருந்தாமல் பூஜையறையில் உள்ள பெருமாளின் படத்திற்கு பூக்களை வைத்து, பஞ்சதீப எண்ணெய் தீபம் ஏற்றி, பால் அல்லது பழத்தை நைவேத்தியமாக வைத்து இந்த 108 போற்றி துதிகளை பாடி வந்தால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் மற்றும் விருப்பங்களில் இருந்த தடை, தாமதங்களை நீக்கி, விரைவில் அவற்றை நிறைவேற்றுவார் பெருமாள்.

ஓம் அப்பா போற்றி ஓம் அறமே போற்றி
ஓம் அருளே போற்றி ஓம் அச்சுதா போற்றி
ஓம் அரவ சயனா போற்றி ஓம் அரங்கமா நகராய் போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் ஆறுமுகனின் அம்மான் போற்றி
ஓம் அனுமந்தன் தேவே போற்றி
ஓம் ஆதியே அனாதி போற்றி
ஓம் ஆழ்வார்கள் தொழுவாய் போற்றி
ஓம் ஆதி மூலனே போற்றி
ஓம் ஆபத்துச் சகாயா போற்றி
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் உமையம்மை அண்ணா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி
ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண சீலா போற்றி
ஓம் ஏழைப்பங்காளா போற்றி
ஓம் எழில்நிற வண்ணா போற்றி
ஓம் எழில்மிகு தேவே போற்றி
ஓம் கலியுக வரதா போற்றி
ஓம் கண்கண்ட தேவே போற்றி
ஓம் கருடவா கனனே போற்றி
ஓம் கல்யாணமூர்த்தி போற்றி
ஓம் காமரு தேவே போற்றி
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி
ஓம் கோவிந்தா-முகுந்தா போற்றி
ஓம் சர்வலோ கேசா போற்றி
ஓம் சாந்தகுண சீலா போற்றி
ஓம் சீனிவாசா போற்றி
ஓம் சிங்காரமூர்த்தி போற்றி
ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி
ஓம் திருமகள் மணாளா போற்றி
ஓம் திருமேனி உடையாய் போற்றி
ஓம் திருவேங்கடவா போற்றி
ஓம் திருமலைக் கொழுந்தே போற்றி
ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி
ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி
ஓம் கடலமு தளித்தாய் போற்றி
ஓம் நந்தகோ பாலா போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
ஓம் நரசிம்ம தேவே போற்றி
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் தசாவ தாரா போற்றி ஓம் தயாநிதி -ராமா போற்றி
ஓம் தந்தை சொல் காத்தாய் போற்றி
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி
ஓம் பரதனுக்கீந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துணைவா போற்றி
ஓம் பரந்தாமா- கண்ணா போற்றி
ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தி போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் வாமன வரதா போற்றி
ஓம் உலகினை அளந்தாய் போற்றி
ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி
ஓம் பரகதி அருள்வாய் போற்றி
ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
ஓம் சபரியின் கனியே போற்றி
ஓம் துருவநிலை தந்தாய் போற்றி
ஓம் நற்கதி தந்தாய் போற்றி
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் கமலக் கண்ணா போற்றி
ஓம் கலைஞான மருள்வாய் போற்றி
ஓம் கஸ்தூரி திலகா போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் பவளம் போல் வாயா போற்றி
ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி
ஓம் நான்கு புயத்தாய் போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் சங்குசக் கரனே போற்றி
ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி
ஓம் கோபிகள் லோலா போற்றி
ஓம் கோபமும் தணிப்பாய் 90 போற்றி
ஓம் வேணுகோ பாலா போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் புருடோத் தமனே போற்றி
ஓம் பொன் புகழ் அருள்வாய் போற்றி
ஓம் மாயா வினோதா போற்றி
ஓம் மனநிலை தருவாய் போற்றி
ஓம் விஜயரா கவனே போற்றி
ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் பதும நாபனே போற்றி
ஓம் பதமலர் தருவாய் போற்றி
ஓம் பார்த்தசா ரதியே போற்றி
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் கரிவரத ராஜா போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தர ராஜா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி

The post பெருமாளை போற்றும் 108 போற்றி appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>