தீவினைகள் அகன்று வேண்டுவன அனைத்தும் உடன் நிரந்தமாக தொடர்ந்து கிடைக்கும்
பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் இவ்வுலகில் எவரும் உயிரோடு இருக்க இயலாது . பாவத்தின் சம்பளம் துயரம் . நீங்கள் அனுபவிக்கும் கஷ்டம் அனைத்தும் நீங்கள் செய்த பாவத்தின் பலன் மட்டுமே .
இறைவன் பாதம் நாடி பாவத்தை செய்யும் மனதை நிலைபடுத்துவோம் .
உங்களுக்கு வரும் சோதனைகள் எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்
அப்படி சரியாகவில்லை என்றால்
அது கடைசியல்ல . இறைவனின் சோதனைகள் என்றும் உங்களை வளப்படுத்த தானே தவிர அழிப்பதற்கு அல்ல .
நமது கர்மாக்களை குறைக்கும் வழி அதனை அனுபவிப்பதே , கர்மாக்களினால் வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் மன தைரியத்தை ஈசன் பாதம் தொழுதால் தருவான் .
தேனிக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது. சோதனைகளை சந்திக்காவிடில் இறைவனை உணர முடியாது .
*இதுவும்கடந்துபோகும்*
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த
வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
எத்தனை *வெற்றிகள்* ,
எத்தனை *தோல்விகள்* ,
எத்தனை *மகிழ்ச்சிகள்* ,
எத்தனை *துக்கங்கள்* …
எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?
வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?
எத்தனை *நண்பர்கள்* ,
எத்தனை *பகைவர்கள்* ,
எத்தனை *உறவுகள்* நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.
அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
**வெற்றிகள்* கிடைக்கும் போது.,
*”#இதுவும்கடந்துபோகும்“* என்பதை நினைவில் கொள்ளுங்கள்…கர்வம் தலை தூக்காது.
*தோல்விகள் தழுவும் போது..,
*”#இதுவும்கடந்துபோகும்”* என்பதை நினைவில் கொள்ளுங்கள்…சோர்ந்து விட மாட்டீர்கள்.
*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,
*”#இதுவும்கடந்துபோகும்”* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது – அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,
*”#இதுவும்கடந்துபோகும்”* என்பதை நினைவில் கொள்ளுங்கள். – தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.
*நெற்றி சுருங்கும் போதெல்லாம்..,
*”#இதுவும்கடந்துபோகும்”* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.
வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,
அந்தப் *புன்னகை* நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்…
**இறைவனே கதி என்றிருந்தால் தீவினைகள் நமை அண்டாது**
வாழ்க வளமுடன் !
The post இறைவனை முழுமையாக பாதம் பற்றி பணிந்தால் appeared first on SwasthikTv.