Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அஷ்டமியில் பிறந்த கண்ணன்

$
0
0

 கண்ணனின் பிறந்த நாள் எப்படி அஷ்டமியில்? அது குறித்து நெகிழவைக்கும் ஒரு சம்பவம் உண்டு. அஷ்டமி, நவமி என்று இரு திதித் தேவதைகள் இருவருக்கும் மிகுந்த கவலை தங்களை யாருமே நற்காரியங்களுக்காகக் கண்டுகொள்வதில்லை என்பது அவர்களது மனக்குறை. இதை யாரிடம் சொல்லி மீட்சிபெறலாம் என்று சிந்தித்து ஈற்றில் மற்றவர் குறை போக்கும் மஹாவிஷ்ணுவிடமே சரணடைந்தனர். “மஹா பிரபோ எங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள் சுவாமி. அஷ்டமியாகிய என்னையும் நவமியாகிய இவளையும் யாருமே நன்நாளாகக் கண்டுகொள்வதில்லை, சுபகாரியங்களில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இந்த வேதனையை எங்களால் தாங்க முடியவில்லை. இத்துன்பம் போக்கவல்லவர் நீங்களல்லவோ” என்றிறைஞ்சி நின்றனர். மஹா விஷ்ணுவும் “கவலை வேண்டாம் உங்கள் குறைதீர வழி செய்தருள்வேன்” என்றாராம். அதன்படி ஒரு நவமித் திதியிலே ராமவதாரத்தையும் அட்டமித் திதியிலே கிருஷ்ணாவதாரத்தையும் மேற்கொண்டு பரமாத்மா இவ்வுலகம் உய்ய வழி செய்தாராம்.

 அறியாமை மேலீட்டினால் அஷ்டமி, நவமித் திதிகளை ஒதுக்கி வைத்த மக்கள் அத்தினங்களிலே கோகிலாஷ்டமியையும் இராம நவமியையும் மிகக் கோலாகலமாகக் கொண்டாட மட்டும் தவறுவதேயில்லை. இறைவன் முன்னே எல்லோரும் சமமே. இங்கு உயர்வு தாழ்வுக்கு இடமேயில்லையென்ற உயர்ந்த தத்துவத்தை இந் நிகழ்வுகள் சொல்லாமல் சொல்கின்றனவல்லவோ. விஷ்ணு பரமாத்மா பூமித்தாய்க்கு வரமளிக்க நினைத்தபடி ஆவணித் திங்கள் ரோகினி நட்சத்திரத்து அஷ் டமித் திதியில் அவதாரமானார்… அந்தப் புண்ணிய தினமே கோகுலாஷ்டமி என்றும், ஜன்மாஷ் டமி, கிருஷ்ண ஜெயந்தி என்றும் நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். வைணவ சம்பிரதாயத்தினர் இத்திருநாளை கண்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திர நன்நாளை ஸ்ரீஜெயந்தி என்று கொண்டாடுவர். மஹா விஷ்ணுமூர்த்தி யின் அவதாரங்களுள்ளே… கிருஷ்ணாவதாரம் மிகச் சிறந்த அவதாரமாகும்.

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

பொருள் :
தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும், தர்ம வழி நடக்கும் எளியோரைக் காக்கவும் யுகந்தோறும் அவதரிக்கிறேன்
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிக மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ணாவதாரம். மக்கள் சரியாக புரிந்துகொள்ளத் தவறிய அவதாரமும் அது தான். கிருஷ்ணரின் பாத்திரத்தை பற்றி எழுதுவது சாதாரண விஷயம் அல்ல. மிக மிக கடினமான ஒரு பணியும் கூட. அவருடைய அவதாரத்தின் உண்மையான நோக்கத்திற்கும் நமது புரிதலுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது. கேட்டதை வைத்து படித்ததை வைத்து நாமாகவே கற்பனை செய்தவை தான் அதிகம்.

 ஒரு சாதாரண சன்னியாசியின் வாழ்க்கையே இங்கே பல போராட்டங்களுக்கு உரியது என்றால் கடவுளின் வாழ்க்கை இங்கே எப்படி இருந்திருக்கும்? கண்ணன் தன் பால்ய வயதில் செய்த குறும்புகள், இளவயதில் நடத்திய விளையாட்டுக்கள், போர்முனையில் செய்த தந்திரங்கள் இவை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் பொறுமையும் அவர் பட்ட துன்பமும் யாருக்கும் தெரியாது. கபடர்களுக்கும் சூழ்ச்சியாளர்களுக்கும் மத்தியில் அவதரிக்க வேண்டிய நிலை என்பதால், ஸ்ரீவிஷ்ணு தனது மாயா சக்தியால் இந்த அவதாரத்தையே ஒரு நாடகமாக நடத்திக் காட்டினார்.

ஜெய் கிருஷ்ணா … ஓம் சாய் ராம் …..

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #udupikrishnan #srikrishna #kannan

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post அஷ்டமியில் பிறந்த கண்ணன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Latest Images

Trending Articles


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


சித்தன் அருள் - 1613 - அன்புடன் அகத்தியர் - அம்பாஜி சக்தி பீடம்!


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


முகம் காட்டச் சொல்லாதீர்.....


சுஜாதா


அம்பேத்கரியப் பார்ப்பனியம் -2


சித்தன் அருள் - 1907 - அன்புடன் அகத்தியர் - தென்குடித்திட்டை வாக்கு!


என் உறவில் செக்ஸ்



Latest Images