நாம் மழலையாக பெற்றோர் கை பிடித்து பீச் மண்ணில் காலடி பட்டதும் ரீங்காரமிடும் சத்தம் தேங்கா மாங்கா பட்டானி சுண்டல்…இப்பவும் பட்டானியோடு பல வகை சுண்டல்களை பீச்சில் பாரக்கலாம்…. சுண்டலாக மட்டுமல்லாது பானிப்பூரி,பேல்ப்பூரி,பாம்பே மசாலானு எல்லாத்துலேயும் இந்த சுண்டல் பட்டானிதான் யூஸ் பண்றாங்க.. பட்டானி தானியம் வகையைச் சார்ந்தது..தானியங்கள் சத்து நிறைந்தது.இந்த பட்டானி இரும்புச்சத்து குறைபாடு உள்ளவங்களுக்கு மிகவும் நல்லது.. பெண்கள் சம்மந்த பட்ட பிரச்சனைகளை தீர்க்கவல்லது ப்ரோட்டீன்,ஃபைபர் சத்துக்கள் அதிகம் உள்ள தானியம் பட்டானி…மிக குறைவான கொழுப்புச்சத்து உள்ளதால் உடம்பு குறைக்க நினைப்பவர்களுக்கு ஓர் வரம்.. அப்றம் கர்ப்பினி பெண்களுக்கு படிக்க கூடிய இளவயது பிள்ளைங்களுக்கு மிகவும் நல்ல சத்துடையது…பரீட்சை நெருங்க கூடிய இந்த சமயத்தில் தேவையில்லாத நொறுக்குத்தீனிக்கு பதிலா பட்டானி போன்ற கடலை வகைகளை அவிச்சு சாதாரணமாகவோ அல்லது சுண்டல் போட்டு, குழம்பு வச்சு இப்படி எப்படியாவது தயார் பண்ணி குடுப்பது பெற்றோர் கடமை…
தே.பொருட்கள்
வெள்ளை பட்டானி 500 கிராம்
வத்தல் 2 தேங்காய்பூ ஒரு கப்
மஞ்சள்,உப்பு,கடுகு,கறிவேப்பிலை, எண்ணைய், தேவைக்கு..
செய் முறை முதலில் பட்டானியை 8மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு குக்கரில் தண்ணீர்,மஞ்சள்,உப்பு சேர்த்து வேக வைக்கவும்,2 விசிலுக்கு வைத்தால் போதுமானது… பிறகு அடுத்த சட்டியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும்..கடுகு நன்றாக வெடித்ததும் கறிவேப்பிலை,வத்தல் போட்டு தாளிக்கவும் பிறகு தேங்காய்பூ போட்டு கொஞ்சம் வதக்கவும்.பிறகு அவித்து வைத்த கடலையை போட்டு வதக்கி அடுப்பை அணைக்கவும்…கேரட் துருவி போட்டு மாங்காஅரிந்து போட்டு சாப்பிடவும்… “தேங்கா மாங்கா பட்டானி சுண்டல்”
The post தேங்கா, மாங்கா, பட்டானி சுண்டல் appeared first on SwasthikTv.